ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம் 61-1224 1. [சபையோர், நம்பிடுவாய் என்ற பாடலை பாடுகையில் சகோதரன் பிரான்ஹாம் சகோதரன் நெவிலோடு பேசுகிறார்—ஆசி.] (…?…நான் இன்று பிற்பகல் என்னால் முடிந்தளவு உம்மை தொலைபேசியில் அழைக்க முயற்சித்தேன், நான் அழைக்க முயற்சித்தபோது, நீர் வீட்டில் இல்லாமலிருந்தீர். ஹே, நீர் ஒரு செய்தியை வைத்திருந்தால், போய் அளியும், நான் காத்திருப்பேன். இப்பொழுது நீர் நிச்சயமாகவே அவ்வாறு கூறுகிறீரா? நீர் பிரசங்கிக்க ஒன்றையும் வைத்திருக்கவில்லையா…?…) [சகோதரன் நெவில், “நாங்கள் இன்றிரவு மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறோம். சகோதரன் பிரான்ஹாம் அவர்கள் நான் செய்தியளிக்கப் போவதாயிருந்தேனா என்று என்னிடத்தில் சற்றுமுன் கேட்டுக்கொண்டிருந்தார்; அவருக்கு என்னைக் காணும் ஒரு வாய்ப்பு இல்லாமலிருந்திருக்கலாம். அவ்வாறிருந்திருப்பின் அவர் என்னிடத்தில் கேட்டும்படியான ஒரு வாய்ப்பே இருந்திருக்காது. ஆமென். அவர் இங்கு இருப்பதும்கூட மிகவும் உயரியதாயிருக்கிறது என்றே நான் கருதினேன் என்று நான் கூறினதற்காக இன்றிரவு நான் மகிழ்வுறுகிறேன். அவர் இங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது, நான் கிறிஸ்துமஸிற்காக பெற்றுள்ள எல்லாவற்றைக்காட்டிலும் மெய்சிலிர்ப்படையச் செய்துள்ளது. ஆகையால் அவர் இன்றிரவு வந்துள்ளபடியால், கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. அவர் இங்கே நிற்பாராயின், அது சரியாயிருக்கும். தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஆனால் அவர் இங்கு இருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இங்கு வந்துள்ளபடியால் கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுகிறார்.—ஆசி.] சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. 2 மாலை வணக்கம், நண்பர்களே. நான்—நான் இன்று பிற்பகல் சகோதரன் நெவில் அவர்களுடைய வீட்டிலே அவரை அழைக்க முயன்றேன் என்று நான் அவரிடத்தில் கூறிக் கொண்டிருந்தேன். ஜீயார்ஜீயாவிலும் சுற்றுலுமிருந்து வந்துள்ள ஜனங்களிடத்தில் நான் இன்று இங்கு இருப்பேன் என்று கடந்த வாரம் எண்ணவேயில்லை என்று கூறினேன், ஏனென்றால் அநேக ஜனங்கள் வந்துள்ளனர். 3 அதே சமயத்தில் கிறிஸ்துமஸ் நேரத்திலே, உங்களுக்குத் தெரியும், சிறு பிள்ளைகளுக்கு, உங்களால் அவர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் கூறமுடியாது. அவர்களுக்கு அப்படியே இது அவர்களுக்கான கிறிஸ்துமஸ் நேரமாயிருக்கிறது. அவர்கள் தங்களுடைய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை நிரப்பும் சிறு உறையை மேலே வெறுமையாய் தொங்க வைக்கமாட்டார்கள், அதில் ஏதாவது இருக்கும். அது நம்முடைய தேசத்திலும்கூட ஒரு பாரம்பரியமாயுள்ளது, அதாவது அவர்கள் பரிசுப்பொருள் நிரப்பும் உறையைத் தொங்கவிட்டு, மற்ற ஏதோ ஒன்றை வைத்திருப்பர். ஏன், நான் ஒரு சிறுபிள்ளையாயிருந்தபோது, நானும் செய்துள்ளேன். அது வேதத்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தாலும்கூட, அது பழகிப்போனதாயிருக்கிறது. அதே சமயத்தில் பிள்ளைகளிடத்தில், அவர்களிடத்தில் மற்ற பிள்ளைகள், “நல்லது, நான் கிறிஸ்துமஸிற்காக இதைப் பெற்றுள்ளேன். நான் இதைப் பெற்றுக் கொண்டேன்” என்று கூறுவதைக் கேட்கிறார்கள். சிறு நபர்கள் நின்று சுற்றும் முற்றும் நோக்கிப் பார்ப்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களால், உங்களால் அவர்களைப் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்ய முடியாது. புரிகிறதா? ஆகையால் கிறிஸ்துமஸ் அப்படியே இங்கேயே இருந்த இடத்திலேயே இருக்கப்போகிறது. ஆம். 4 இது நம்முடைய கர்த்தருடையப் பிறந்த நாள் அல்ல, அவர் பிறந்த நேரமும் அல்ல, இப்பொழுது நீங்கள் உங்களுடைய…பூலோக அமைப்பின்படி நோக்கிப் பார்ப்பீர்களேயானால், யூதேயா ஏறக்குறைய பூமத்தியரேகைக்கு மேலாக இது உள்ளது. ஆகையால் யூதேயாவில் அங்கே மலைகள் இருக்குமென்று, அங்கே பனி இருக்குமென்றும் நாம் கண்டறிகிறோம். என்னே! இங்குள்ளதைக் காட்டிலும் அங்கே பனி அதிகமாயிருக்கும். எனவே மேய்ப்பர்களால் அந்த நேரத்தில் மலையின் மேல் தங்களுடைய ஆடுகளை மேய்த்து காத்துக் கொண்டிருந்திருக்க முடியாது. 5 மற்றொரு காரியம், அவர், அது எல்லா இயற்கைக்கும் மாறுபட்டதாயிருக்கும். புரிகிறதா? ஆட்டுக் குட்டிகள் வசந்த காலத்திலேயே பிறக்கின்றதேயல்லாமல், வருடத்தின் இந்த நேரத்தில் அல்ல. ஆட்டுக்குட்டிகள் இப்பொழுது பிறப்பதில்லை. பெண் செம்மறியாடுகள் இப்பொழுது குட்டிகளை ஈனுகிறதில்லை. அவர் தேவாட்டுக் குட்டியாயிருந்தார், நீங்கள் பாருங்கள். ஆகையால் அவர்கள் ஏப்ரல் மாதத்தின் மத்தியில், ஏப்ரலில் ஏதோ ஒரு நேரத்தில், அதைப்போன்ற ஒரு நேரத்தில் அவர் பிறந்தார் என்று அவர்கள் உரிமைக் கோருகின்றனர். 6 ஆனால் இந்த டிசம்பர் 25-ம் நாள், ஏன் இது பிறந்த நாளாக்கப்பட்டு கொண்டு வருகிறது. இதுவோ சூரிய—தேவனுடைய பிறந்த நாளாகும். பார்த்தீர்களா? ரோமப் பாகால், சூரிய—தேவன். பார்த்தீர்களா? சூரியன் இப்பொழுது சரியாக சுற்றுவது குறுகிய பொழுதேயாகும். 20-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை சூரிய—தேவனுடையப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரோம வட்டரங்கு கூடத்தில் நடைபெறும் வேடிக்கையான விளையாட்டுக் காட்சிகள் நடைபெற்று வந்தன. ஆகையால் அவர்கள், “நல்லது, இப்பொழுது, நாம் சூரிய—தேவன் என்பதற்கு பதிலாக, தேவ குமாரனையும் (The Son of God), சூரிய—தேவனையும் (Sun—God) ஒன்றுபடுத்தி, கிறிஸ்தவர்களையும், அஞ்ஞானிகளையும் ஒன்றுபடுத்துவது பிரீதியாயிருக்கும். எனவே நாம் அதை ஒன்று சேர்த்து, அதை ஒரே பிறந்த நாளாக்கி, அதை 25-ம் தேதியிலேயே ஏற்படுத்திவிடுவோம்” என்றனர். ஆகையால் அது அப்பொழுது முதலாம் ரோம சபையில் இருந்த அஞ்ஞானிகளுக்கும், பெயரளவிலான சபைக்கும் பிரீதியாயிருப்பது போன்றே தென்பட்டது. அப்படியே…இருந்து…அது அவர்களுக்கு சரியாய் இருந்தது. ஆகையால் அவர்கள் கவலைகொள்ளவில்லை. எனவே அவர்கள் சூரிய-தேவனுடைய பிறந்த நாளையும், தேவ குமாரனுடைய பிறந்த நாளையும், இரண்டையும் ஒன்றாக்கினர். 7 இப்பொழுது, வருடத்தில் நீண்ட பொழுது கொண்ட நாள் கிட்டத்தட்ட 2-ம் தேதி அல்லது 22-ம் தேதியாகும், நான் பொருட்படுத்திக் கூறுவது வருடத்தில் நீண்ட இரவு என்பது கிட்டத்தட்ட 21-ம் தேதி அல்லது 22-ம் தேதி, சூரிய மண்டலத்தில், சூரியனானது சுழன்று திரும்பும்போது அவ்வாறிருக்கிறது. இப்பொழுது அவைகள் ஒரு சில விநாடிகள் இல்லை நிமிடங்கள் நீண்டதாய் கடந்து செல்லத் துவங்கும். அப்பொழுது அது சில நேரத்தில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நாம் வருடத்தில் மிக நீண்ட பகல்பொழுதினை உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் கிறிஸ்துமஸ் இங்கேயே இருக்கிற இடத்திலேயே இருக்கப்போகிறது. எனவே நம்மால்-நம்மால் அதற்கு உதவி செய்ய முடியாது. 8 காற்றுக் குழாயில்லா வாகன இரப்பர் சக்கரங்கள் இங்கேயே இருக்கின்ற இடத்திலேயே இருக்கப்போகின்றன். நான் அவைகளை வெறுக்கிறேனே, ஆனால் அவைகளோ — அவைகளோ இங்கு இருக்கின்ற இடத்திலேயே இங்கேயே இருக்கப் போகின்றன. ஹூ—ஹூ. அது உண்மை. 9 ஆடை களைந்துவிட்ட ஸ்திரீகள், அவர்கள் இங்கேயே இருக்கிற இடத்திலேயே இருக்கப்போகிறார்கள். குட்டைக்கால் சட்டையை அணிந்துள்ளவர்கள், அவர்களும் இங்கேயே இருந்த இடத்திலேயே இருக்கப் போகிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் எல்லா நேரத்திலும் ஆடைகளை தொடர்ந்து குறைத்துக் கொண்டேப் போகிறார்கள், ஆகையால் என்னால் அதைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. அது தவறு என்று மட்டுமே நான் கூறுகிறேன். அதனோடு தரித்திருக்கிறேன். அது உண்மை. 10 பாவம், அது இங்கே இருக்கிற இடத்திலேயே இருக்கப்போகிறது. அது இங்கேயே இருக்கப்போகிறது. நாம் அதைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டேயிருக்கப்போகிறோம். எனவே அது அப்படியே இயேசுவானவர் வரும்வரையில் இங்கேயே தரித்திருக்கப்போகிறது. இந்த எல்லாக் காரியங்களுமே இங்கேயே தரித்திருக்கப்போகிறது. இப்பொழுது நான்…நம்புகிறதில்லை… 11 நான் இதைத் தெளிவுபடுத்தட்டும். இயேசுவானவர் அவருடையப் பிறந்த நாளை நீங்கள் எந்த நாளில், அதை 25-ம் தேதியா, அல்லது அதை ஏப்ரல் மாதத்திலா, மே மாதத்திலா, ஜூன் மாதத்திலா, ஜூலை மாதத்திலா, அது எப்பொழுதாயிருந்தாலும் நீங்கள் எந்த நாளில் ஆராதித்தீர்கள் என்று கவலைப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். எனவே நீங்கள் ஆராதிப்பது, நீங்கள் அவரை எந்த நாளின் பேரிலும் ஆராதிக்கலாம். 12 ஆனால் அதுவோ இந்தவிதமாயுள்ளது. அவர்கள் கிறிஸ்துமஸ் என்பதிலிருந்த புனிதத்தன்மையை எடுத்துவிட்டு, ஒரு கிறிஸ்துமஸாக, ஓர் ஆராதனை தினமாக்காமல், ஒரு கொண்டாட்டமாக்கியிருக்கிறார்கள். புரிகின்றதா? நாம்…இல்லை…நீங்களோ, “நாங்கள் கிறிஸ்துமஸை கொண்டாடப் போகிறோம்” என்று ஜனங்கள் கூறுவதைக் கேட்கிறீர்கள். அது தவறு. நாம் ஒருபோதும் கிறிஸ்துமஸைக் கொண்டாடவேக் கூடாது. கிறிஸ்துமஸ் ஒரு கொண்டாட்டமாயிராமல், ஓர் ஆராதனை தினமாய் இருக்கிறது. 13 நாம் லிங்கன் அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். நாம் வாஷிங்டன் அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். நீங்கள் தென்பகுதியின் மையப்பகுதியில் இருந்திருப்பீர்களேயாயின், அப்பொழுது நீங்கள் லீ அவர்களின் பிறந்த நாளை அல்லது—இல்லை ஜேக்ஸன் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பீர்கள். அவர்களுடையப் பிறந்த நாள் ஒரு கொண்டாட்டமாயிருக்கிறது. 14 ஆனால் கிறிஸ்து பிறந்த நாளோ இன்றிரவு இவ்வாறு இருப்பதற்குப் பதிலாக அது ஓர் அர்பணிப்பின் நாளாய், ஆராதனையின் நாளாய் இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஜனங்களோ சபையில் தங்களுடைய முழங்காலில் நின்று ஜெபித்துக்கொண்டும், உண்மையான கிறிஸ்துமஸ் வெகுமதிக்காகக் தேவனுக்கு நன்றி கூறிக்கொண்டுமிருக்க வேண்டும். 15 உயரமான குதிங்கால் அமைப்பு கொண்ட காலணிகள், வண்ணந்தீட்டப்பட்ட முகங்கள், நீண்ட மேற்சட்டையில் வால்பகுதிப் போன்ற வெட்டப்பட்ட ஆடைகள் மற்றும் பிடியற்ற மதுப்பானக் கிண்ணங்கள் ஒருவருக்கொருவர் இனாமாக வழங்கப்படும் இலட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புகொண்ட மதுபானங்கள், சுருட்டுகள், சிகரெட்டுகள் இன்றிரவு விநியோகிக்கப்படும். ஆயிரக்கணக்கான ஏழைகள், சிறுவர்கள், பசியுற்ற பிள்ளைகள் சாப்பிட ஒருவாய் ஆகாரமின்றி படுத்திருக்கும்போது அல்லது தங்களுடையத் தலைசாய்க்க ஒரு ஸ்தலமில்லாதிருக்கின்றனர். 16 நமக்குத் தேவை என்னவென்றால் ஓ, அது எல்லாம் சரிதான். அது, இதுவோ சரியல்லவே, ஆனால் நம்மால் அதை நிறுத்த முடியாது. அது இங்கேயே இருக்கப்போகிறது. நாம், நாம் சரியாக அதேவிதமாகவே கிறிஸ்துமஸைக் கடைபிடித்துக் கொண்டிருக்கப் போகிறோம். 17 கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை, கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவிற்காக வழிபாட்டுப் பூசை (mass) என்ற வார்த்தையிலிருந்தே வருகிறது. கிறிஸ்துவினுடைய வழிபாட்டு பூசை, கி—றி—ஸ்—து—ம—ஸ். புரிகின்றதா? கிறிஸ்துவினுடைய வழிபாட்டு பூசை, அது ஒரு கத்தோலிக்கப் பாரம்பரியமாயிருக்கிறது. 18 என்னுடைய சிறுமி, என்னுடைய குமாரத்திகளில் ஒருத்தி, என்னால் இனிமேல் இங்கு அவளைப் பெயரிட்டு அழைக்க முடியாது, பெக்கி, அன்றொரு நாள் கற்பனைக் கதையின் பேரிலான மறைஞானியைப் பற்றிய ஒரு கதை எழுத வேண்டியவளாயிருந்தாள். அப்பொழுது நானோ, “இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறிஸ்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வமான சாண்டா—கிளாஸ் (Santa Claus) என்பதைக் குறித்து எழுது” என்றேன். அதுதான் இது. சாண்டா கிளாஸ் கிறிஸ்துவினுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டுள்ளது. சாண்டா கிளாஸ், அப்படிப்பட்டதான ஒரு நபர் ஒருபோதும் இருந்ததே இல்லை. புரிகிறதா? அது முற்றிலும் ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாயிருக்கிறது. பிராட்டெஸ்டென்டுகளோடு அதற்கு எந்தக் காரியமும் இல்லை அல்லது அதைக் குறித்து எதுவுமே இல்லை, பாருங்கள், அல்லது கிறிஸ்துமஸ் அல்லது இது கிறிஸ்துவின் பிறப்பு என்பதோ கிடையவேக் கிடையாது. ஆனால் சாண்டா கிளாஸ் என்பதோ இங்கேயே இருக்கப்போகிறது. 19 ஆனால் என்றோ ஒரு நாள் இயேசு தரித்திருக்கும்படி வருவார். அந்த ஒருவருக்காகவே நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். 20 இப்பொழுது, சகோதரன் நெவில் இன்றிரவு இந்தப் பிரசங்க பீடத்தை எடுத்துக்கொள்ளும்படி முன்னுரிமையளிக்க நான் நிச்சயம் விரும்பினேன். ஏனென்றால், நான் இன்றைக்கு வெளியேத் தரித்திருப்பேன் என்றே நான் ஜனங்களிடம் கூறினேன். நான் வந்து எந்தக் காரியத்தையாவது கூறினால், அப்பொழுது நான் அதை ஒரு ஒலி நாடாவில் பதிவு செய்வேன். அவர்கள்…என்று நான் நம்புகிறேன். நீங்கள் ஒரு ஒலிப்பதிவு கருவியை வைத்து பதிவு செய்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் பதிவு செய்கிறீர்களா [யாரோ ஒருவர், “ஆம்” என்கிறார்—ஆசி.] ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்யுங்கள். கூட்டத்தின் நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எந்தக் காரியத்தையாகிலும் பேசியிருந்தால், அப்பொழுது அவர்கள் அதைக் கேட்கலாம். அவர்கள் அதைக் கேட்க முடியும். புரிகிறதா? 21 நான் இங்கு ஒரு சிறு பாடப்பொருளுக்காக சில வேதவாக்கியங்களையும் இன்னும் சிலவற்றையும் எழுதி வைத்துள்ளேன். எனக்குத் தெரியாது, கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால் வழக்கமாகவே அதைக் குறித்தக் காரியம், இந்த ஞாயிறு இரவுகளைப் பற்றியதாயுள்ளது, சபையோர் ஏறத்தாழ ஒன்பது அல்லது ஒன்பது பத்திற்கே இங்கே வெளியே இருக்கிறார்கள், எனவே நீங்கள் மணி ஒன்றுக்கு முன்பாகவே வெளியே செல்வது நல்லதாய் இருக்கும். 22 ஆயினும் ஓர் இரவு காத்திருப்புக் கூட்டம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். ஹூ—ஹூ. [சகோதரன் நெவில், “அது சரி.” என்கிறார்.—ஆசி] என்ன? நள்ளிரவு ஆராதனையைக் குறித்த ஏதோ ஒன்றா? [“இல்லை, இங்கே, இன்றிரவல்ல”] இல்லை, இன்றிரவு அல்ல, இல்லை…என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அதை, நான் அதை மனதில் கலந்து குழப்பிக் கொண்டிருந்திருக்கலாம் என்றே அவர்—அவர் எண்ணிக் கொண்டார். இதுவோ புதிய வருடத்தினுடைய இரவைக் குறித்தாயிருக்கிறது. 23 நல்லது, நாம் ஒரு மகத்தான நேரத்தை, புதிய வருடத்தினுடைய இரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில்தான் நாம் ஒவ்வொருவரும், எல்லா சகோதர்களுமே உள்ளே வந்து, நாம் புதிய வருடத்தினுடைய இரவில் ஒருவரோடு ஒருவர் மகத்தான ஐக்கியம் கொள்கிறோம். 24 ஆனால் இப்பொழுது நான் அதைக் குறித்து உங்களை அப்படியே நையாண்டி செய்து கொண்டிருந்தேன். அது ஒலிநாடாவில் பதிவாகவில்லை என்று நான் நம்புகிறேன். 25 உதாரணமாக அன்றொரு நாள் ஒரு ஒலிநாடா பதிவில், நான் இந்தப் பொருளை ஏறைக்குறைய பலமுறை தட்டிவிட்டபடியால், கிறிஸ்தவமார்க்கமும் அதற்கெதிரான அஞ்ஞானக் கொள்கையும் என்பதன் பேரிலான நான் வைத்திருந்த அந்த ஒலிநாடாவே பாழடைந்துவிட்டது. ஒலி நாடாக்கள் பாழடைந்துவிட்டன. ஆகையால் ஒலிநாடாக்களை உள்ளே வந்து பதிவு செய்யப் போவதாயிருந்தால், அவைகளைப் பதிவு செய்பவர்கள் எப்போதுமே வாசலண்டை வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். கதவைத் திறவுங்கள், அப்பொழுது அது இப்பொழுது பதிவாகிறது என்பதை நான் அறிந்துகொள்வேன். அது எந்தவிதமாக மாற்றிப் போடப்படுகிறது என்றும், அது இயங்கிக் கொண்டிருக்கிறதா என்றும் நான் காண்பேன். சரி. சரி அது அருமையாயிருக்கும். நான் அதில் இந்த மற்றொரு முனை முடியும் வரையில் பேசி அதை நிரப்பப்போகிறேன். நான் வழக்கமாக அவ்வாறு செய்வதில்லை. 26 நல்லது, நீங்கள் எனக்கு கிறிஸ்துமஸிற்காக அளித்த அருமையான வஸ்துக்களுக்காக நான் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தச் சபைக்கும், இதனுடைய அங்கத்தினர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். சிறிது நேரத்திற்கு முன்னர் என் மகன் உள்ளே வந்து எனக்கு ஒரு பெரிய பெட்டியைக் கொடுத்தான். அப்பொழுது நான்…என்னுடைய படிக்கும் அறையில் உள்ளே படித்துக்கொண்டிருந்தேன். நான் அதைத் திறந்தபோது, இந்தக் கூடாரத்திலிருந்து எனக்கு அளித்திருந்த ஒரு புதிய ஒரே நிறமான சூட் ஆடைகளைக் கண்டேன். ஜனங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பொருட்களை அங்கிருந்து அனுப்பியிருக்கின்றனர். இன்றிரவு ஜோயி உள்ளே வந்து அவனுடையதைப் பிரித்துப் பார்க்கும் வரையிலும் நானும் அதைப் பார்க்காதிருந்தேன். ஆகையால் நான் அதை நிச்சயமாகவேப் பாராட்டுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் வெகுமதிகளை அளிக்கும்படிக்கு விரும்புகிறேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது. அது எப்படி என்று நீங்கள் அறிவீர்கள். உங்களாலும் அதைச் செய்ய முடியாது. அவ்வளவுதான். நீங்கள்—நீங்கள் ஒன்றை அளித்தால், அது அந்தவிதமான மரியாதையையேக் காண்பிக்கிறது. உங்களால் அந்தவிதமாகச் செய்ய முடியாது. ஒரு ஊழியக்காரன் அதைச் செய்ய முடியாது. 27 இந்தக் காலை சகோதரன் நெவில் அவர்களுக்கு சட்டை மேல் அணியும் ஒரு புதிய கோட் அளிக்கப்பட்டது என்று நான் அறிந்து கொண்டேன். என் சகோதரருக்காக உங்கள் யாவருக்கும் மிகுந்த நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 28 அதற்கு ஒரு சிறிய இரகசியம் உண்டு, அதை பில்லிபாலும், நானும் அறிந்துள்ளோம். நான் எந்தக் காரியத்தைக் குறித்தும், எப்படியும் எந்தக் காரியத்தைக் குறித்தும் புரிந்துகொள்ள மிகவும் மந்தமுள்ளவனாயிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பில்லி அன்றொரு நாள் என்னிடத்தில் கூறினான். அவன், “அப்பா, நான் சிறப்பு வணிகவிற்பனைக் கூடத்தில் இருந்தேன் என்றும், நான் யாரை அங்கு சந்தித்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டான். அவன் தன்னுடைய குரலில் சற்று நடுக்கங் கொண்டவனாயிருந்தான். மேலும் அவன், “சகோதரன் நெவில்” என்றுக் கூறி, “அவர் சட்டைக்கு மேலே அணிந்துகொள்ளும் ஒரு கோட்டை வைத்திருந்தார், அது பயங்கரமான மட்டுமீறின அளவு கொண்டதாய் காணப்பட்டது” என்றும் கூறினான். அப்பொழுது நான், “என்னுடையது அவருக்குப் பொருந்துமா?” என்றுக் கேட்டேன். பார்த்தீர்களா? 29 அதற்கு அவனோ, “இல்லை. அவர் உங்களைக் காட்டிலும் மிகவும் பெரிய உருவங்கொண்ட ஒரு மனிதனாய் இருக்கிறாரே” என்று கூறினான். எனவே நான், “ஓ, நான் போய் அவருக்கு ஒன்றை வாங்கப் போகிறேன்” என்று கூறினான். 30 ஆகவே அப்பொழுது நான் இங்கே சபையிலிருந்து வந்த என்னுடைய காசோலையை எடுத்து, அவர் செய்கிறது போலவே செய்ய முற்பட்டேன். அந்த நேரத்தில் பில்லி ஒரு மகத்தான பெரிய பயனுள்ள சொல்லோடும், அவனுடைய முகத்தில் புன்முறுவலோடும் ஓடி வந்து, “அப்பா, சபையானது அவருக்கும் ஒன்றை அளிக்கப்போகிறது” என்றுக் கூறினான். நல்லது, அப்பொழுது சபையானது நிச்சயமாகவே என்னைக் காட்டிலும் சற்று மேலான ஒன்றையே அநேகமாக அவருக்கு அளிக்கக் கூடும் என்று நான் அறிந்து கொண்டேன். ஆகையால் நான், “அது அற்புதமாயுள்ளது, ஆகையால் நாம் யாவருமே பெற்றுக்கொள்ள முடிந்ததே” என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் நெவில் அவர்களுக்கு தேவைபடுகிறதாயுள்ள அந்தக் கோட்டோ, ஓர் உண்மையான அருமையான இடத்திற்கே வருகிறது என்று நாங்கள் அறிந்து கொண்டோம். 31 நான் அதைக் குறித்த ஏதோ ஒரு சிறு காரியத்தை உங்களுக்குக் கூற விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அதை சரித்திரத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். கடந்த சில வாரங்களாக, மாதங்களாக இல்லை இரண்டு மாதங்களாக வேதாகம சரித்திரத்தை எடுத்துக்கொண்டு வாசித்து வருகிறேன். நான் ஒருமுறை…வாசித்தேன். 32 என்னுடைய முதல் புத்தகம் பழைய ஏற்பாடாயிருந்தது, அது பழைய ஏற்பாட்டில் தேவன் என்னவாயிருந்தார் என்பதாகும். அதன்பின்னர் நான் புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொண்டு, தேவன் என்னவாயிருந்தார் என்றும், அதை இன்றைக்கு ஒப்பிடும்படிக்கு பார்க்கிறேன், ஏனென்றால் அவர் மாறாதவராய் தரித்திருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். புரிகிறதா? 33 அதன் பின்னர் நான் படிக்காமல் விட்டுவிட்ட சபையின் ஒரு பாகம் உண்டு. அது ஒரு கடைசி அப்போஸ்தலரின் மரண நேரத்திற்கும் இருளின் காலத்திற்குள் வருவதற்கும் இடையேயான பகுதியாய், கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும்போதான பாகமாயிருந்தது. அப்பொழுது அவர்கள் சபையிலிருந்து எல்லாவற்றையுமே, அற்புதங்களையும், எல்லாத் தெய்வீகத்தையுமே இழந்துவிட்டிருந்தனர். எனவே அந்த நேரத்தில் என்ன சம்பவித்தது என்பதை நான் அறிந்து கொள்ள விரும்பி, நான் மிகப் பண்டையச் சரித்திரங்கள் சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டு படித்துவந்தேன். அவை இஸ்லாப் என்பவருடைய இரு பாபிலோன்கள், பிராட்பென்ட் என்பவருடைய யாத்திரீக சபை, பாக்ஸ் அவர்களின் இரத்த சாட்சிகளின் புத்தகம், நிசாயா பிதாக்களுக்குப் பின்னர், நிசாயா ஆலோசனை, நிசாயா ஆலோசனைக்கு முன்னர் மற்றும் அந்த நேரங்களில் மற்ற மகத்தான சரித்திரக்காரர்கள் எழுதியுள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அந்த விலையேறப்பெற்ற மனிதர்களின் எல்லா ஜீவியங்களையுங் குறித்துப் படித்துப் பார்த்தேன். நான் அவைகளை வாசிக்கும்போது, என்னால் லாங்பெலோ என்பவருடைய வாழ்க்கையின் ஒரு சங்கீதத்தை கேட்க முடிந்தது போன்றே தென்படுகிறது. நம்முடைய வாழ்க்கைகளை நாம் விழுமியதாக்க முடியும், மேலும், மாள்வுற்று, நமது அடிச்சுவடுகளைப் பின்னே கால மணல்களின் மேல் விட்டுச் செல்கிறோம் என்பதை மாமனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன. 34 இந்த மாறாத சுவிசேஷத்தை அங்கே முன்பிருந்த அந்தப் புருஷரும், ஸ்திரீகளும் பாராமரிக்கும்படிக்கு முழுமையாக அதனோடு சென்றதை நான் கண்டேனே! அவர்கள் இந்த மாறாத சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பழைய ஏற்பாட்டில் சம்பவித்த அதேக் காரியம் புதிய ஏற்பாட்டிலும் அப்பொழுது சரியாக அதே விதமாகவே இருந்தது. ஆகையால் அதுவே இதற்கு ஒன்று, இரண்டு, மூன்று சாட்சிகளை அளிக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் உறுதிபடுத்தப்படுகிறது. பண்டையத் தீர்க்கதரிசிகளோடு தொடர்பு கொண்ட மாறாத தேவனே, அப்போஸ்தலர்களோடு தொடர்பு கொண்டார், நிசாயாவிற்கு முன்பிருந்த சகோதரர்களோடும் தொடர்பு கொண்டார். 35 இன்றைக்கு அவர் இங்கிருந்து கொண்டு தம்முடைய ஜனங்களோடு அதேவிதமாகவே, அதே அடையாளங்களோடு, அதே அதிசயங்களோடு, அதே சுவிசேஷத்தோடு, அதே வல்லமையோடு, அதே தேவனாய், ஒவ்வொரு காரியத்தோடும் தொடர்பு கொள்கிறார். இது சத்தியமாயிருக்கிறது என்பதற்கு, மூன்று என்பது நமக்கு ஒரு சாட்சியாயுள்ளது. இது சத்தியமாயிருக்கிறது. தேவன் மூன்று ஏற்பாடுகளில் இதை அளித்துவிட்டார். புரிகிறதா? அந்தச் சரித்திரம்… 36 வேதாகமம் தேவன் என்னவாயிருந்தார் என்பதைக் குறித்த சரித்திரமாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் சரித்திரம் அவ்வண்ணமேயாகும். 37 புதிய ஏற்பாடு—புதிய ஏற்பாட்டின் சரித்திரமாயிருக்கிறது. 38 நிசாயா ஆலோசனை மற்றும் பிதாக்கள், நிசாயா ஆலோசனைக்குப் பின்னர் என்பது அதன் பின்னரான சபையின் சரித்திரமாயிருக்கிறது. 39 அது இருந்தவிதமாகவே இப்பொழுது சரித்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சரித்திரம் ஒருபோதும் எழுதப்படமாட்டாது. இல்லை. இதுவோ இப்பொழுது வருகைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. 40 தேவனே இந்நாட்களில் உள்ள ஒரு மனிதனுக்கு உதவி புரியும். ஜனங்கள் மானிட கனத்தைத் தேட முயற்சிக்கின்றனர், மனுஷர் தங்களையேப் புகழ் வாய்ந்தவர்களாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர் அல்லது மானிட வர்கங்களுக்கு மத்தியில் புகழ்வாய்ந்தவர்களாக்கிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். அந்த மானிட வர்கமானது, அது அழிகிறபோது, அதனோடு யாவுமே அழிகிறது என்று நீங்கள் அறியவில்லையா? “ஆனால் பரலோகப் பொக்கிஷங்களை ஆதாயப்படுத்தும்படிக்குத் தேடுங்கள். அவைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாதே.” 41 தேவனுடைய ஐஸ்வரியமான ஆசீர்வாதங்கள் உங்கள் எல்லோர் மேலும் தங்கியிருப்பதாக. என்னால் கூடுமானவரை ஞாயிற்றுக் கிழமை எங்காவது சபைக்குச் செல்வது வழக்கமாகவே என்னுடையப் பழக்கமாயிருக்கிறது என்று இன்றிரவு நான் அவர்களிடம் கூறினேன். 42 நான் இன்று இக்காலையில் சகோதரன் நெவில் அவர்களுடையச் செய்தியை உண்மையாகவே மிக அவசியமாய் வந்து கேட்க விரும்பினேன். ஆனால் அந்த வாக்குறுதி செய்த பிறகு, அதன்பின்னர் நான் அதை முறிக்க விரும்பவில்லை. 43 எனவே அதன்பின்னர் நான் வானொலிகளில் கேட்க முயன்றேன். என்னால் கேட்க முடிந்ததெல்லாம், “உடனடியாக இந்த ஆராதனைக்குப் பிறகு நாம் வெளியே மதிய உணவு உண்ணும் அறையில் யாவருமாய் சந்தித்து, ஒன்று சேர்ந்து காப்பியை அருந்துவோம். நாம் எல்லாருமாக…” என்பதாயிருந்தது. சபை என்னத்திற்காக வந்துள்ளது? அது ஒரு விடுதியாயிருக்கிறது. நீங்கள் ஏன் அதை சபை என்பதற்குப் பதிலாக “விடுதி” என்று கூறக்கூடாது. சபை ஒரு காப்பி அருந்தும் சந்திப்போ அல்லது மதிய விருந்துகளோ அல்லது இரவு விருந்துகளோ, அதைப் போன்ற காரியங்களையோ கொண்டதல்ல. 44 நாம் கர்த்தரோடு கலந்து உரையாடுகிறோம். சபை, அங்குதான் நாம் அவரோடு உரையாடுகிறோம். 45 நான் மனைவியினிடத்தில், “தேனே, நான்—நானே மிகவும் குற்றங்காண்கிறவனாகிக் கொண்டே போகிறேன். நான் கூடாரத்திற்கு செல்லவோ அல்லது பிரசங்கபீடத்தில் பிரவேசிக்கவோ வெறுக்கிறேன்” என்றேன். ஓ, எனக்கு வயதாக இன்னும் நான் மோசமாவதுபோல் காணப்படுகிறது. நான்—நான்—நான் அந்த விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை—நான் விரும்பவில்லை. ஆனால் அந்தவிதமாக இருக்க வேண்டுமென்று எனக்கு உட்புறத்தில் இருக்கிற ஏதோ ஒன்று என்னை இயக்குவிக்கிறது. 46 அப்பொழுது நான், “நான் என்னுடையச் சிந்தையை இழந்து கொண்டிருக்கிறேனா? ஏன் என்னால் ஏனைய கூட்டத்தினரோடு செல்ல முடியவில்லை? ஏன் என்னால் மற்ற சகோதரர்களைப் போல செல்ல முடியவில்லை? ஏன் என்னால் ஒரு ஸ்தாபனத்தை நாடிச் சென்று, அவர்கள் செய்கிறதுபோல அதைக் கட்டி எழுப்ப முடியவில்லை. இல்லையென்றால் ஏன் என்னால் வெளியே போய், அதைப் போன்ற காரியங்களில் ஜனங்களிடத்திலே தவறென்று அடித்துரைக்காமல் விட்டுவிட முடியவில்லை? ஏன் என்னால் அதைச் செய்ய முடியவில்லை?” என்று கேட்டேன். அப்பொழுது நானே, “என்னுடைய சிந்தையை நான் இழந்துவிட்டேனா?” என்று எண்ணிப் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டேன். 47 அதன்பின்னர் நான் வார்த்தைக்குத் திரும்பி வருகிறேன். அதோ அது உள்ளது. நான் அந்த வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும். 48 நான், “எனக்கு, இது தேவனுடைய வார்த்தைக்கானதாய் இல்லாமலிருந்தால், தேவன் ஒருவர் இருந்தார் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே நான் தொலைவில் உள்ள கனடாவில், தூரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வருடத்தில் ஒருமுறை கூட மானிடவர்கத்தை காணக்கூடாத மலைகளில் நான் ஒரு சிறு குடில் அமைத்துக்கொள்ளலாம். அப்பொழுது நான் சிற்றலை ஓடையில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பேன். ஓநாய் இருக்கும் மலையின் உச்சியில் அவர் கூக்குரலிடும் போது அவருக்குச் செவிக் கொடுப்பேன். அவர் மகத்தான பெரிய பசுமை மாறா ஊசியிலை மரங்களினூடாக மெல்லப் பேசும்போது நான் அவருக்குச் செவிக் கொடுப்பேன். ஆற்றுக் கண்ணாடியில் அவருடைய அழகான முகத்தைக் காண்பேன், அது பனி மூடிய முகட்டினையுடைய மலைகளில் பிரதிபலிக்கும். ஏன், அங்கே தூரத்தில் நான் என் ஜீவியத்தின் ஒவ்வொரு நாளும் தேவனை ஆராதிப்பேன். நான் காப்பி விருந்துகளையும், தேனீர் விருந்துகளையும், இன்றைக்கு நாம் பெற்றுள்ள இந்த எல்லாவிதமான காரியத்தையும், சபை என்று பெயரளவில் அழைக்கப்படுவதையும், கோட்பாடுகளையும், கற்பனைக் கதைகளையும், பழங்கட்டுக் கதைகளையும், சுவிசேஷத்தின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு காரியத்தையும் கேட்க முடிந்ததைக் காட்டிலும் அங்கே தொலைவிலே தேவனைக் குறித்த உண்மையை இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்வேன் என்பதை அறிவேன்” என்று கூறிக்கொண்டேன். 49 நான் இன்னும் துவங்காதிருப்பதால், நான் சில வேதவாக்கியங்களை வாசிப்பது மேலானதாயிருக்கும். இப்பொழுது நாம் வாசிப்பதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், அதை எழுதினவரிடத்தில் நாம் பேசுவோமாக. 50 இன்றிரவு ஒரு வேண்டுகோளை உடைய யாவரும், இந்த கிறிஸ்துமஸ் தின முந்தின இரவில் இதைப் போன்ற ஒரு காரியத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றிருப்பவர்கள், அதாவது, “ஓ கர்த்தாவே, நான் கிறிஸ்துவிற்காக என்னுடைய இருதயத்தில் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நான் இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது இன்னும் சற்று நெருங்கி வர விரும்புகிறேன். நான் ஒரு தொழுவத்திலுள்ள ஒரு முன்னணைக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் என்னுடைய இருதயத்தை குழந்தை கிறிஸ்துவிற்கான ஒரு முன்னணையில் அல்ல, ஆனால் தேவனாயிருக்கிற கிறிஸ்துவுக்கு, இம்மானுவேலுக்கே ஏறெடுத்துப் படைக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். உங்களுடைய உயர்த்தப்பட்ட கரத்தினால் கிறிஸ்துவண்டை அதைத் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா? கர்த்தர் உங்களுடைய வேண்டுகோளை அருளுவார். 51 பரலோகப் பிதாவே, நாங்கள் இப்பொழுது ஜெபவீடு என்றழைக்கப்படுகின்ற வீட்டில் கூட்டப்பட்டிருக்கிறோம். இந்த இடத்தில் நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் மகத்தான எல்லா கிரியைகளுக்காகவும், அவருடைய வார்த்தையைப் போதிப்பதற்காகவும், அவர் வார்த்தையாயிருக்கிறார் என்று விசுவாசித்து அவரை ஆராதிக்கவுமே ஒன்று கூடி வந்திருக்கிறோம். நாங்கள் இன்றிரவு ஜீவனுள்ள ஜனங்களுக்கு ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வருவதற்கு, புதிய சிருஷ்டிகளாய் மாறி கிறிஸ்து இயேசுவுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வருவதற்கு எங்களுக்கு முன்பாக வைத்திருக்கிற வாய்ப்புகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாயிராமலிருக்கிறவர்களுக்கு நாங்கள் உண்மைகளை அளிக்கும்படி பெற்றுள்ள இத்தருணத்தில், அதாவது அவர்கள் இன்றிரவே கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாகுவார்களாக. இந்த ஜனங்கள் ஒவ்வொருக்கும் அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையைத் தந்தருளும். 52 அவர்கள் இதற்கு முன்பு இந்த மகத்தான அண்டசராசர கத்தோலிக்க சபைக்களுள்ளாக வந்திராவிடில்; இந்த கத்தோலிக்கம், இது “உலகளாவிய” அப்போஸ்தல, மீண்டும் பிறந்த ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களாய் இருக்கிறபடியால் அவர்கள் இன்றிரவே வருவார்களாக. இதை அருளும் கர்த்தாவே. ஒவ்வொரு நபரும் அதனுடைய அங்கத்தினர்களாவார்களாக. ஏனென்றால் அது சரீரமாயிருக்கிறதேயல்லாமல் ஒரு கட்டிடமாயிருக்கவில்லை, ஆனால் சரீரமாய், கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கிறது. நாங்கள் இந்த சரீரத்தின் அங்கத்தினர்களாயிருக்கிறோம். இதை அருளும் கர்த்தாவே. 53 இன்றிரவு கிறிஸ்துவினிடத்திலிருந்து மகத்தான வரங்கள் இந்த ஜனங்கள் மீது பொழியப்படுவதாக, அது இந்தச் சரீரத்திற்கு சொந்தமானதாயிருக்கிறதே. பூலோக வாசிகளாகிய நாங்கள் எங்களுடைய அன்பின் மதிப்புயர்வில் ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்ளக் கூடியது போன்றதான கிறிஸ்துமஸ் வெகுமதிகளை உள்ளே வைத்திருப்பதோடு முத்திரையிடப்பட்டுள்ள ஒரு பொட்டலம் அல்ல. ஆனால் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்க, மானிட ஆத்துமாவுக்குள் வருகிற அந்தப் பரிசுத்த ஆவியாய் அது இருப்பதாக. பிதாவே, அவர்கள் எல்லோரையும் ஒருமித்து ஆசீர்வதியும். 54 இன்றிரவு எங்களுக்குத் தெரிந்தமட்டில் ஆரோக்கியமாயும், மகிழ்ச்சியாயும், எங்களுடையத் தலைக்கு மேலே உள்ள ஒரு கூரையில் நல்ல இதமான உஷ்ணமிருக்கையில், உலகத்தைச் சுற்றிலுமுள்ள ஆயிரக்கணக்கானோர் செல்வதற்கு இடமில்லாதிருக்கிறதைக் குறித்து நினைத்துப் பார்க்கிறோம். பரலோகப் பிதாவே, எங்களண்டை இரக்கமாயிரும், இந்த விண்ணப்பத்தை அருளும். 55 இப்பொழுது வார்த்தையானது புறப்பட்டுச் செல்லுகையில், நீர் அதை ஆசீர்வதிக்க வேண்டும் என்றே இன்றிரவு நாங்கள் வேண்டுக்கொள்கிறோம். 56 எங்களுடையப் போதகரை ஆசீர்வதியும். தர்மக்கர்த்தாக்களையும், சபையின் கண்காணிகளையும், மீண்டும் பிறந்து சரீரத்தின் அங்கத்தில் அவதியுறுகின்ற ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 57 நான் பேசத்துவங்கின ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பரிசுத்தவான்களைக் குறித்து வாசித்தத்தைக் கூறினேன். பரிசுத்த மார்ட்டின் ஒரு குளிரான இரவில் வந்தபோது, அவர் ஒரு ஏழையான வயோதிக மனிதன் வாசலண்டையிலே விரைத்துப்போய் படுத்துக்கிடந்ததைக் கண்டார். அப்பொழுது அந்த வயோதிக மனிதனுக்கு ஏதோ ஒருவிதமான மேலங்கியை அளிக்க முடிந்த ஜனங்கள் அங்கு கடந்து செல்வதைக் கண்டார். ஆனால் அவர்களோ அதைச் செய்யவில்லை. எனவே அதைச் செய்வது தன்னுடையக் கடமையாயிருந்தது என்பதை அப்பொழுது அவர் அறிந்து கொண்டார், அதே சமயத்தில் அவருடையத் தகப்பனும், தாயும் இருவருமே அஞ்ஞானிகளாயிருந்தனர். ஆனால் இவர் ஓர் இராணுவ வீரனாயிருந்தார். எனவே அவர் தன்னுடைய மேலங்கியை எடுத்து அதைத் தன்னுடைய பட்டயத்தால் இரண்டாகத் துண்டித்து, அதை அந்த வயோதிக நபரின் மீது சுற்றிவிட்டு, பின்னர் போய்விட்டார். ஜனங்களோ அவரைப் பார்த்து பரிகசித்தனர், அவரை கேவலமாக இகழ்ந்துரைத்தனர். மேலும், “ஒரு விந்தையாய் காணப்படும் இராணுவ வீரரே! என்னே ஒரு மதவெறியர்!” என்றெல்லாம் கூறினர். 58 ஆனால் அன்றிரவு அவர் தங்கியிருந்த போர்வீரர்களின் குடியிருப்பு இடத்திலிருந்து எழுப்பப்பட்டு, அவர் ஒரு தரிசனத்திற்குள்ளானர். அப்பொழுது அவர் இருந்த ஓர் அறையில், அங்கே இயேசுவானவரையும், ஒரு கூட்ட தூதர்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டிருப்பதையும் அவர் கண்டார். அப்பொழுது இயேசு இந்த மேலங்கியை, இந்தத் துண்டு வஸ்திரத்தினால் தன்னைச் சுற்றியிருந்தார். அவர் தூதர்களிடத்தில், “நான் இதை எங்கேப் பெற்றுக்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றுக் கேட்டார். அதற்கு அவர்கள், “என் ஆண்டவரே, தெரியாதே” என்றனர். அப்பொழுது அவர், “மார்ட்டின் இதை எனக்குச் சுற்றினான்” என்றார். 59 ஆகையால் சகோதரன் மார்ட்டின் அப்பொழுது அது ஊழியத்திற்கான அவருடைய அழைப்பாய் இருந்தது என்பதை அறிந்துகொண்டார். ஏனென்றால் அவர் அந்த வயோதிக மனிதனை அந்த வஸ்திரத்தில் சுற்றியபோது, இயேசு அந்த வயோதிக மனிதனுக்குள் இருந்தார். ஆகையால் அவர் அந்த வயோதிக மனிதனுக்குள் இருந்தாரேயானால், நாம் வீதியில் கிடக்கிற ஒரு பிச்சைக்காரனை அல்லது பிறரைச் சார்ந்து வாழ்ந்து திரிபவரை நாம் கூப்பிடும்போது, இயேசுவானவர் நம் எவரிடத்திலேனும் வருவார். அப்பொழுது அவர், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்பதை அறிந்திருந்தார். தேவனே அதை நினைவுகூர எங்களுக்கு உதவி புரியும். 60 இப்பொழுது உங்களுடைய வேதாகமங்களை வைத்துள்ள நீங்கள் வேதபாடப் பகுதியைக் குறித்துக்கொள்ள விரும்பினால், நான் பரிசுத்த வேதாகமத்திலிருந்து இரண்டு பகுதிகளை, ஒன்றை ஏசாயாவிலிருந்தும், ஒன்றைப் பரிசுத்த யோவானிலிருந்தும் வாசிக்க விரும்புகிறேன். நான் ஏசாயாவிலிருந்து 42-வது அதிகாரத்தையும், பரிசுத்த யோவானிலிருந்து 12-ம் அதிகாரத்தையும் வாசிக்க விரும்புகிறேன். நான் வேதவாக்கியங்களை வாசிக்க விரும்புகிறேன். ஏசாயா 42-வது அதிகாரத்தில் 1-லிருந்து 1-ம் வசனத்திலிருந்து துவங்கி 7-வது வசனம் வரையிலும் உட்செல்லுகிறது. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். 61 இப்பொழுது பரிசுத்த யோவான் 12-ம் அதிகாரத்தில், நாம் 17-வது வசனத்திலிருந்து துவங்கி…கிட்டத்தட்ட 28-வது வசனம் வரை வாசிப்போமாக. அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சிகொடுத்தார்கள். அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள். அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப்பின்சென்று போயிற்றே என்றார்கள். பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைபடும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், (இப்பொழுது கவனியுங்கள்) நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்: பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், (இதற்காகவே) இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 62 இப்பொழுது, நான் மற்றொரு வழியில் உபயோகித்திருக்கிற ஒரு வேதபாடத்தை, நான் இதிலிருந்து அணுகுகிறேன்; ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம். 63 இதற்கு முன்னர் சில சூழ்நிலைகளில் நான் இந்தப் பொருளை அணுகியிருக்கிறேன், ஆனால் இன்றிரவோ சற்று வித்தியாசமாக அணுக நான் எண்ணங்கொண்டிருக்கிறேன். இப்பொழுது இது ஒரு வழக்கத்திற்கு மாறான ஒரு கிறிஸ்துமஸ் செய்திக்கான பின்னணிக் காட்சியமைப்பாயிருக்கிறது. ஆனால் இன்றைக்கு நீங்கள் வானொலியில் கிழக்கத்திய தேசத்தின் மூன்று மனிதர்கள், சிறு பெத்லகேம் பட்டிணம் மற்றும் அமைதியான இரவு என்பதன் பேரில் ஊழியர்கள் அவருடைய பிறப்பைக் குறித்தும் இன்னும் பலவற்றைக் குறித்தும் பேசினதைக் கேட்டிருக்கிறீர்கள். அதைக் குறித்து இந்தப் பிற்பகலில் நீங்கள் மிக அதிகப்படியானதைக் கேட்டுவிட்டப் பிறகு, நான் என்னுடைய கிறிஸ்துமஸ் செய்தியை அளிக்கிறேன். நான் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாகவே நான் அதை அவருடையப் பிறப்பிலிருந்து எடுக்கலாம் என்றும், ஒரு வித்தியாசமான கருத்திலிருந்து எடுத்து, இதை மற்றொரு விதத்தில் பேசலாம் என்று எண்ணியிருந்தேன். இது மிகவும் வழக்கத்திற்கு மாறான பின்னணியமைப்பு, ஆனால் இதுவோ வழக்கத்திற்கு மாறான காரியங்களில் நாம் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தைக் காண்கிறதாயுள்ளது. இது வழக்கத்திற்கு மாறான காரியங்களில் உள்ளது. 64 இது பரிசேயரும், சதுசேயரும் வந்து அவர்களிடம் கூறின வழக்கமான பின்னணியமைப்பாயிராமல், ஜனங்கள் மேசியா என்று அவரை அடையாளங்கண்டுகொண்ட வழக்கத்திற்கு மாறான தேவனுடைய வார்த்தையின் பின்னணியமைப்பில் இருந்தது. மேசியா பரலோகத்தின் தாழ்வாரங்களிலிருந்து இறங்கி வருவார் என்று அவர்கள் எண்ணியிருந்ததற்குப் பதிலாக அல்லது அவர் அவ்வாறு வருவார் என்று அவர்கள் கூறியிருந்ததற்குப் பதிலாக ஒரு தொழுவத்தில் அவர் பிறந்திருந்ததைக் காண்பது வழக்கத்திற்கு மாறானதாயிருந்தது. 65 அது வழக்கத்திற்கு மாறான காரியமாயிருந்தது, யோர்தான் நதியிலே, மலைகள் ஆட்டுக்காடாக்களைப் போல துள்ளின. தூதனோ அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டிருந்தார். ஓர் அருமையான மேம்பட்ட கல்வியறிவு கொண்ட ஆசாரியன் வந்து அவருடைய வருகையை அறிவிப்பதற்குப் பதிலாக முகத்தின் கன்னத்தில் கிருதா முடியோடும், உரோமம் மிகுந்தவனாய், ஒரு மேற் சட்டைக்காக ஒரு துண்டு மிருகத்தின் தோலினால் தன்னைச் சுற்றிக்கொண்டிருந்த ஒரு மனிதனையேக் கண்டனர். அவன் தன்னுடைய முழங்கால்கள் வரையிலும் உள்ள சேற்றில் நடந்து சென்று ஒருவேளை இப்படிப்பட்ட ஓர் எழுச்சியூட்டும் செய்தியைப் பிரசங்கித்திருப்பான். அவன் பரிசேயரையும், சதுசேயரையும் மற்றும் அந்தப் பண்டிதர்களையும் அழைத்து, “நீங்கள் பாம்பின் குட்டிகள்” என்றான். ஒரு மனிதன் அதைச் செய்வது வழ்க்கத்திற்கு மாறானதாயிருக்கிறது. ஆனால் அதுவோ சத்தியத்தைக் கண்டறியும் வழியாய், ஜீவனாய், வழக்கத்திற்கு மாறானதாயுங்கூட இருந்தது. திட்டமிடப்பட்ட, வழக்கமான விதத்தில் அல்லாமல் வழக்கத்திற்கு மாறான விதத்தில் இருந்தது. 66 இந்த வழக்கத்திற்குமாறான வேதப்பகுதியில் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தையும், கிறிஸ்துமஸ் நமக்கு என்ன பொருட்படுத்துகிறது என்பதையும், இப்பொழுது நாம் அதைச் செய்ய வேண்டிய விதத்தையும், அல்லது என்ன, எப்படி நாம் கிறிஸ்துமஸை அணுக வேண்டும் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும் என்பதே இன்றிரவு என்னுடைய இருதயத்தினுடைய வாஞ்சையாயிருக்கிறது. 67 இப்பொழுது இந்தக் கிரேக்கர்கள் அவரைக் காண விரும்பினர் என்று நாம் வாசிக்கும்போது இங்கே நாம் கண்டறிகிறோம். அவர்கள் இயேசுவைக் கண்டறியவே வந்தனர். உங்களையும் என்னையும் போன்றே அவர்கள் அவரைக் குறித்தும், அவர் செய்திருந்த மகத்தான பிரசங்கத்தைக் குறித்தும், வழக்கத்திற்கு மாறான அவருடைய ஜீவியக் காரியங்களைக் குறித்தும் கேட்டிருந்தனர் என்பது சந்தேகமேயில்லை. ஆகவே அவர் ஒரு வழக்கத்திற்கு மாறான நபரானார். 68 நான் இங்கே இதைப் போதிய அளவிற்கு கூறும்படியாகவே நிறுத்த விரும்புகிறேன், அதாவது பெரும்பாலும் எப்பொழுதுமே நீங்கள் ஒரு நபரில் தேவனைக் கண்டடையும்போது, மிகவும் வழக்கத்திற்கு மாறான நபர் மிகவும் வழக்கத்திற்கு மாறான விதத்தில் உபயோகிக்கப்படுகின்றதை நீங்கள் கண்டறிகிறீர்கள். 69 எனவே இயேசு இந்த மாதிரியான நபராய் இருந்தார். அவர் என்னவாயிருந்தார் என்றும், யாராயிருந்தார் என்றும் கண்டறியும்படியாய் ஜனங்களைக் கவர்ந்தார். 70 உண்மையாகவே இந்தக் கிரேக்கர் புறசமயத்தவராய், அஞ்ஞானிகளாயிருந்தனர், ஏனென்றால் கிரேக்கர் விக்கிரகங்களை வழிபட்டு வந்தனர். அவர்கள் மகத்தான சிற்பிகளாய், உடற்பயிற்சி போட்டியாளர்களாய் இருந்தனர் என்றே நான் கூறுவேன். அவர்கள் ஏராளமான கலைகளை உடையவர்களாயிருந்தனர், கிரேக்கர் புரிந்த மகத்தான கிரேக்கக் கலையை, அவர்களுடையக் கலைகளுக்கு இந்த நாளிலும் கூட ஒருபோதும் போட்டியிடப்பட முடிவதில்லை. அவர்கள் மகத்தான உடற்பயிற்சிப் போட்டியில் வல்லமை படைத்த ஜனங்களாயிருந்தனர். 71 அவர்கள் எங்கோ ஒரு தேவன் இருந்தார் என்பதை அறிந்தவர்களாய் இருந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆயிரக்கணக்கானவைகளை உடையவர்களாயிருந்து, அவைகளை வழிபட்டு வந்தனர். அவர்கள் எபிரேயர்களுக்கு மத்தியிலே ஒரு சரித்திரப் பிரகாரமான தேவன் மகத்தான அற்புதங்களை செய்திருந்தார் என்பதைக் குறித்து கேள்விப்பட்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் இந்தத் தேவனைக் குறித்தும்கூட, அதாவது வழக்கமாக அற்புதத்தை நிகழ்த்தும் எபிரேய தேவன் அங்கே அவர்களுடையத் தேசத்தில் அவர்களோடு மீண்டும் இருப்பதைக் கேள்விப்பட்டிருந்தனர். எனவே அது அவர்களுடையக் கவனத்தைக் கவர்ந்தது, ஆகையால் அவர்கள் இயேசுவைக் காண வந்தனர். 72 கவனியுங்கள், வழக்கமாகவே ஜனங்கள் இயேசுவைக் கண்டறியும்படி விரும்புகிறவிதமாவது அவரண்டை அவர்களை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கிற யாரையாவது கண்டறிவதேயாகும். ஒரு தலைவன் அல்லது அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவனே அவர்கள் அவரைக் கண்டறியும் அந்த வழியாயிருக்கிறான். ஆகையால் இயேசு, அவர் ஒரு ஊழியக்காரனைத் தெரிந்துகொள்வாரேயானால், அவர் எப்பொழுதுமே அவரண்டை ஜனங்களைக் கொண்டு வரும்படியான் யாரோ ஒருவரை தெரிந்துகொள்கிறார், ஏனென்றால் அதுவே ஜனங்களுக்கு சேவைசெய்யும்படியான அவருடைய தீர்மானமாய் இருக்கிறது. 73 இப்பொழுது அவர்கள் அவருடையப் பிரசன்னத்திற்கு உள்ளாகக் கொண்டு வரப்பட்டனர் என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுது இந்தக் கிரேக்கர்கள், பிலிப்புவை, அவர்கள் பிலிப்புவைக் கலந்தாலோசித்தனர், அப்பொழுது பிலிப்புவோ, “இப்பொழுது, இங்குள்ள யாரோ ஒருவர் நம்முடைய ஆண்டவரைக் காண விரும்புகிறார். ஆகையால் இந்தக் கிரேக்கரை என்னுடைய ஆண்டவரிடத்தில் அறிமுகப்படுத்துவது எனக்கு அவ்வளவு மதிப்புடையதாயிருக்காது. எனவே நான் என்னோடு வரும்படி அந்திரேயாவை அழைத்துச் செல்வேன்” என்றான். ஆகையால் அவர்கள் சென்று அந்திரேயாவை அழைத்து வந்தனர். அந்திரேயா, பிலிப்பு இருவரும் இந்தக் கிரேக்கரை இயேசுவினிடத்திற்கு வந்து அறிமுகப்படுத்தினர். 74 இப்பொழுது ஒரு மகத்தான காரியம் இங்கு உள்ளது, வழக்கத்திற்கு மாறான ஒரு வேதபாடமாயுள்ளது. இந்தக் கிரேக்கர் இயேசுவினிடத்தில் சுட்டிக் காட்டப்பட்டவுடனே, இயேசுவானவர் தம்மைச் சுட்டிக்காண்பிக்கவில்லை அல்லது அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தவுமில்லை. காரணம் உங்களால் இயேசுவை அந்த வழியில் அறிந்துகொள்ள முடியாது. இயேசுவானவர் அந்த வழியில் அறியப்படுகிறதில்லை. 75 ஆனால் உடனே நாம் இங்கே வேதவாக்கியத்தில் காண்கிறோம், அதாவது இந்தக் கிரேக்கர் கொண்டுவரப்பட்டபோது; இயேசுவண்டை கொண்டுவரப்பட்டபோது, அவருடைய சமூகத்தில் இருந்தபோது, இயேசு, “நல்லது, இது அல்லவா…நூற்றாண்டுகளினூடாக ஆவியின் ஏவுதலினால், தீர்க்கதரிசிகள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டிருக்கிற யூத இனத்தின் மேசியா நான் தான். இப்பொழுது நான் இங்கு இருக்கிறேன். நான் நாசரேத்தில் பிறந்தவனாய்…இருக்கிறேன். நான் யூதத் தாயாரை உடையவனாயிருக்கிறேன். என்னுடையப் பிதா தேவனாயிருக்கிறார். நான் கிரேக்கர்களாகிய உங்களுக்கு என்னை வெளிப்படுத்தும்படியாகவே இப்பொழுது இங்கே இருக்கிறேன்,” என்று கூறியிருக்க வேண்டும் என்பது போன்று காணப்படுகிறது. அப்படியானால் இப்பொழுது அதுவோ 1961-ஆண்டின் மொழிபெயர்ப்புக் காட்சி விளக்கமாய் இருந்திருக்கும். 76 ஆனால், பாருங்கள், அவர்கள் அவருடையப் பிரசன்னத்தில் கொண்டுவரப்பட்டவுடனே, அவருடைய பிரசன்னத்தில் ஜனங்களைக் கொண்டுவருவதே முக்கியமான காரியமாயிருக்கிறது. அவருடையப் பிரசன்னத்தில் வந்தவுடனே, இயேசு “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்” என்றார். என்னே ஒரு வழக்கத்திற்கு மாறான காரியம்! அவர்களுடைய அறிமுகத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் செய்த காரியமோ அவர்கள் அவரைக் கண்டறியும்படியான ஓர் இடம் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்.” 77 அவர் இங்கு என்ன செய்தார்? அவரை எப்படிக் கண்டறிய வேண்டும் என்ற அந்த மகத்தான சத்தியத்தை அவர்களுக்கு அவர் சுட்டிக் காண்பித்தார். அவர்களால் அவரை நித்திய ஜீவ வழியில், அவர் அங்கே நின்று கொண்டிருந்த விதத்தில் காணமுடியவில்லை. அவர் ஒரு மனிதனாயிருந்தார். 78 ஒரு சில காலைவேளைக்கு முன்னர் சுமார் ஒன்பது அல்லது காலை பத்து மணியளவில் நான் ஒரு தரிசனம் கண்டிருந்தேன். 79 நான் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது உலகம் முழுவதிலும் உள்ள அயல்நாடுகளுக்கு இந்த வருடத்தில் உடனே புறப்பட்டுச் செல்லும்படியான ஓர் அழைப்பு தொடர்ந்து எனக்குள்ளாக ஏவப்படுகின்ற உணர்வினைப் பெற்றிருந்தேன். நான் நார்வேவிற்குச் செல்ல விரும்புகிறேன், கர்த்தருக்குச் சித்தமானால் இந்த வருடத்தில் ஜெர்மனிக்கும், ஆப்பிரிக்காவிற்கும், அநேகத் தேசங்களுக்கும் செல்ல விரும்புகிறேன். போக வேண்டுமென்ற ஓர் அழைப்பு என்னுடைய இருதயத்தில் உள்ளது. 80 நான் கர்த்தரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, என்னுடையக் கண்களுக்கு முன்பாக ஒரு தரிசனம் தோன்றிற்று. அப்பொழுது நான் நின்றுகொண்டிருந்தேன், பின்னர் தரையிலே நடப்பதுபோன்று நடந்து ஓர் அறைக்குள்ளாகப் பிரவேசித்தேன், அங்கே விசேஷமாக இரண்டு பெண்மனிகள் இருந்தனர். ஒரு பெண் பணம் செலுத்தும் ஒரு விற்பனைக்கூட அறையிலும், மற்றொருப் பெண் அதேவிதமான மற்றொரு அறையிலும் இருந்தாள். அவர்கள் வித்தியாசமான பொருட்களை விற்றுக்கொண்டிருந்தனர். நல்லது, நான் ஒரு விநாடி நின்று, அது என்னவாயிருந்தது என்பதைப் பற்றி வியப்புற்றேன். அதன்பின்னர் நான் ஒரு மனிதன் உள்ளே வருவதைக் கண்டேன், அவன் இந்தப் பணம் வசூலிக்கும் அறையில் இருந்த பெண்ணிடத்திலிருந்து ஒன்றை வாங்கினார், அது ஒருவேளை தன்னுடைய மனைவிக்கு கொண்டு செல்லும் ஒரு வாசனைத் திரவிய சிறு புட்டியாயிருந்திருக்கலாம். 81 அதன் பின்னர் நான் நடந்து சென்று, “அந்த வாசனை திரவியம் எவ்வளவு விலை? நானும் என்னுடைய மனைவிக்காக அதைப்போன்ற ஒன்றை வாங்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு இளஞ்சிவப்பு நிற நறுமண திரவியம் வேண்டும். எனக்கு இளஞ்சிவப்பு நிற நறுமண திரவியம் பிடிக்கும்” என்று கூறினேன். 82 அப்பொழுது அவர் சொன்னார் இல்லை சரியாகக் கூறினால் அந்த ஸ்திரீயோ…“அந்த மனிதன் தன்னுடைய மனைவிக்காக வாங்கின இந்தச் சிறு புட்டி நாற்பது செண்டுகள் விலைகொண்டதாகும். ஆனால் இதுவோ இளஞ்சிவப்பு நிற நறுமண திரவியம் அல்ல. இது மற்றொரு புட்டி, இந்த இளஞ்சிவப்பு நிற நறுமண திரவியமோ ஒரு டாலர் தொண்ணூற்றெட்டு செண்டுகள் விலை கொண்டது” என்றாள். 83 அப்பொழுது நானோ, “நான் அதை எடுத்துக் கொள்கிறேன்” என்றேன். எனவே நான் என்னுடையச் சிறு பாக்கெட் பணப்பையிலிருந்து பணத்தை எடுத்தேன். நான் அவளுக்கு இரண்டு டாலர் நோட்டைக் கொடுத்ததாகவே எண்ணிக் கொண்டேன். 84 அவள் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்டு, “நான் இந்தப் பணத்தை அறியேன்” என்று கூறிவிட்டாள். அவள் அதை என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாள். அது ஒரு கனடா நாட்டு ஐந்து டாலர் நோட்டாயிருந்தது. 85 அப்பொழுது நானோ, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் அது ஒரு டாலர் என்று எண்ணினேன்” என்றேன். பின்னர் நான், “நான் ஒரு…நான் ஒரு மிஷினெரி. நான் உலகத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறேன். எனவே இதில் நான் ஒரு தவறினைச் செய்துவிட்டேன்” என்று கூறினேன். 86 எனவே அவள் அந்த ஐந்து டாலர் நோட்டைத் திரும்பக் கொடுத்துவிட்டாள். அப்பொழுது நான் அவளுக்கு அமெரிக்க ஒரு டாலர் நோட்டைக் கொடுத்தேன். அவள் என்னிடம் அதற்குரிய கிரயம்போக மீதியை என்னிடம் கொடுத்தாள். பின்னர் அவள், “மிஷினெரியா?” என்றும் கேட்டாள். அதற்கு நானோ, “ஆம், அம்மணி” என்றேன். 87 நான் பேசிக்கொண்டிருந்தபோது, இல்லை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் அங்கே தனக்கு அடுத்திருந்த பெண்ணைப் பார்த்தாள். அப்பொழுது அவளும் அதற்கு ஒருவிதமாக அவளுடையத் தலையை அசைத்தாள். அப்பொழுது அவள், “அன்பே, நம்முடைய தலைமுடியை கத்தரித்தல், நம்முடைய ஆடைகளை அணிந்து கொள்ளுதல் மற்றும் அது போன்றக் காரியங்களில் சகோதரன் பிரான்ஹாம் நமக்கு கூறியுள்ளவிதமாகவே ஸ்திரீகளாகிய நாம் இன்றைக்கு வாழ வேண்டும் என்றும், அவர் சரியாகக் கூறினார் என்றும் நீ நினைக்கிறாயா?” என்று கேட்டாள். மேலும், “அவர் அதில் தவறாயிருக்கிறார் என்று நீ கருதவில்லையா?” என்று கேட்டாள். 88 அதற்கு இவளோ, “ஆம் என்றாள்.” தொடர்ந்து அவள், “தேனே, நீ தொடர்ந்து கூறு.” ரூத், நீ, இல்லை அவள் பெயர் என்னவோ, அவள், “நீ ஆவியின் ஏவுதலைப் பெற்றிருக்கிறாய். அதைக் கூறு” என்றாள். 89 நல்லது அப்பொழுது உடனே நான் தரிசனத்தில் இருந்தேன் என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆகவே அவர்கள் இவருவருமே ஸ்திரீகளாயிருந்தனர் என்பதை நான் அறிந்து கொண்டேன். புரிகிறதா? அவர்கள் இருவரும், ஒருத்துவம் மற்றும் திரித்துவ சபையாயிருந்தனர். அவர்கள் அங்கே நின்றிருந்தனர். 90 மேலும் இவள், “ஆம்” என்றும் கூறினாள். அவள், “நாம் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் நாம் அவருடையக் கண்களை ஒருபோதும் கண்டதேயில்லை. நாம் அவருடைய அலங்காரத்தை ஒருபோதும் கண்டதேயில்லை. அவர் எந்தவிதமாய்க் காணப்பட்டார் என்பதை நாம் அறியோம், ஆகவே நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது?” என்று கூறினாள். 91 அப்பொழுது நான் ரோந்து சுற்றிவரும்போது அணியும் பழைய கோட்டினை (Suit) அணிந்திருந்தேன். நான் அந்த ஸ்திரீயிடம் கூறினேன், நான், “என்னுடையச் சகோதரிகளே ஒரு நிமிடம் சற்றுப் பொருங்கள். பாருங்கள், நீங்கள் வேதாகமத்தின்படி ஜீவிக்க வேண்டும். அது எப்படியிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றேன். 92 அதற்கு அவளோ, “ஆனால் நாங்கள் முன்பிருந்தக் காலங்களில் ஒருபோதும் வாழ்ந்துவந்ததில்லை. நாங்கள் அவரை ஒருபோதும் கண்டதில்லை” என்றாள். அப்பொழுது நான், “நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். நான், “அதைக் குறித்த காரியமோ…” என்றேன். 93 நான், “கர்த்தாவே, இப்பொழுது நான் இரண்டு பெரிய அறிவுத்திறன் கொண்ட சபைகளுக்கு முன்பாக இருக்கிறேன். இப்பொழுது நீரோ எனக்கு ஞானத்தைக் கொடுக்க வேண்டும்” என்று எண்ணினேன். 94 ஆகவே அப்பொழுது நான் எனக்குள்ளே பேசிக் கொண்டதைக் கேட்டேன். நான் உங்களை இதில் சோதித்தறிய விரும்புகிறேன். என் ஜீவியத்தில் அதைக் குறித்து ஒருபோதும் நினைத்ததேயில்லை. நான், “ஒரு மனிதன் அப்பொழுது அவன் இருந்தவிதமாகவே இன்றைக்கு இருக்க வேண்டும், ஏனென்றால் அவன் அதேமாதிரியான மனிதனாயிருக்கிறான். அவன் ஐம்புலன்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவன் நின்று அவருடைய முகத்தைப் பார்த்திருந்தால், அவர் எந்தவிதமாகக் காணப்பட்டார் என்று கவலைப்படாமல், அவரை விசுவாசிக்கும்படியான விசுவாசமாகிய ஆறாம் புலனை இன்னமும் உடையவனாயிருந்திருப்பான். அவன் எப்படியாயினும் அவரை விசுவாசிக்க வேண்டும்” என்றேன். 95 அவர்கள் தங்களுடைய முகங்களை வெட்கத்தால் மறைத்துக் கொண்டு “ஐயா, நாங்கள் அதை ஒருபோதும் அந்தவிதமாகக் கண்டதேயில்லை” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் செல்ல துவங்கினர். அப்பொழுது நானோ திரும்பி, ஊழியக் களத்திற்குச் செல்லத் துவங்கினேன். அது ஊழியக்களத்திற்கு திரும்பவும் வருவதற்கான ஓர்—ஓர்—ஓர் அழைப்பாயிருந்ததை நான் அறிந்து கொண்டேன். 96 இப்பொழுது, பாருங்கள், அவர் தம்முடையப் பிரசன்னத்தில் அங்கே அவர்களுக்கு சுட்டிக் காண்பித்தார். கிறிஸ்து அவர்களுக்குச் சத்தியத்தைச் சுட்டிக்காண்பித்தார். சிலுவைக்குச் செல்லவிருந்த அவரை எப்படிக் காண வேண்டும் என்று அவர் கூறினார். அங்கேதான் அது, சிலுவையண்டையிலே இருக்கிறது. “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்.” அவர் மரிக்காதிருந்திருந்தால், அவர் மரித்திராவிட்டால், அவர் தாமே தனித்து நிலைத்திருந்திருப்பார். ஆனால், அவர், கோதுமை மணியாயிருந்து நிலத்திற்குள் விழுந்தார். “அப்பொழுது அது நிலத்திற்குள் விழுந்தால்,” அவர், “அது நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். முதலாவது அது ஒரு துளிர்விடப்பட்ட தானியமாயிருக்க வேண்டும் இல்லையென்றால அது ஒன்றையுமே முளைப்பிக்காது. ஆனால் அது நிலத்திற்குள் விழுவதற்கு முன்னர் அது அதனுள் ஜீவனை உடையதாயிருக்க வேண்டும். அவர் தனக்குள்ளே நித்திய ஜீவனை உடையவராயிருந்தார், ஏனென்றால் அவர் இம்மானுவேலாயிருந்தார். அவர் மீண்டும் ஜீவனைக் கொண்டுவரத் தம்முடையச் சொந்த ஜீவனையே அளிக்க வேண்டியதாயிருந்தது. 97 கோதுமையை மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள், “எப்படி ஒரு கோதுமை மணியாய் இருக்க முடியும்” என்று கூறலாம். இங்கே அதுதான் சம்பவிக்கிறது. ஒரு கோதுமை மணி உள்ளே விழுந்து, அதுவே நூறு கோதுமை மணிகளைப் பிறப்பிக்கிறது. நூறு கோதுமை மணிகள் உள்ளே விழுந்து, ஆயிரம் கோதுமை மணிகளைப் பிறப்பிக்கிறது. ஆயிரம் கோதுமை மணிகள் உள்ளே விழுந்து பத்து இலட்சம் கோதுமை மணிகளைப் பிறப்பிக்கிறது. பத்து லட்சம் கோதுமை மணிகள் உள்ளே விழுந்து ஒரு பெரிய விசைப் படகு சரக்கு அளவிற்கு கோதுமை மணிகளைப் பிறப்பிக்கிறது. அது முழு உலகத்தையும் போஷிக்குமளவிற்கு பிறப்பித்துக்கொண்டே, பிறப்பித்துக்கொண்டே, பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. 98 அதைத்தான் அவர் பொருட்படுத்தினார். “நான் என்னுடைய வாழ்க்கையை மாத்திரம் வாழ்ந்து, இந்தவிதமாய் மரித்தால், நான் வெறுமெனே என்னுடைய வாழ்க்கையை மாத்திரம் வாழ்ந்திருந்தால், பின்னர் எனக்குப் பின் பலனே உண்டாயிராது. ஆனால் நான் தேவ சித்தத்தின் கீழ் நிலத்தில் விழுவேனேயானால், அப்பொழுது நான் ஒரு புதிய பிறப்பைக் கொண்டு வருவேன். அந்த புதியப் பிறப்பில் அது மற்றொரு புதிய பிறப்பைக் கொண்டுவரும், முழு உலகமும் ஊழிய மையமாக்கப்பட்டு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் வரையில் மற்றொரு புதிய பிறப்பைக் கொண்டுவரும்” “இந்தச் சுவிசேஷம் எனக்கு ஒரு சாட்சியாக உலகமெங்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” 99 ஆகையால் நாம் தானே நம்முடைய ஊழியத்தில், நம்முடைய சிந்தனையில், நம்முடைய ஜீவியத்தில் நாம் இருக்கிறவிதமாகவே நாம் தரித்திருப்போமேயானால், நாம் எந்த நன்மையையுமே செய்ய முடியாது. நாமும் கூட பீடத்தண்டையிலே மரிக்க வேண்டும் இல்லையென்றால் நாம் மட்டுமே தனியாக வாழுவோம். நாம் ஏதோ ஒரு ஸ்தாபனத்திற்கு அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டிற்கு வாழுவோம். நாம் ஏதோ ஒரு ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பிற்கு வாழ்வோம். ஆனால் நாம் நமக்கு மரிப்போமேயானால் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நம்மடைய உதடுகளின் மூலம் எங்கும் பிரசங்கிக்கப்படுவார். நாம் மரிக்கத்தான் வேண்டும். இன்றைக்கு அநேகர் இப்பொழுது இருக்கிற வண்ணமாகவே இருக்கின்றனர். அதாவது…நாம் புதிய ஜீவனைப் பிறப்பிக்கும்படிக்கு நாம் மரிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர் இதில், “நீங்கள் என்னைக் காண வேண்டுமென்றால், நீங்கள் மரிக்க வேண்டும், உங்களுக்கே மரிக்க வேண்டும், அப்பொழுதே நீங்கள் ஒரு புதியப் பிறப்பைக் கொண்டுவர முடியும்” என்ற அளவில் கூறினார். 100 இப்பொழுது, நீங்கள் அவரைக் காண வேண்டுமென்றால், நீங்கள் அவரைக் காணும்படி எப்போதாவது எதிர்பார்த்தால், நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்துகொள்வதன் மூலம், நீங்கள் கைக்கொள்கிற சில புத்தகத்தின் சட்டத் திட்டங்கள் மூலம், நீங்கள் சேவிக்கிற சில கோட்பாடுகளின் மூலம் நீங்கள் அவரை ஒருபோதும் காணமாட்டீர்கள். நீங்கள் மரிக்கும்போது, நீங்கள் அவரைக் காண்பீர்கள். நீங்கள் கல்வாரியண்டை வந்து உங்களையே சிலுவையிலறையப்படும்படிச் செய்யும்போது, அதன்பின்னரே நீங்கள் இயேசுவைக் காண்பீர்கள். 101 முதலாவது அவர் எந்தக் காரியத்தையும் கூறுவதற்கு முன்னர், அவர் தம்மைக் கண்டறியும்படியான இடத்திற்கு அவர்களைச் சுட்டிக்காண்பித்தார். எல்லா புறஜாதிகளையும் போல அல்லது எல்லா ஜனங்களையும் போல, நீங்கள் அவரோடு சிலுவையில் அறையப்படும்போது, நீங்கள் சிலுவையிலே இயேசுவைக் கண்டடைகிறீர்கள். 102 இன்றைக்கு நாம் ஒவ்வொரு காரியத்திலும் அவரைக் கண்டறிய முயற்சிக்கிறோம். நாம் ஒரு ஸ்தாபனத்தில் அவரைக் கண்டறிய முயற்சிக்கிறோம். நாம் அவரைக் கூறுகின்ற ஏதோ ஒரு கோட்பாட்டில் கண்டறிய முயற்சிக்கிறோம். நாம் அவரைக் குறிப்பிட்ட நாட்களைக் கைக்கொள்வதன் மூலம், குறிப்பிட்ட சடங்கு முறைகளுக்கு கீழ்படிவதன் மூலம் கண்டறிய முயற்சிக்கிறோம். ஆனால் நாம் கல்வாரியண்டைக்கு வரும் வரையில் நம்மால் கண்டறிய முடியாது. நாம் சிலுவையிலறையப்பட்டு, பூமியின் தூளுக்குள்ளே விழுந்து, நம்முடையதற்கு மரித்து, அதன்பின்னரே மீண்டும் பிறக்கிறோம். அப்பொழுதே நாம் இயேசுவைக் கண்டடைகிறோம். 103 ஓ, இன்றைக்கு அநேகர் தங்களுடையதைப் பற்றி கொள்ளும்படி, தங்களுடையச் சொந்தக் கருத்தினைப் பராமரிக்க முயற்சிக்கின்றனர். “நான் இதைக் குறித்த என்னுடைய வழியை பெற்றுக்கொள்ளேன். நான் இதை விசுவாசிக்கிறேன்.” ஆனால் நீங்கள் உங்களுடையதற்கு மரித்து, அவரை, வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் வரை உங்களால் கிறிஸ்துவை கண்டறிய முடியாது. அதன்பின்னர் நீங்கள் ஜீவனைக் கண்டடைகிறீர்கள். நாம் பார்ப்போம். 104 இன்றைக்கு எவ்வளவோ வித்தியாசமாயுள்ளதே! இன்றைக்கு சபைகளோடு அல்லது இன்றையச் சீஷர்களோடுமுள்ளக் காரியம் இன்றைக்கு எவ்வளவோ வித்தியாசமாயுள்ளதே! இன்றைக்கு சீஷர்களிடத்திற்கு நீங்கள் வருவீர்களேயானால், அவர்கள் என்ன செய்கிறார்கள்? 105 அந்த சீஷர்கள், அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்னர், அவர்கள் இந்தக் கிரேக்கரை நேராக இயேசுவின் பிரசன்னத்திற்குள்ளாக அழைத்துச் சென்றனர். அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரேயானால், நீங்கள் அவருடையப் பிரசன்னத்தில் கொண்டுவரப்பட்டிருந்தால், அவர் இன்றைக்கும் அதேவிதமாகவேச் செயல்பட வேண்டியவராயிருப்பார். 106 இன்றைய சீஷர்கள், இன்றைக்கோ அவ்வளவு வித்தியாசமாயிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் பதிலாக உங்களை ஒரு தொட்டிலுக்கு அல்லது ஒரு முன்னணைக்கு அல்லது ஒரு சாண்டா கிளாஸ் எனப்படும் குழந்தை நட்புத் தெய்வக் கதைக்கு அல்லது ஈஸ்டருக்கான ஒரு செல்லப் பெயர்கொண்ட முயலுக்கு அல்லது மற்ற ஏதோ ஒன்றிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அவர்கள் உங்களை ஒருபோதும் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள் கொண்டுவருகிறதேயில்லை. கிறிஸ்துமஸ் அல்ல கிறிஸ்து. இல்லை. இன்றைக்கு அவர்கள் உங்களை மற்ற ஏதோ ஓர் இடத்திற்கு, ஏதோ ஒரு சிலையண்டைக்கு, ஏதோ ஒரு சபையினிடத்திற்கு, ஏதோ ஒரு ஸ்தாபனத்தண்டைக்கு, ஏதோ ஒரு கோட்பாட்டுப் பிரமாணங்களண்டைக்குக் கொண்டு வருகிறார்கள், ஆனால் உங்கள் ஒருபோதும் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள் கொண்டு வருகிறதில்லை. 107 ஒரு மெய்யான, உண்மையான சீஷன் உங்களைக் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள் சரியாக நேராகக் கொண்டு வருவான். அங்கிருந்தே கிறிஸ்து நீங்கள் என்ன செய்ய வேண்டியதாயிருக்கிறது என்பதைக் காண்பிப்பார். 108 இப்பொழுது, “ஆவியானது கிறிஸ்துமஸிலிருந்து போய்விட்டது,” என்று இன்று யாரோ ஒருவர் கூறினார். நான் அவைகளை வானொலியில் கேட்டேன். ஒரு மனிதன் வாதமாகக் கூறினதை, ஒரு ஊழியக்காரன், “அநேக ஜனங்கள் இன்றைக்கு, கிறிஸ்துமஸ் இதுவல்ல. நாம் சாண்டா கிளாஸ் மற்றுமுள்ளக் காரியங்களை உடையவர்களாயிருக்க வேண்டியதில்லை,” என்பதைப் பற்றிக் கூறினதைச் சொல்லக் கேட்டேன். அந்த நபர் தன்னுடைய வாத மையக் கூற்றினைச் சொல்லக் கேட்டேன். அந்த நபர் தன்னுடைய வாத மையக் கூறகளை தெளிவுபடுத்த முயன்றான், அதாவது, “நீங்கள் கிறிஸ்துமஸிலிருந்து, சாண்டா கிளாஸை எடுத்துவிட்டிருந்தால், நீங்கள் ஆவியையே வெளியே எடுத்துப்போட்டீர்கள்” என்றான். நீங்கள் சாண்டா கிளாஸின் ஆவியை வெளியே எடுத்துப்போட்டீர்கள், அது உண்மை. சாண்டா கிளாஸின் ஆவியானது…அல்ல… 109 சாண்டா என்பது ஜெர்மானியக் கட்டுக்கதை, ஒரு ஜெர்மன் கத்தோலிக்கப் பாரம்பரியம், அது கிறிஸ்துமஸை உருவாக்குகிற ஆவியல்ல. கிறிஸ்துவை சுட்டிக்காட்டின ஆவியே பரிசுத்த ஆவியாகும், அது ஒரு கொண்டாட்டம் அல்ல, ஆனால் ஜீவனுள்ள தேவனின் ஓர் ஆராதனையாகும். 110 ஆனால் அவரோ, “நீங்கள் சாண்டா கிளாஸை எடுத்துப்போட்டுவிட்டீர்கள், இனிமேல் கிறிஸ்துமஸில் ஆவியே கிடையாது” என்றார். ஒரு ஊழியக்காரன் அதை ஒலிப்பரப்பில் கூறுவதை உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடியுமா? ஆனால் அதைத்தான் அவர் கூறினார், அதாவது “நீங்கள் சான்டா கிளாஸை எடுத்துவிடுகிறீர்கள், எனவே நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துமஸின் ஆவியைப் பெற்றிருக்கவேயில்லை” என்றார். அது அவ்வாறிருந்தாலும், கிறிஸ்துவுக்கு மாஸ் (Christ Mass) என்று உபயோகிக்கும் வார்த்தையை, அதைக் குறித்து நீங்கள் அதிகமாய் புரிந்து கொள்ளாதிருக்கலாம். 111 ஆனால் நீங்கள் உங்களுடைய ஜீவியத்திலிருந்து சாண்டா கிளாஸை எடுத்துப் போட்டு, உங்களுடைய இருதயத்தைத் திறந்து, கிறிஸ்துவானவரை உள்ளே வரவிட்டு, உண்மையான கிறிஸ்துமஸைப் பெற்றுக்கொள்ளும்படி இந்த உலகத்தின் காரியங்களுக்கு மரியுங்கள். ஆம். 112 இது வழக்கமாயிருந்ததைவிட நிறைய வித்தியாசம் உடையதாய் இருக்கிறது, ஆனால் இது மாற்றப்பட்டுள்ளது. கிறிஸ்து மாற்றப்பட்டிருக்கவில்லை. இல்லை—இல்லையே. பண்டையச் சீஷர்களுக்கும் இன்றையச் சீஷர்களும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. இன்றையச் சீஷர்கள் பேச்சாளர்களைக் கொண்டுவருகிறார்கள் இல்லை சரியாகக் கூறினால் தங்களுக்கு நாட்டமுடையவர்களை…பதிலாக…பண்டையச் சீஷர்களோ தேவனுடையப் பிரசன்னத்திற்குள்ளாகத் தேடினவர்களைக் கொண்டு வந்தனர். இன்றைக்கு, இன்றையச் சீஷர்களோ அவர்களைக் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள்ளாகக் கொண்டு வருவதற்குப் பதிலாக ஏதோ ஒரு சபை ஸ்தாபனத்தின் பிரசன்னத்திற்குள்ளாக, ஏதோ ஒரு துன்பத்தின் பிரசன்னத்திற்கு உள்ளாக, ஏதோ ஒரு கோட்பாட்டின் பிரசன்னத்திற்குள்ளாக, ஏதோ ஒரு உபதேசத்தின் பிரசன்னத்திற்குள்ளாக அவர்களைக் கொண்டு வருகிறார்கள். 113 நாம் கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அதில் நீங்கள் கிறிஸ்துவினுடையப் பெயர் குறிப்பிடப்படுவதை நீங்கள் கேட்பது எப்போதுமே மிகவும் அபூர்வமானதாயிருக்கிறது. அது குறிப்பிட்டுக் கூறப்படுவதை நீங்கள் கேட்பதில்லை. ஜனங்கள் கிறிஸ்துமஸ் உண்மையாகவே என்னவாயிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாத அளவிற்கு விளக்குகளும், மினுக்கான அற்பப் பகட்டான யாவுமே சாண்டா கிளாஸ் பேரில் உள்ளதேயின்று கிறிஸ்துவின் பேரிலல்ல. அவர்கள் அது முழுவதும் அஞ்ஞானக் காரியமாகுமளவிற்கு அதை அஞ்ஞானமார்க்கமாக்கியிருக்கின்றனர், அதை அஞ்ஞானமார்க்கமாக்கியிருக்கின்றனர், அதை அஞ்ஞானமார்க்கமாகவே ஆக்கிவிட்டன. இது ஒரு பெரிய வர்த்தக நாளின் கொண்டாட்டமாயிருக்கிறது. இப்பொழுது, அவர்கள் இதை அன்னையருடையத் தினத்தைப்போல, அல்லது தந்தையருடையத் தினத்தைப் போல அல்லது குமாரருடையத் தினத்தைப்போல் அல்லது குமாரத்தியருடையத் தினத்தைப்போல ஒரு வர்த்தகத் தினமாக ஆக்கவிரும்பினால், சரி. ஆனால் அந்த வர்த்தகத்தை கிறிஸ்துமஸிலிருந்து விலக்கி வையுங்கள். அண்மையில் நான் ஓர் அடையாளக் குறிப்பைக் கண்டேன், அதில், “கிறிஸ்துமஸில் கிறிஸ்துவை முதலில் வையுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. 114 இப்பொழுது அவர்கள் உங்களை ஒரு சபைக்குக் கொண்டுவருகிறார்கள், அப்பொழுது நீங்கள் ஒரு கோட்பாட்டையே கற்றுக்கொள்கிறீர்கள். அவர்கள் உங்களை ஒரு கிறிஸ்துமஸிற்கு கொண்டுவருகிறார்கள், அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சாண்டா கிளாஸையே காண்கிறீர்கள். அவர்கள் உங்களை ஒரு சபைக்குக் கொண்டுவருகிறார்கள், அப்பொழுது நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைக் காண்கிறீர்கள். 115 ஆனால் கிறிஸ்துவோ அவர்களைச் சிலுவையண்டைக்குக் கொண்டு வந்தார். கிறிஸ்துவண்டைக்கு உங்களை சுட்டுக்காட்டும் ஓர் உண்மையான சீஷன் உங்களை கொண்டுவரும்போது, கிறிஸ்து உங்களைச் சிலுவையண்டைக்குக் கொண்டு வருவார், அங்கே நீங்கள் அவரோடு சிலுவையிலறையப்படுகின்றீர்கள். அவருடைய நித்திய ஜீவனும் உங்களுடைய ஜீவனும் ஒன்றாய் சந்திக்கின்றன, அப்பொழுது உங்களுடைய ஜீவன் மரிக்கிறது, நீங்கள் அவருடைய நித்திய ஜீவனை எடுத்துக்கொள்ளுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் ஒரு தேவனுடையக் குமாரனாயிருக்கிறீர்கள். ஆமென். 116 பண்டையச் சீஷனுக்கும் இன்றையச் சீஷனுக்கும் என்னே ஒரு வித்தியாசம்! 117 நீங்கள், “நான் கர்த்தராகிய இயேசுவை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று ஒரு சீஷனிடத்தில் குறிப்பிட்டு கூறுவீர்களேயானால் நலமாயிருக்கும். 118 “நல்லது, இப்பொழுதுப் பாருங்கள், நாங்கள் குறிப்பிட்ட—குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவர்கள், வந்து அதில் சேர்ந்துகொள்ளுங்கள், எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்.” புரிகிறதா? இல்லையென்றால, “நாங்கள்…நாங்கள் இந்தக் குறிப்பிட்ட—குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், வந்து அதைச் சேர்ந்துகொள்ளுங்கள்.” அதைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள். 119 ஆனால் கிறிஸ்துதாமே ஜனங்களை அவருடைய மரணத்திற்குச் சுட்டிக்காண்பித்து, “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகவிட்டால் தனித்திருக்கும்” என்றார். 120 ஓ, அது எவ்வளவு வித்தியாசமாயுள்ளது! ஆம் ஐயா, எவ்வளவு வித்தியாசமாயுள்ளது! ஆனால் உங்களுடைய ஜீவியமும், அவருடைய ஜீவனும் ஒன்றையொன்று கண்டடைகிறது, சபையிலல்ல, ஒரு கட்டிடத்தில் அல்ல, ஒரு கோட்பாட்டில் அல்ல, நல்ல கிரியைகளில் அல்ல, ஆனால் சிலுவையில் நீங்கள் அவரோடு அறையப்படுகின்றீர்கள். அங்கேதான் நீங்கள் கிறிஸ்துவைக் கண்டடைகிறீர்கள். நீங்கள் மேலான காரியத்தைச் செய்வதன் மூலமாகவோ, ஒரு புதிதான ஒன்றைத் துவங்குவதன் மூலமாகவோ அவரைக் கண்டடைகிறதில்லை. ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கி நீங்கள் கிறிஸ்துவைக் கண்டடைகிறதில்லை, நீங்கள் மரணத்தில் மட்டுமே கிறிஸ்துவைக் கண்டடைகிறீர்கள்; ஒரு முன்னணையில் அல்ல, ஒரு அறிக்கையில் அல்ல. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோட்பாடுகளிலும், கட்டுக்கதைகளிலும் நம்பிக்கை வைப்பதினால் கிறிஸ்துவை அங்கே கண்டடைகிறதில்லை. 121 ஓர் உண்மையான ஊழியக்காரன் உங்களை அவரண்டைக்குக் கொண்டு செல்கிறான். அவர் வார்த்தையாயிருக்கிறார். நீங்களோ, “அப்படியானால் சகோதரன் பிரான்ஹாம், கிறிஸ்து இன்றைக்கு பூமியின்மேல் இருப்பாரானால், ஓர் உண்மையான ஊழியக்காரன் அவனை அவரண்டைக்குக், கிறிஸ்துவினண்டைக்குக் கொண்டு செல்வான்” என்று கூறுகிறீரா எனலாம். நல்லது, கிறிஸ்துவோ வார்த்தையின் ரூபத்தில் இங்கே இருக்கிறார். வார்த்தையே ஜீவனைக் கொண்டுவருகிறது, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருக்கிறார். கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார், ஆம் ஐயா, அவர்தாமே வார்த்தையாயிருக்கிறார். உண்மையான ஊழியக்காரன் உங்களை எப்பொழுதுமே வார்த்தைக்குக் கொண்டுச் செல்கிறான். 122 இப்பொழுது, அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் ஜீவிக்கிற இந்த வேதாகமமாயிருக்கிறார். நீங்கள் ஒரு கோதுமை மணியைப் போன்று கிறிஸ்துவோடு உங்களுடையதற்கு மரிக்கும்போது, அப்பொழுது வார்த்தை உங்களுக்குள் ஜீவித்து, பூமிக்குள்ளாக விழ வேண்டியதாயிருந்த அந்த ஜீவனுள்ள கோதுமை மணியில் அது செய்ததைப் போன்றே அதேப் பலன்களைக் கொண்டு வருகிறது. ஆமென். நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்காளிகளாயிருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய எல்லா ஆசீர்வாதங்களிலும், அவருடைய எல்லா வெளிப்படுத்துதல்களிலும் அவரோடு பங்காளிகளாய் இருக்கிறீர்கள். நீங்கள் அவர் செய்த எல்லாவற்றிலும் அவரோடு பங்காளியாயிருக்கிறீர்கள். இப்பொழுது, அவர் வார்த்தையோடுக் கூடிய அதனுடைய உண்மையான வியாக்கியானமுமாயிருக்கிறார். 123 இப்பொழுது நீங்கள், “ஓ, ஐயா, நாங்கள் வேதத்தை விசுவாசிக்கிறோம். நாங்கள் வேதாகமத்தையே விசுவாசிக்கிறோம்” என்று கூறுகிறீர்கள். 124 ஆனால் இப்பொழுது, நீங்கள் வேதாகமத்தை விசுவாசிப்பீர்களேயானால், இயேசு இதை வேதாகமத்தில் கூறினார், பரிசுத்த யோவான் 14:12-ல், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகைகளைத் தானும் செய்வான்” என்றார். அதுவே வேதாகமத்தின் உண்மையான வியாக்கியானமாய் இருக்கிறது. ஏனென்றால் தேவன் தாமே உங்களுக்குள்ளாக இருந்துத் தம்முடையச் சொந்த வியாக்கியானத்தைத் திரும்பவும் பேசுகிறார். மகிமை! அதுவே உண்மையான வியாக்கியானம், தேவன் உங்களுக்குள் இருந்து தம்முடைய சொந்த வார்த்தைகளை வியாக்கியானித்தல். ஆமென். இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்று கூறவில்லையா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவன் உங்களுக்குள் இருந்து தம்முடையச் சொந்த வியாக்கியானத்தை அளித்தல். நீங்கள் வேறுயாரோ ஒருவரை நோக்கிப் பார்க்க வேண்டியதில்லை. அதாவது, “வார்த்தை இதைக் கூறுகிறது” என்று கூறுங்கள். அதை விசுவாசியுங்கள், அது அதனுடையதை வியாக்கியானப்படுத்தும், ஏனென்றால் அது தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானப்படுத்த உங்களை உபயோகிப்பதாகும். ஆமென். கிறிஸ்துவே அவருடைய சொந்த வார்தையின் ஜீவனுள்ள வியாக்கியானமாயிருக்கிறார். 125 நாம் சிலவற்றை, அவர் எப்படி வார்த்தையை வியாக்கியானிக்கிறார் என்றும், இப்பொழுது, அவர் சரியான வியாக்கியானத்தை உடையவராயிருக்கிறாரா என்றும் பார்ப்போம். 126 இப்பொழுது நாம் இங்கே மெத்தோடிஸ்டுகளண்டையில் சென்றால், அவர்களோ, “நாங்கள் சரியான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளோம்,” என்கிறார்கள். பாப்டிஸ்டுகளோ, அவர்கள், “நாங்கள் சரியான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளோம்” என்கிறார்கள். பிரஸ்பிடேரியன்கள், “நாங்கள் சரியான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளோம்” என்கின்றனர். அவர்கள் எல்லோருமே, “சரியான வியாக்கியானத்தைப்” பெற்றிருக்கிறார்களா? அவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் எல்லோருமே வித்தியாசமாயிருக்கின்றனர். அப்படியானால் ஏதோ காரியம் எங்கோ தவறாயிருக்கிறது. 127 இப்பொழுது நாம் கண்டறியக்கூடிய ஒரே வழி இயேசு யூதர்களிடம் எப்படி வார்த்தையை வியாக்கியானிக்க வேண்டும் என்று கூறின வழியைக் கண்டறிவதேயாகும். ஆமென். கிறிஸ்து அவ்வண்ணமாய் கூறியிருந்தால், அதுவே இதைச் சரிப்படுத்துகிறது. 128 மெத்தோடிஸ்டுகளோ, “ஆலோசனை குழுவில் உள்ள எங்களுடையச் சகோதரர்கள் அதை இந்தவிதமாய் வியாக்கியானிக்கின்றனர்” என்கின்றனர். பாப்டிஸ்டுகளோ “நாங்கள் அதை இந்தவிதமாய் வியாக்கியானிக்கிறோம்” என்கின்றனர். பிரஸ்பிடேரியன்களோ, “நாங்கள் அதை இந்தவிதமாய் வியாக்கியானிக்கிறோம்” என்கின்றனர். 129 ஆனால் இயேசு அதை வியாக்கியானித்த விதமே சரியாயிருக்கிறது. அவர் எப்படி வார்த்தையை வியாக்கியானித்தார் என்பதை நாம் நோக்கிப் பார்ப்போமாக. அவர், “நான் என்னுடைய பிதாவினுடைய வார்த்தையின் கிரியைகளைச் செய்யாதிருந்தால் என்னை விசுவாசிக்காதீர்கள்” என்றார். அதுவே இதைத் தீர்த்துவைக்கிறது. அந்த விதமாகத்தான் அவர் வியாக்கியானித்தார். அவர், “உங்களால் என்னை விசுவாசிக்க முடியாவிட்டால், நான் செய்திருக்கிறக் கிரியைகளையாவது விசுவாசியுங்கள். என் பிதாவின் கிரியைகளை, நான் செய்யாதிருந்தால், விசுவாசிக்காதீர்கள்” என்றார். ஆமென். அதுவே இதனைத் தீர்த்துவைக்கிறது. “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” 130 இப்பொழுது ஏதோ ஒன்று சரியானதாயும், ஏதோ ஒன்று தவறானதாயும் இருக்க வேண்டும். இல்லையென்றால், இரண்டில் ஒன்று, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் கிட்டத்தட்ட விளையாடிக் கொண்டிருக்கிறோமா? நாம் இங்கே சுற்றித் திரிந்து கொண்டு, கிறிஸ்தவர்களாக இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு, இதை செய்துகொண்டு, இதை, மற்றதை, இந்தக் கோட்பாடுகளைச் சேர்ந்து, இந்தவிதமாக பெந்தேகோஸ்தேக்களோடு அல்லது அந்த அல்லது மெத்தோடிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியன், அல்லது பாப்டிஸ்டு, அல்லது கத்தோலிக்கரோடு கரங்களைக் குலுக்கிக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? இவை எல்லாவற்றையுங் குறித்து என்ன? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பூனையும் சுண்டெலியும் இரப்பரை மறைத்து வைத்து விளையாடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோமா? நாம் எங்கே இருக்கிறோம்? 131 அப்படியானால் ஒரே ஒரு வழி, ஒரே ஓர் அஸ்திபாரம் மட்டுமே உண்டு. ஒரே ஒரு நிச்சயமான வழி மாத்திரமே உண்டு, அது இயேசு வார்த்தைக்கு அளித்த வியாக்கியானமாயிருக்கிறது. அல்லேலூயா! அந்த வியாக்கியானமே சரியானதாயிருக்கிறது. “நான் செய்வதாக தேவன் கூறினக் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள்” என்றார். ஆமென். அதுவே வியாக்கியானமாயிருக்கிறது. 132 இன்றைக்கு வியாக்கியானமோ, இயேசு கூறின, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்பதேயாகும். வேதவாக்கியமும் கூட, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று உரைத்துள்ளது. இயேசு, “நான் தேவனிடத்திலிருந்து வந்தேனா அல்லது இல்லையா என்பதை அந்தவிதமாகவே அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். அந்தவிதமாகவே அறிந்துகொள்ளும்படி வர வேண்டும். 133 அவர்கள், “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறும், நாங்கள் ஆபிரகாமையும், எங்கள் பிதாக்களையும் உடையவர்களாயிருந்தோம்” என்றார்கள். அவர்கள் “எங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்களே” என்றார்கள். இயேசுவோ, “அவர்கள் எல்லோரும் மரித்தார்களே” என்றார். “நாங்கள் அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து தண்ணீரைப் பருகினோம்.” “அவர்கள் எல்லோரும் மரித்தார்களே.” 134 மேலும், “ஆனால் வானத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து வந்த ஜீவ அப்பம் நானே” என்றார். “பேசுகிறது நானல்ல, அது எனக்குள்ளே வாசமாயிருக்கிற என் பிதாவாயிருக்கிறது. அவரே தெய்வீக வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் தேவனாய் இருக்கிறார் என்பதை அவர் மீண்டும் நிரூபிக்கிறார், ஏனென்றால் அவர் செய்வதாகக் கூறினதை என்னோடு அவர் சரியாக செய்துகொண்டிருக்கிறார்” ஆமென். அதுவே வேதவாக்கியம். 135 அதுவே ஜனங்களண்டைக்குச் சென்றடையும்படியானச் செய்தியாயிருக்கிறது; ஒரு தொட்டில் அல்ல, ஒரு முன்னணை அல்ல, கிறிஸ்துமஸ் முழு வேதகாமப் புத்தகத்திலுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இயேசுவானவர் தம்முடைய மரணத்தைத் தவிர, தம்முடையப் பிறப்பை ஒருமுறை கூட அவர்களிடத்தில் குறிப்பிட்டுக் கூறியதேக் கிடையாது. 136 இயேசு எப்போதாவது ஒரு முறை கூட, “ஒரு சபையைச் சேர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறவேயில்லை. அவர் எப்போதாவது ஒரு முறை கூட, “ஒரு கோட்பாட்டை ஒப்புவியுங்கள்” என்று சொல்லவேயில்லை. 137 ஆனால் அவரோ, “என்னிடத்திற்கு வாருங்கள்” என்றார். அவர், “என்னிடத்திற்கு வருகிறவனை நான் செய்கிறக் கிரியைகள் என்னைப் பின் தொடருவதுபோலவே அவனையும் பின் தொடரும்” என்றார். 138 “நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால், என்னை விசுவாசிக்காதீர்கள். ஏனென்றால், மேசியா வரும்போது, இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று வார்த்தை உரைத்துள்ளது. ‘அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார்.’ ஆம் ‘அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார். அவர் மோசேயைப் போன்று ஒரு ஞான் திருஷ்டிக்காரராய் இருப்பார்.’ ‘முடவன் ஒரு மானைப்போல் குதிபான். குருடர் பார்வையடைவார்கள். செவிடர் கேட்பார்கள். ஊமையன் பேசுவான். இது அவரால் செய்து காட்டப்படும், எப்படியாய் அவரால் மேசியாவின் அடையாளங்களைச் செய்ய முடிந்தது.’ இப்பொழுது மேசியாவின் அடையாளங்கள் என்னுடைய ஊழியத்தை ரூபகாரபடுத்தவில்லையென்றால்,” “அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள் என்றே அவர் கூறினார். ஆனால், இங்கேதான் நீங்கள் வார்த்தையை வியாக்கியானிக்கும் வழி இருக்கிறது.” அவர், “நான் இந்த அடையாளங்களைப் பெற்றிருக்கவிலையென்றால், அப்பொழுது இதை விசுவாசிக்காதீர்கள். ஆனால் நான் அந்த அடையாளங்களைத் தோற்றுவித்தால், அப்பொழுது நான் வியாக்கியானிக்கும் வார்த்தையை உங்களால் விசுவாசிக்கமுடியாவிட்டால், அடையாளங்களை விசுவாசியுங்கள், ஏனென்றால் அவைகள் வார்தையைக் குறித்துப் பேசுகின்றனவே.” அதுவே அதனுடைய உண்மையான வியாக்கியானமாயிருக்கிறது. அதுதான் அது. அதுவே செய்தியாயிருக்கிறது. 139 நீங்கள் வேறுயாருடைய வார்த்தையையும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் எந்தச் சபையிலும் சேர்ந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் ஒரு சபையில் சேர்ந்துகொள்ள முடியாது. நீங்கள் இந்த ஸ்தாபனங்களில் சேர்ந்துகொள்ள முடியாது. ஆனால் தேவனுடைய சபையிலோ, நீங்கள் கல்வாரியிலிருந்து அதற்குள்ளாகப் பிறக்கின்றீர்கள். 140 நீங்களோ, “தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக! நானும் கூட சகோதரன் பிரான்ஹாம்” என்று கூறலாம். அப்படியானால் இயேசு கூறினார். புரிகின்றதா? “நான் செய்கிற கிரியைகளை…” என்ன? அவர், “நான் செய்கிறக் கிரியைகள், அவைகள் சாட்சிப் பகருகின்றன.” நீங்கள் அதைக் காணவில்லையா? வேறு வார்த்தைகளில் கூறினால், “மேசியாவாவின் அடையாளங்கள், மேசியா என்ன செய்ய வேண்டியவராயிருந்தார் என்பதை உங்களால் காண முடியவில்லையா? நான் சரியான வார்த்தையின் வியாக்கியானத்தைப் பெற்றுள்ளேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறதில்லை, பின்னை ஏன் என் பிதா அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்? உங்களுடைய ஸ்தாபனங்களின் மேல் நான் மிகவும் கண்டிப்பானவனாயிருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்,” அவரோ, “நான் அடிப்படை மாற்றத்தை மிகவும் தீவிரமாக விரும்புவன் என்று நீங்கள் கருதலாம். நான் ‘ஒரு பித்துபிடித்த மனிதன்’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனக்குப் ‘பிசாசு பிடித்துள்ளது,’ நான் என்னுடையச் சிந்தையை இழந்துவிட்டிருக்கிறேன் என்றெல்லாம் கூறுவீர்கள்” என்றார். 141 இயேசு பித்துப்பிடித்தவராயிருந்தார் என்றே அவரை அவர்கள் கூறினர். பித்துப்பிடித்தல் என்பதன் பொருள் “பைத்தியம்.” “நீர் பைத்தியக்காரனாயிருக்கிறீர். நீர் எங்களுடையக் குழுக்களைச் சேர்ந்துகொள்ளவில்லை. நீர் ஒரு பித்துப்பிடித்த மனிதரைப்போல இங்கே வெளியே இருக்கிறீர். நீர் உம்முடையச் சிந்தையை இழந்துவிட்டிருக்கிறீர்.” 142 அப்பொழுது இயேசு அவர்களிடத்தில், “அப்படியானால் நீங்கள் தேவனுடையவர்களாயிருந்தால், தேவனுடைய அடையாளம் எங்கே? நீங்கள் தீர்க்கதரிசிகளில் விசுவாசங்கொண்டிருந்தால், உங்களோடுள்ள தீர்க்கதரிசிகளின் அடையாளம் எங்கே? நான் சரியான வியாக்கியானத்தைப் பெற்றிருக்கிறேன் என்று உங்களால் விசுவாசிக்க முடியாவிட்டல், அடையாளங்களை விசுவாசியுங்கள், ஏனென்றால் நான் சரியாயிருக்கிறேன் என்று அவைகள் சாட்சிப் பகருகின்றன” என்று இதை கூறியிருக்கக் கூடும். அல்லேலூயா! “என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே. நான் சரியா அல்லது இல்லையா என்று அவைகளே சாட்சிப் பகருகின்றன. பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் அதைப் பின் தொடர்ந்து, அதனண்டை வரும். எந்த மனிதனுமே பிதாவானவர் அவனை அழைத்திருந்தாலொழிய வரமாட்டான்.” சரி. 143 இன்னும், “அவர் அநேகக் கிரியைகளைச் செய்திருந்தார்” என்று வேதம் கூறியுள்ளது, “அதே சமயத்தில் அவர்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லை, ஏனென்றால் ஏசாயா, ‘அவர்களுக்கு காதுகளிருந்தும் கேட்கமாட்டார்கள்; கண்களிலிருந்தும் காணமாட்டார்கள்”’ என்று கூறினான். அவர்கள் ஒரு வெளவாலைப் போல குருடாயிருக்கின்றனர். அவர்களால் இன்னமும் அதைக்காண முடியவில்லை, ஏனென்றால் அவர்களால் காண முடியாது என்று தீர்க்கதரிசி கூறினான். இப்பொழுது, அது அப்பொழுதிருந்தவிதமாகவே இன்றைக்கும் அதேக் காரியமாகவே உள்ளது. ஆம். 144 அவர், “உங்களால் முடியவில்லையென்றால்…நான் கிரியைச் செய்கிறதில்லை. செய்கிறதும், வார்த்தைகளைப் பேசுகிறதும் நானல்ல. வேறுவிதமாய்க் கூறினால், கிரியைகளைச் செய்கிறது நானல்ல. அது என் பிதாவாயிருக்கிறது. தேவன் என்னவாயிருந்தார் என்று நீங்கள் அறிந்திருந்தால், தேவன் சிருஷ்டிகராயிருந்தார். மோசேயின் மேல் இருந்த தேவனாயிருந்தார். தேவன் மோசேக்குள் இருந்து என்னுடைய நாளை முன்னுரைத்தார். தேவன் பழைய ஏற்பாட்டில் இருந்தார்” என்று கூறினார். அந்தப்படியே கூற வேண்டுமானால், “‘என்றோ ஒரு நாள் அந்தத் தலையாய தீர்க்கதரிசி வருவார், அவரண்டை பிள்ளைகள் கூட்டிச் சேர்க்கப்படுவர்’ என்று உங்களிடம் கூறின அந்தத் தீர்க்கதரிசிகள் மேல் தங்கியிருந்தவர். நான் உங்களுக்கு வார்த்தையை வியாக்கியானித்துக் கொண்டிருக்கிறதை உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றால், அப்பொழுது அடையாளத்தை விசுவாசியுங்கள், ஏனென்றால் அவைகள் என்னைக் குறித்துப் பேசுகின்றன” என்றார். 145 ஓ, அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அவர்களால், அவர்களால் அதைக் காண முடியவில்லை. அவர் மாம்சத்தில் தேவனாயிருந்தார். ஏனென்றால் அவர் என்னவாயிருந்தார்? அவர் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருந்தார். அவர் தேவன் வாக்குப்பண்ணியிருந்தவராய் இருந்தார். 146 பிரான்ஹாம் கூடாரமே, கவனியுங்கள். கிறிஸ்துமஸ் தின இரவுக்கு முந்தின இந்த நாளில் உங்களுடைய கச்சையைக் கட்டிக்கொண்டு முன் வாருங்கள். புரிகிறதா? 147 அவர் அவ்வாறில்லாதிருந்திருந்தால், தேவன் அவரை ரூபகாரப்படுத்தியிருக்கமாட்டார். நிச்சயமாகவே, வேறுவார்த்தைகளில் கூறினால், அவர், “உங்களில் எந்தக் குழுவினரையாவது (பரிசேயர்கள், சதுசேயர்கள் அல்லது அவர்கள் என்னவாயிருந்திருந்தாலும்), உங்களுடைய மனிதர்களில் எந்த ஒருவரையாவது, உங்களுடைய எந்த பிரதான ஆசரியரையாவது, உங்களுடையப் பண்டிதர்களில் எந்த ஒருவரையாவது, அவருடைய வார்த்தையினூடாகப் பேசுவதற்கும், அதை வெளிப்படுத்துவதற்கும், அதைச் சரியென்று கூறுவதற்கும் தேவன் உபயோகிக்கிறார?” என்று கூறியிருக்கக் கூடும். 148 நல்லது, அவர்களோ, “எங்களுடையப் புருஷர்கள் கல்விப் பயின்றிருக்கின்றனர். நாங்கள் அறிவுத்திறனுள்ளவர்கள். நாங்கள் தலைமுறை தலைமுறையாக அந்த வேதாகமத்தை அறிந்துள்ளோம்” என்று கூறியிருந்திருப்பர். 149 “இருக்கட்டுமே, அப்படியானால், அது தேவனுடைய வார்த்தையாயிருக்குமேயானால், அப்பொழுது தேவன் ஏன் அதை அந்த மனுஷர்களுக்குள் மீண்டும் ஜீவிக்கச் செய்கிறதில்லை?” 150 பாருங்கள், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,” மூன்றாய் அல்ல. “நாங்கள் ஒன்றாயிருக்கிறோம்.” தேவன் அவருக்குள் இருக்கிறார். தேவன் அவர் மூலமாகப் பேசுகிறார். அவர் இனிமேல் அவருக்கே சொந்தமானவரயிருக்கிறார், ஆனால் அவர் மானிட உதடுகளினூடானத் தேவனுடையச் சத்தமாயிருக்கிறார். அல்லேலூயா! 151 அவருக்குள்ளிருக்கிற ஒவ்வொரு விசுவாசியும் இன்றிரவு அந்தவிதமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான், அவனுடைய வார்த்தைகள் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் போலாகும் வரையில் முழுமையாய் ஒப்புக்கொடுக்கும்படியாய் அவ்வளவாய் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான். அவர் பேசுகிறார், அந்த வார்த்தை மாம்சமாக்கப்பட்டிருக்கிறது. அவர் பேசுகிறார், அந்த வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. “நான் செய்கிற கிரியைகளை நீங்கள் கூட செய்வீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.” 152 ஏசாயா 42-ம் அதிகாரத்தில் கூறினார். நாம், “பெரிய வெளிச்சம் தோன்றிற்று” என்று வாசித்தோம். வெளிச்சமாயிற்றே! ஓ, நான் பொருளைவிட்டு அகன்று செல்ல விரும்பவில்லை. ஆனால் என்றென்றுமாய்ப் பிரகாசித்த அந்த மகத்தான வெளிச்சம் அந்தத் தாழ்மையான, சிறிய நசரேயனிடத்தில் பிரகாசிக்கப்பட்டது: நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் இல்லாதிருந்த ஒரு மனிதர்; உலகப்பிரகாரமான பேச்சின்படி கல்வியறிவற்ற ஒரு மனிதர்; சடங்காச்சாரங்களையும், இந்த உலகத்தின் காரியங்களையும் அறிந்திராத ஒரு மனிதர். ஆனால் பிசாசுகளைக் கட்டி, மரித்தோரை எழுப்ப முடிந்ததே, பிசாசுகள் நடுங்கினதே. 153 தேவன் பரலோகத்திலிருந்து அவரை அடையாளங்கண்டு, “இவர் என்னுடைய நேச குமாரன்” என்று விளம்பினார். பொருட்செல்வப் பெருக்குடையோர் முன்பாக அல்ல, ஆனால் அவர் அழைத்திருந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்டக் குழுவினருக்கு முன்பாகப் பேசினார். மகத்தான வெளிச்சமாயிற்றே! 154 ஏன்? ஒரு மகத்தான வெளிச்சம் அவருடைய வார்த்தையிலிருந்துப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. வார்த்தை என்னவாயிருந்தது? கிறிஸ்து. அவர் என்னவாயிருந்தார்? வார்த்தை ஜீவனைக் கொண்டு வந்தது. ஆதியாகமம் 1-ல், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று அவர் கூறினபோது அவர் செய்ததைப் பார்க்கிலும் வார்த்தையானது ஜீவனைக் கொண்டுவந்து, ஒரு பெரிய வெளிச்சத்தை அளித்தது. அது ஒரு சிருஷ்டிப்பின் வெளிச்சமாய், ஒரு அழிவுள்ள சிருஷ்டிப்பாய் இருந்தது, அது விழுந்துபோக வேண்டும். ஆனால் அவருடைய வார்த்தை நித்திய ஜீவனாய், நித்திய வெளிச்சமாயிருந்தது. ஒரு மனிதன் அதை விசுவாசித்தபோது, அவனுக்கு நித்திய ஜீவன் உண்டாயிருந்தது. 155 மத்தேயு, 4-ல், “மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” என்றுள்ளது. “புறஜாதிகளுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது,” அவர்கள் தங்களுடைய விக்கிரகங்களினால் பீடிக்கப்பட்டு, தேவனால் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர் ஒரு ஒளியாக வந்தார். 156 அவர் என்னக் கூறினார்? “உம்முடைய வசனம் என்—என் பாதைக்கு வெளிச்சமும், என் கால்களுக்குத் தீபமும், எனக்கு வழிகாட்டியுமாயிருக்கிறது.” 157 இன்றைக்குத் தேவனுடைய வெளிச்சம் வெளிப்படுத்தப்பட்டத் தேவனுடைய வார்த்தையாய், வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சமாய் இருக்கிறது. வெளிச்சமானது தேவனுடையக் கிரியைகளாய், தேவனுடைய வார்த்தையில் உரைக்கப்பட்டு ஜீவனைக் கொண்டுவந்தது. அது சிருஷ்டிப்பின் விடியலில் இருந்ததைப் பார்க்கிலும் ஒரு மகத்தான வெளிச்சமாய் இருக்கிறது. ஆமென். விளக்கிற்கு, பாதைக்கு வெளிச்சமாய் உள்ளது. என்னே! ஓ தேவனே! வெளிச்சம், வார்த்தையாயிற்றே! 158 நாம் இன்றைக்கு அந்தகாரத்தில் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களினாலும் நிரப்பப்பட்டிருக்கின்றபடியால், உணர்ச்சிவசப்படுதல்களினாலும், மட்டுமீறிய மத வெறியினாலும் நிரப்பப்பட்டிருக்கின்றபடியால் சத்தியமாயிருக்கிற இந்த வார்த்தையையுங்கூட மறுதலிக்கும் எந்தவிதமான ஓர் ஆவியையுடைய கல்லறைகளுக்கும் இருதயங்களைத் திறந்து, “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அந்நியபாஷைகளினால் பேசுதல், தீர்க்கதரிசிகள் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்னரே மரித்துப்போய்விட்டனர்” என்று கூறுகிறோம். 159 ஆகையால் அந்தகாரத்தின் மத்தியில், கோட்பாட்டின் அந்தகாரத்தில், ஸ்தாபனங்களின் அந்தகாரத்தில் தேவனைக் காணும்படியாக அவருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதை விசுவாசிக்கும் ஒரு கூட்ட மக்கள் அவருடைய ஜீவனையும் அவருடைய வெளிச்சத்தையும் பிரகாசிக்கிறார்கள். அது வெளிச்சத்தைப் பார்க்கிலும் மேலானதாயிருக்கிறது. அது சிருஷ்டிப்பின் விடியலில் இருந்ததைப் பார்க்கிலும் மேலான நித்திய வெளிச்சமாயிருக்கிறது. “வெளிச்சம் உண்டாகக்கடவது; வெளிச்சம் உண்டாயிற்று.” நிச்சயமாக. 160 இப்பொழுது, இயேசு அவர்களைப் பெத்லகேமுக்குக் கொண்டுவரப்போவதாக ஒரு போதும் கூறவில்லை. இயேசு கிரேக்கரிடத்தில், அவர்கள் வந்தபோது, “இப்பொழுது, ஒருநிமிடம், நீங்கள் அதைக் காண வேண்டுமென்றால், நான் பிறந்த பெத்லகேமுக்கு உங்களைத் திரும்பக் கொண்டுச் செல்வேன். அப்பொழுது அது அங்கே எப்படி சம்பவித்தது என்று நான் உங்களுக்குக் கூறுவேன்” என்று ஒருபோதும் கூறவேயில்லை. அது அதுவாயிருக்கவில்லை. 161 அவர்கள் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்றிருந்தபடியால், அப்பொழுது அவர் ஒரு எதிர்கால இடத்தையே அவர்களுக்குச் சுட்டிக் காண்பித்தார். “நீங்கள் என்னை அறிந்துகொள்ள வேண்டுமென்றால்,” வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் உங்களை நான் பிறந்த பெத்லகேமுக்குத் திரும்ப அழைத்துச் சென்று, அதைக் குறித்த எல்லாவற்றையுங் கூறமாட்டேன். உங்களுக்காக நான் சிலுவையிலறையப்படப்போகிற ஓர் இடத்தையே நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டுவேன். அங்கே நீங்கள் என்னோடு சிலுவையில் அறையப்படுவீர்களேயானால், உங்களுடையச் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றுவீர்களேயானால், அப்பொழுது நான் யாராயிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மற்றபடி நீங்கள் உங்களுடையத் தொன்மையான அறிவார்ந்த கலைகளின் மூலமாக, அதிலிருந்து இதை ஒருபோதும் கற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளவே மாட்டீர்கள்” என்பதாகும். 162 “நல்லது” நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, ஆனால் நாங்கள் அதை வேதாகம அறிவுத்திறன் கொண்டப் பட்டப்படிப்புகளினூடாகக் கற்றுக்கொள்கிறோமே” என்று கூறலாம். இல்லை. நாம் கற்றுக்கொள்ளுகிறதில்லை. நாம் அதை வேதமாக அறிவுத்திறன்கொண்ட பட்டப்படிபினூடாகக் கற்றுக்கொள்வோமேயானால், பின்னை ஏன் பரிசேயர்கள் அதைக் கற்றுக்கொள்ளவில்லை? அது வேதாகம அறிவுத்திறன் கொண்ட பட்டப்படிப்பினூடாகக் கற்பிக்கப்படுகிறதில்லை, ஏனென்றால் மிக அதிகமான ஓவியக் கலைஞர்கள் அதற்கு வண்ணந்தீட்ட முயன்றிருக்கின்றனர். ஆனால் வேதமே சரியானதாய் இருக்கிறது, ஆனால் தேவன் ஓவியக் கலைஞராக இருக்கிறார். 163 இன்றையக் கோட்பாடுகளோ, “இதைச் சேர்ந்து கொள்ளுங்கள், இந்த தேவத் துதிப்பாடல்களைக் கூறுங்கள். அப்போஸ்தல சபையைச் சேர்ந்துகொள்ளுங்கள். கரங்களைக் குலுக்குங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. அது ஸ்தாபன சம்பந்தமான கோட்பாடாய் இருக்கிறது. சரி. ஓவியனோ அந்தப் படத்திற்கு அந்தவிதமாக வண்ணந்தீட்டவில்லை. 164 ஓவியரோ, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் செய்கிறக் கிரியைகளைத் தானும் செய்வான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றே அதை வண்ணந்தீட்டினார். அந்தவிதமாகத்தான் அதை வண்ணந்தீட்டுபவர் வண்ணந்தீட்டினார். ஆகையால் தேவன் அதைப் பிரதிபலிக்கும்போது, நீங்கள் அந்தச் சரியான ஓவியத்தை மனதில் பதியவைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்குப் புறம்பே நீங்கள் போலியானப் பிரதியைப் பெற்றுகொண்டீர்கள். ஆமென். இன்றிரவே அந்தப் பழைய போலியானப் பிரதியை எடுத்து, ஏதோ ஒருவிதமான ஒரு கோட்பாட்டை எடுத்து அந்தக் காரியத்தை வாசலுக்கு வெளியே எறிந்துப்போடுங்கள். வேதாகமத்தினுடைய சுவிசேஷ வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், வண்ணந்தீட்டுபவரோ கிறிஸ்துவை உங்களுக்குள் வண்ணந்தீட்டட்டும். ஆமென். அதுதான் வழி. அதுதான் இது. 165 இல்லை, அவர் அவர்களை ஒருபோதும் முன்னணைக்குக் கொண்டு செல்லவில்லை. அவர் அவர்களை ஒருபோதும் கிறிஸ்துமஸிற்குக் கொண்டு செல்லவில்லை. 166 ஏசாயா, “அவருடைய நாமம்…என்றழைக்கப்படும்” என்றான். அவன் அதே அதிகாரத்தில், “அவருடைய நாமம்…எனப்படும்…” என்றார். இல்லை, ஏசாயா 55-ம் அதிகாரம். அவன், “அவருடைய நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, என்றழைக்கப்படும்” என்றான். ஆமென். 167 எனக்கு நேரம் இருந்திருந்தால் நலமாயிருக்கும். நான் முடிக்க வேண்டும். நான், “ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, அதிசயமானவர்” என்ற அவைகள் ஒவ்வொன்றின் பேரிலும் ஒரு பாடத்தை எடுக்க விரும்புகிறேன். 168 நாம் ஒரு நிமிடம் அதிசயமானவர் என்றக் கருத்தினைச் சற்று மனதில் பதிய வைத்துக்கொள்வோமாக, அதிசயமானவர். ஓ, அவர் அதிசயமானவராயிருந்தார் என்று ஏசாயா கூறினான். அவர் கூறின சிலக் காரியங்களைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போமாக, அதுவே அவரை அதிசயமாக்கினது. அவரை அதிசயமாக்கினது எது? அவர், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இதைக் கூறினபோதேயாகும், அதிசயம். 169 பரிசேயர்கள் அதற்கு என்னக் கூறியிருந்திருக்க முடியும் என்று எனக்குச் சொல்லுங்கள். தேவன் அதை ஆதரித்துக்கொண்டிருந்திருந்தால், பிரதான ஆசாரியன் அதற்கு என்ன கூறியிருந்திருக்க முடியும் என்று எனக்குச் சொல்லுங்கள். புரிகிறதா? 170 அவர், “நான் இப்பொழுது கிரியைகளைச் செய்யாதிருந்தால், நான் கூறுகிற எந்தக் காரியத்தையும் விசுவாசிக்காதீர்கள். ஆனால் நான் இதைப் பிரசங்கித்தால், அப்பொழுது அதைச் செய்யும்படிக்கே தேவன் என்னை அனுப்பினார் என்பதையே அது காண்பிக்கிறது” என்றுக் கூறினார். 171 இப்பொழுது கூறினதோ, அவர், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார். “நானும் என் பிதாவும் மூன்றாயிருக்கிறோம்” என்று கூறவில்லை. இயேசுவேக் கூறினார். இப்பொழுது கோட்பாடோ, “நானும் என் பிதாவும் மூன்றாய் இருக்கிறோம்” என்று கூறுகிறது. ஆனால் வேதம் கூறினதோ, இயேசு, “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார். அது அதிசயமாயிருக்கிறது. எப்படித் தேவன், “மாம்சமானார்” என்று பார்த்தீர்களா? அல்லேலூயா! ஏதோ ஒரு இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது நான்காவது நபராய் அல்ல; ஆனால் தேவன்தாமே. இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். அவரோடு வாதிடுங்கள், என்னோடல்ல. நான் சரியாக அவர் கூறினதையேக் கூறிக்கொண்டிருக்கிறேன். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். கிரியைகளைச் செய்கிறது நானல்ல. அது என்னுடையப் பிதாவாயிருக்கிறது. அவர் எனக்குள்ளே வாசம் செய்கிறார். நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லையென்றால்; வார்த்தையை விசுவாசியுங்கள், ஏனென்றால் அவர் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தை மாம்சமாக்கப்பட்டிருக்கிறது, நான் தான். ஆதியிலே வார்த்தை இருந்தது.” 172 அதே சுவிசேஷ எழுத்தாளார், யோவான், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தைத் தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தைத் தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என்றான். 173 அதுவே அவரைத் தேவனாக, அந்த மாறாத நபராக ஆக்குகிறது. தேவன் வார்த்தையாயிருப்பாரேயானால், அவர் வார்த்தையாயிருக்கிறார். அப்பொழுது, “நானும் என் பிதாவும் ஒன்றேயாகும்.” ஓ, அது அதிசயமாயிருக்கிறது! ஆம் ஐயா. 174 ஆகையால் நாம் அதன் பேரில் அநேகக் காரியங்களைக் கூறக்கூடும், அதிசயம், அவர் கூறினக் காரியங்களாயிற்றே! 175 அவர் கூறின மற்றொரு காரியம், “நான் உலகத்தின் ஒளியாயிருக்கிறேன்” என்றார். ஓர் ஆசாரியன் அதைக்கூற முடிந்ததா என்று எனக்குச் சொல்லுங்கள். அதைக் கூறக்கூடிய ஒரு ஸ்தாபனத்தை எனக்குச் சொல்லுங்கள். அதைக் கூறக்கூடிய ஒரு கோட்பாட்டை எனக்குச் சொல்லுங்கள். அது அதிசயமாயுள்ளது. 176 “நானே சத்தியம்” ஓ, என்னே! நம்முடையக் கோட்பாடுகளோ சத்தியத்திற்கு இலட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ளனவே. அந்தக் கோட்பாடு தேவனை வெளிப்படுத்த முடியாது. கோட்பாட்டினால் முடியாதே. 177 எலியா கர்மேல் பர்வதத்தின்மேல், “தேவன் தேவனாயிருந்தால், அவரே உத்தரவு அருளட்டும்” என்று கூறினது போலவேயாகும். கோட்பாடு அதைச் செய்யாது. இல்லை, ஐயா. 178 ஆனால் தேவன் அதைச் செய்வார். தேவன் யார்? வார்த்தையே, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. அவர் அதைச் செய்வார். 179 “நானே உலகத்தின் ஒளியாயிருக்கிறேன். நானே உலகத்திலுள்ள சத்தியமாயிருக்கிறேன். நானே வழியாயிருக்கிறேன்.” அவரையல்லாமல் வேறே வழியே இல்லை. அவ்வளவுதான். ஒரு கோட்பாட்டினூடாகச் செல்லாதேயுங்கள். “என்னிடத்திற்கு வாருங்கள்.” புரிகிறதா? “நான் வழியும், ஒளியும், சத்தியமுமாயிருக்கிறேன்.” அவரே அந்த எல்லாமுமாயிருந்தார். அவைகள் அவர் கூறின அதிசயமான வார்த்தைகளாயிருக்கின்றன. “நானே வழி, நானே சத்தியம். நானே ஒளி. நானே—நானே முந்தினவர்; நானே பிந்தினவர். நானே ஆதி; நானே அந்தம். நானே இருந்தவர், இருக்கிறவர், வருகிறவர். நான் தாவீதின் வேரும் சந்ததியுமாயிருக்கிறேன். நானே விடிவெள்ளி நட்சத்திரம். நானே அல்பா முதல் ஓமெகா வரையுமாயிருக்கிறேன். நானே எல்லாமுமாயிருக்கிறேன். நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். அவர் எனக்குள்ளே வாசம் பண்ணுகிறார். நானே அவர். அவரே நானாயிருக்கிறேன்.” அவர்கள், “நீர் ஒரு மனிதனாயிருக்க, உம்மைத் தேவனாக்கிக் கொள்ளலாமா?” என்று கேட்டனர். 180 ஓ, அவர் பரிசேயரிடத்தில், “நீங்கள் தேவனுடைய வார்த்தையையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். நீங்கள் அதை அறியாமல் தப்பான எண்ண்ங்கொள்ளுகிறீர்கள்” என்று ஒரு முறை கூறினது போன்றேயாகும். நிச்சயமாகவே, அதிசயமான வார்த்தைகளாயிற்றே! அதிசயமாயிற்றே! நாம் ஒருமுறை அதிசயமான கிரியைகளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போமாக. அவர் என்ன செய்தார்? 181 அவர் என்னவாயிருந்தார்? அவர் அதிசயமானவராய் இருப்பார் என்று ஏசாயா கூறினான். அவன் அவரை அழைத்தபோது, “ஆலோசனைக்கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா” என்று இந்த எல்லாப் பெயர்களினாலுமே அவனால் அழைக்க முடிந்தது. அவன், “அவர் சரியாக அதிசயமானவரே” என்றான். அதிசயமான வார்த்தைகளாயிற்றே! 182 இப்பொழுது நாம் ஒரு நிமிடம் அதிசயமான கிரியைகளைக் குறித்துப் பேசப்போகிறோம். அவர் என்ன அதிசயமானக் கிரியைகளைச் செய்திருந்தார்? 183 ஒரு நாள் நாயீன்—நாயீன் ஊரிலிருந்து ஒரு சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. ஒரு விதவை, அவளோடிருந்த ஒரே மகன் மரித்துப்போய் ஒரு பாடையிலே வைக்கப்பட்டு, விறைத்துப்போய், பிணமானது அழுகாதபடி தைலமிடப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டப் பிரேதக் குழிக்குக் கொண்டு செல்லப்பட்டான். அப்பொழுது அவரோ நாசரேத்திலிருந்து அந்த வழியாய் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடையப் பாதமோ, கடுமையான வலியோடும், புழுதியாயும், களைப்புற்றும், விடாய்த்துப்போயுமிருந்து. அவர் அந்தக் கூக்குரரைக் கேட்டார். அப்பொழுது அவர் நோக்கிப் பார்த்தார். ஓர் இளம் விதவை வீதியிலே புலம்பிக்கொண்டு வந்தாள். அவளுடையப் பையன், அவளுடைய ஒரே மகன் மரித்துப்போய் அந்தப் படுக்கையிலே கிடத்தப்பட்டிருந்தான். 184 அங்கே அவன் இயேசுவானவர் இருந்த இடத்தின் அருகே கடந்து சென்றபோது தீர்வு உண்டானது. மரணமும் ஜீவனும் ஒன்று சேர முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்; ஏதாவது ஒன்று போயாக வேண்டும், அவர், “பாடையைச் சுமந்து வந்தவர்களை நில்லுங்கள்” என்றார். பின்னர் நடந்து சென்று அந்தப் பையனைத் தொட்டார். ஒருகால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப் பையனுக்குளிருந்து போய்விட்டிருந்த ஜீவன் திரும்பி வந்தது. என்னால் பிணத்தை மூடியிருந்த துணி அசையத்துவங்குவதைக் காண முடிகிறது. ஜனங்கள் உற்றுப் பார்க்கத் துவங்குவதையும் காண முடிகிறது. மரித்துப்போயிருந்த ஒரு மனிதன் ஒருவேளை தன்னுடையக் கரங்களைத் தன்னுடையத் தாயாரின்மேல் சுற்றி போட்டிருக்கலாம். அதுவே தேவனுடையக் கிரியைகளாயிருக்கின்றன. அதிசயமாயிற்றே! அது அவ்வாறிருந்திருக்காதா? [சபையோர், “ஆமென்” என்கிறனர்.—ஆசி.] நிச்சயமாகவே அதிசயமாயிருந்தது. 185 ஓர் அருமையான மனிதனாயிருந்து வந்த ஓர் இளம் ஆசாரியன் யவீரு என்பவனைக் காண முடிகிறது. அவன் இயேசுவை விசுவாசித்தான், ஆனால் அவன் அதைத் தன்னுடையக் கூட்டாளிகளினிமித்தமாக அப்படியே வெளிக்காட்டாமல் அடக்கி வைத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. 186 இன்றைக்கும் அதுபோன்ற எத்தனையோ இரகசிய விசுவாசிகள் இருக்கின்றனர். அவர்களைத் தங்களுடையச் சபையைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகின்றனர். பார்த்தீர்களா? கோழைகள், தேவன் அதை உபயோகப்படுத்த முடியாது. தேவனோ அங்கே பின்னிடாமல் உறுதியாய் நிற்கக்கூடிய ஒரு மனிதனையே விரும்புகிறார். அதற்கு மரணமே நேரிட்டாலும், அதற்கு முத்திரைப்போடு. “சரீரத்தை அழிக்கக் கூடியவனுக்கு நீங்கள் பயப்படாமல் சரீரத்தை அழித்து, ஆத்துமாவை நரகத்திற்கு அனுப்பக்கூடியவருக்கே பயப்படுங்கள்.” 187 யவீரு அவர் இந்த—இந்த ஊழியக்காரனுடைய வீட்டிற்குச் செல்வதை நான் காண்கிறேன். பன்னிரெண்டு வயது கொண்ட ஒரு சிறுமி, ஒரே பிள்ளையாயிருந்த சிறுபெண் மரித்து விரைத்துப்போனவளாய் அந்தப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கு நடந்து சென்றார். அவளுடையச் சிறிய, ஜீவனற்ற சரீரம் அங்கே கிடத்தப்பட்டிருந்தது. அவளுடையச் சிறு கரங்கள் வெளுத்துப்போயிருந்தன. அவளுடைய நகங்கள் வெள்ளையாய் மாறியிருந்தன. அவளுடைய உதடுகளோ கீழே வறண்டு சுருங்கியிருந்தன. காய்ச்சல் அல்லது ஏதோ ஒன்று அவளைக் கொன்றுப்போட்டிருந்தது. அவளுடையச் சிறிய கண்கள் அப்படியே நின்றுபோய் மூடப்பட்டிருந்தன. ஏதோ ஒன்று ஒருவேளை அவைகளின் மேல் வைக்கப்பட்டிருந்திருக்கலாம். அவளுடையச் சிறியக் கூந்தல் வாரப்பட்டிருந்தது. அங்கே ரோஜாக்களும் மற்றக் காரியங்களும் அவளைச் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. தாயும், தந்தையும் கதறிக்கொண்டிருந்தனர். அண்டை வீட்டாரும் கதறிக்கொண்டிருந்தனர். அவருடைய ஒரே பிள்ளையே மரித்துப் போய்விட்டிருந்தது. 188 அவர் அந்த அறைக்குள் நடந்து செல்வதை நான் காண்கிறேன். ஆமென். அவர் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்தார். அவர் அவர்கள் எல்லோரையுமேக் கண்டார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தனர். அவரோ அவர்களை அறையைவிட்டு வெளியேற்றினார். அது அதிசயமானது. பார்த்தீர்களா? ஒரே மனிதனால் முழுக் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடிந்தது. ஏன் அவர்கள் எந்த ஒரு காரியத்தையுமே கூறவில்லை? அவர்கள் ஏதோ ஒன்றையுங் கூறுவதற்குப் பீதியுற்றிருந்தனர். 189 இன்றைக்கு ஏன் அவர்கள் வார்த்தையைக் கண்டனம் பண்ணுகிறதில்லை? அவர்கள் அதைக் கூறவே பீதியுற்றிருக்கின்றனர். அவ்வளவுதான். 190 அந்த அறைக்குள்ளாக நடந்து சென்று, அந்தச் சிறிய குளிர்ந்துப்போன கரத்தைப் பற்றி எடுத்து, அறிந்திராத பாஷையில் அங்கு எங்கோ அப்பாலேப் பேசினார். அப்பொழுது அந்தப் பிள்ளையின் ஆவியானது திரும்பிவர, அவள் மீண்டும் ஜீவித்தாள். அதிசயமான கிரியைகளாயிற்றே! ஆம், அது அவ்வாறுதான் இருந்தது. அது அதிசயமான கிரியைகளாய் இருந்தது, அவர் அதிசயமானவராயிருந்தார் என்பதை நிரூபித்தது. 191 நான் லாசருவைப் பற்றியுங்கூட கூறலாம், அவர்கள் அவனுடையச் சரீரத்தைத் தைலமிட்டு, நான்கு நாட்களுக்கு முன்னரே அவன் மேல் நறுமணப்பொருட்களை அடுக்கடுக்காக வைத்து, இந்த வாலிப மனிதனைத் துணியால் சுற்றி சுற்றி சுருட்டி மூடிவிட்டிருந்தனர். அவனோ அங்கே கல்லறையில் அழிகிப்போய் கிடந்தான். அவனுடைய மூக்கோ அழுகி விழுந்துபோயிருந்தது. அவனுடைய உதடுகளோ அவனுடைய முகத்திற்குள்ளாகவே அமிழ்ந்து போயிருந்தன. தோல் புழுக்களோ அவனைத் தின்ன ஆரம்பித்துவிட்டிருந்தன. அவனுடைய ஆத்துமாவோ எங்கோ நான்கு நாள் பிரயாணமாய் சென்றிருந்தது. 192 நான் அவரை, அவருடைய சிறியக் கூனிப்போயிருந்த தோள்பட்டைகளைக் காண்கிறேன். ஓ, என்னே! உலகமோ, “அதைப் பாருங்கள். அந்த மனிதனைப் பாருங்கள். அவரைப் பாருங்கள். நீங்கள் அவரைத் தேவன் என்றழைத்தீர்கள். அவரோ மரணத்துக்குரியக் கண்ணீரோடு அழுதுகொண்டே கல்லறையண்டைக்குச் சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறியிருந்திருக்கும். அவர் கண்ணீர்விட்டார் என்று வேதம் கூறினது. அவர் கல்லறைக்குச் சென்றபோது, அவருடையக் கன்னத்திலிருந்து கண்ணீர் வழிந்தோடி விழ, மூக்கினால் உறிஞ்சினார். அப்பொழுது அவர் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால், அவரோ, “கல்லைப் பின்னால் புரட்டிப்போடுங்கள்” என்று கூறுவதை நான் காண்கிறேன். ஆமென். ஆமென். 193 அவர் காட்சியை மாற்றிப்போட்டார். நான்கு நாட்களாக மரித்துப்போயிருந்த லாசருவோ தன்னுடையக் காலூன்றி எழும்பி நின்று, மீண்டும் ஜீவித்தான். அவனைச் சுற்றியிருந்தப் போர்வைகளினூடாக நறுமணப்பொருள் கசங்கி வழியத் தொடங்குவதை நான் காண்கிறேன். என்ன? ஜீவன் மீண்டுமாய் உள்ளே வந்திருந்தது. துர்நாற்றமோ தூரமாய்ப் போய்விட்டிருந்தது. புதிய மாம்சம் உண்டாயிருந்தது. ஓர் ஆவி நான்கு நாட்களாக எங்கோ இருந்தது அவனுடையச் சரீரத்திற்குள்ளாகத் திரும்பிவர, அந்த மனிதன் தன்னுடையக் காலூன்றி எழும்பி நின்றான். அதிசயமாயிருந்து கொண்டிருப்பவரைக் குறித்தும், ஆலோசனைக் கர்த்தரைக் குறித்தும், சமாதான பிரபுவைக் குறித்தும், வல்லமையுள்ள தேவனைக் குறித்தும் பேசுங்கள். அவர் அவ்வாறே இருந்தார். நிச்சயமாகவே, அவர் அவ்வாறிருந்தார். சரி. 194 நாம் கிணற்றண்டையிலே இருந்த அந்த ஸ்திரீயைக் கண்டறிகிறோம். அவர் நின்று அவளிடத்தில் ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவளுக்கு அந்த நேரத்தில் ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் என்று அவளிடத்தில் கூறினார். அப்பொழுது அவளோ, “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும். மேசியா வரும்போது, அதுவே அவருடைய அடையாளமாய் இருக்கப்போகிறது என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள். 195 அதற்கு அவரோ, “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அதிசயமாயிற்றே! அது அவ்வாறிருக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதிசயமாயிற்றே! 196 ஓர் இரவு கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவரோ ஒரு மனிதனைப் போன்றேக் களைப்புற்று நித்திரையாயிருந்தார். அவர் களைப்புற்று நித்திரையாயிருந்தார். பிசாசுகளோ அந்த இராத்திரியிலே அவரை அமிழ்த்தப் போவதாக அவைகள் ஆணையிட்டுருந்தன. கப்பற்பாய்கள் கிழிந்துபோய், துடுப்புகள் முறிந்து உடைந்துபோய், படகோ மிதக்கமுடியாத அளவிற்கு நீரில் தோய்ந்து, நிரம்பியிருந்தபோது, பிசாசுகளோ கிட்டத்தட்ட அவரைச் சிக்கவைத்துவிட்டதாகவே அவைகள் எண்ணிக்கொண்டன. அப்பொழுது அவர்கள் திரும்பியோடி, சீஷர்கள், “நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என்று கேட்டனர். 197 அப்பொழுது அவர் எழும்பி, தன்னுடையக் கண்களிலிருந்த நித்திரை மயக்கத்தைத் துடைத்துக்கொண்டார். பின்னர், “ஓ, அற்பவிசுவாசிகளே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்” என்றார். 198 “நீங்கள் இப்பொழுது என்ன செய்யப்போகின்றீர்கள்? இந்தப் புயலார்ந்த சமுத்திரத்தில், இந்தப் பெரியக் கலிலேயாக் கடலில் ஒவ்வொரு அலையும் அடிதளத்திற்குக் கொண்டு செல்லும்படி மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இங்கே என்ன செய்யப்போகிறீர்கள்? பிசாசு தொலைவில் உள்ள அந்த மலையின் மேல் அமர்ந்து முணுமுணுத்துக் கொண்டே அந்த அலைகளை அந்தவிதமாக வீசிக்கொண்டிருக்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” களைப்புற்றிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் அங்கிருந்ததை நீங்கள் அறிவீர்கள். “இதுவோ முப்பது அல்லது நாற்பது அடி உயரத்திற்குத் தண்ணீர் சீற்றங்கொண்டு கொந்தளித்துக் கொண்டிருக்கிறதாய் உள்ளதே. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” 199 எனவே அவர், “ஏதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்” என்று கேட்டார். கப்பற்பாயின் நுனிக்கயிற்றின்மேல் தம்முடையப் பாதத்தை வைத்து, “இரையாதே, அமைதலாயிரு” என்றார். காற்று அடங்கினது. வேறு வார்த்தைகளில் கூறினால், அவர், “காற்றே, உன்னுடைய வாயை மூடு, அலைகளே, உங்களுக்குச் சொந்தமான இடத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றார் என்பதாகும். அப்பொழுது அங்கே தண்ணீரின்மேல் ஒரு சிறு அலைகூட இருக்கவில்லை. அங்கே நின்று சுற்றிப் பார்த்தார். 200 திடுக்கிட்டுப்போன அப்போஸ்தலக் கூட்டம் அங்கே நின்றுக்கொண்டிருக்க, திரும்பி நடந்து சென்றார். பின்னர் மீண்டும் கீழேப் படுத்துக்கொண்டு, தன்னுடைய உறக்கத்தைத் தொடர்ந்தார். 201 அப்பொழுது அவர்களோ, “இவர் யாரோ?” என்றனர். அதிசயமாயிற்றே! ஆமென். அதிசயமாயிற்றே! அவர் அதிசயமானவராயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறதில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாகவே, அவர் அதிசயமானவராய் இருந்தார். ஆம் ஐயா. 202 அந்த மனிதர்தாமே, வான மண்டலங்களை விட்டுவந்தபோது, முழு சூரிய மண்டலமே அவருடையக் கீரீடமாய் இருந்தது. கோடான கோடி நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நட்சத்திரமும் பூமியின் மேல் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள, அவர்கள் தொலைவில் உள்ள பால்மோர் மலையின்மேலிருந்து அந்தத் தூரதரிசினிக் கண்ணாடியினூடாக நோக்கிப்பார்க்கும்போது, நூற்றிருபது கோடி ஒளி ஆண்டுகளின் விண்வெளி தூரத்தைக் காண முடிந்தது, அந்தக் கோடாகோடி நட்சத்திரங்கள் யாவுமே அவருடைய கிரீடத்தில் இருந்தன. அவரோ ஒரு முட்கிரீடத்தை ஏற்றுக்கொள்ள அவைகளை விட்டுவந்தார். யார் அதைச் செய்வார்? அதிசயமாயிற்றே! ஓ, என்ன! 203 நித்தியமே அவருடைய வஸ்திரமாயிருந்தது. அவர் நித்திய ஜீவனால் உடுத்தப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு துவக்கமே ஒருபோதும் இருந்ததில்லை. அவர் பெத்லகேமிலே துவங்கினார் என்று ஜனங்கள் நினைக்க முற்படுவதுபோல அவர் ஒருபோதும் பெத்லகேமிலே துவங்கவேயில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருக்குத் துவக்கமே இல்லாதிருந்தது. ஆமென். நித்திய ஜீவனைக் கொண்டு உடுத்தப்பட்டிருந்ததை உங்களுக்காகவும், எனக்காகவும் பழைய அழுக்கான மரண வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளும்படியாக அதை ஒருபுறம் தள்ளி வைத்தார். அதிசயமாயிற்றே! ஹூ—ஹூ. ஆம். 204 பரலோகம் அவருடைய அரண்மனையாய் இருந்தது. முழு பரலோகமும் அவருக்கே சொந்தமானதாயிருந்தது. அதுவே அவருடைய அரண்மனையாயிருந்தது. எந்தக் காரியமும் அவருக்கு இணையாக எப்போதுமே பிரகாசிக்க முடிந்ததில்லை. அவர் பூமிக்கு வந்தார். அவர், “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. ஆனால் எனக்கோ தலைசாய்க்கக் கூட இடமில்லையே” என்று கூடக் கூறினாரே. அது அதிசயமாயிருக்கிறது. நீங்கள் அவ்வண்ணமாய் நினைத்துப் பார்க்கிறதில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] 205 நண்பர்களே, நான் இங்கே ஏராளமான சூழ்நிலைக்கேற்ற கட்டங்களை எழுதி வைத்துள்ளேன். ஆனால் எனக்கு ஒருவேளை அதைக்கூற நேரம் கிடைக்காமற்போகலாம். ஆயினும் நான் துரிதமாக முடித்துவிடுவேன். 206 அந்த இயேசுவை நீங்கள் காண வேண்டும். அவர்கள் பேசுகிற ஸ்தாபனத்தின் இயேசுவைக் குறித்தல்ல; கோட்பாடுகளின் இயேசுவை அல்ல; ஆனால் கல்வாரியின் இயேசுவை, எல்லாவற்றையும் ஒரு புறம் தள்ளிவைத்த இயேசுவை, தீர்க்கதரிசிகள் உரைத்துள்ள அவரையே நீங்கள் காண வேண்டும். 207 நாம் இங்கே, “அதிசயமானப் பிதா, அதிசயம், அதிசயப் பிதா, அதிசயமான ஆலோசனைக்கர்த்தா, அதிசயமான சமாதனப்பிரபு, அதிசயமான வல்லமையுள்ள தேவன்” என்று பேசிக்கொண்டேப் போக முடியும். நாம் அதன் பேரில் தொடர்ந்து பேசிக் கொண்டே, பேசிக்கொண்டே, பேசிக்கொண்டேப் போகலாம். புரிகின்றதா? ஆனால் ஒருபுறம் வைத்து, நாம் இதை, “நீங்கள்…நாம் காண வேண்டும்…அவருடைய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அந்த இயேசுவையே நாம் காண வேண்டும்” என்று கூறுவோமாக. 208 உங்களால் அதை ஒரு கோட்பாட்டில் பெற்றுக்கொள்ள முடியாது. உங்களால் அதை ஒரு சபையைச் சேர்ந்துகொள்ளுதலில் பெற்றுக் கொள்ள முடியாது. உங்களால் அதை சாண்டா கிளாஸைப் பற்றி உங்களுக்குக் கூறப்பட்டுள்ள ஒரு விதமான ஏதோ ஒரு கட்டுக்கதையினால் பெற்றுக்கொள்ள முடியாது. சாண்டா கிளாஸ் நித்திய ஜீவனை உடையதாய் இருக்கவில்லை. கிடையாதே. ஒரு கோட்பாடு நித்திய ஜீவனை உடையதயிருக்கவில்லையே. 209 உங்களுக்கு அளிக்கிற அவருடைய வார்த்தையை அறிந்துகொள்வதல்ல; அதை அறிந்துகொள்வது, அது உங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறதில்லை. “அவரை அறிந்துகொள்வதே” என்றே வேதம் கூறியுள்ளது, “அவரை அறிந்துகொள்வதே நித்திய ஜீவனாயிருக்கிறது.” அவருடைய வார்த்தையை அறிந்து கொள்வதல்ல. அவரை அறிந்துகொள்வதே! 210 கிரேக்கர் அவரைக் காண விரும்பினர். அவர்கள் அவருடையச் சரீர உருவத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினர். “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்” 211 இப்பொழுது, உங்களுடையக் கண்களினால் நீங்கள் காண்கிறதில்லை. நீங்கள் உங்களுடைய இருதயத்தினால் காண்கிறீர்கள். புரிகிறதா? நீங்கள் உங்களுடையக் கண்களினால் காண்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய இருதயத்தினால் புரிந்து கொள்ளுகிறீர்கள். காண்பது என்பது “புரிந்துகொள்ளுதல்” என்பதாகும். நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை சரியாகப் பார்த்து, “நான் அதைக் காணவில்லை” என்று கூறலாம். ஆனால் நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதைப் “புரிந்துகொள்ளுகிறதில்லை” என்றே நீங்கள் பொருட்படுத்திக் கூறுகிறீர்கள். 212 கிரேக்கர் இயேசுவை அறிந்துகொள்ள விரும்பினர், அவரை அறிந்துகொள்வதற்கான வழியை அவர்களுக்கு அவர் அளித்தார். அவரை அறிந்துகொள்வதே! அவருடையக் கோட்பாட்டை அறிந்துகொள்ளுவதல்ல, அவருடைய வார்த்தையை அறிந்து கொள்ளுவதல்ல, அவருடைய அற்புதங்களை அறிந்துகொள்ளுவதல்ல, ஆனால் அவரை அறிந்துகொள்வதே! நீங்கள் அதைக் கண்டறியக் கூடிய ஒரே வழி சிலுவையண்டையிலேயன்றி, தொட்டிலண்டையல்ல. அல்ல. அது சிலுவையாயிருப்பதையே நான் காண்கிறேன். அவர் ஒரு சிலுவைக்கே அவர்களைச் சுட்டிக் காண்பித்தார். ஏதோ ஒரு கோட்பாட்டிற்கு அல்ல…அல்ல…இல்லையென்றால்…அல்லது ஏதோ ஒரு முன்னணைக்கு அல்ல, அல்லது ஸ்தாபனங்களின் பாணியையல்ல, ஆனால் சிலுவையண்டைக்கே சுட்டிக் காட்டினார். 213 இப்பொழுது அது இன்றைக்கும் அதேவிதமாகவே இருக்கிறது. ஓர் உண்மையான சீஷன், நீங்கள் எப்போதாவது இயேசுவண்டை வருவீர்களேயானால், அப்பொழுது அவர், “இயேசு என்னிடத்தில் இன்னின்ன—இன்ன சபையைச் சேர்ந்து கொள்ளும்படிக் கூறினார்” என்று ஒருபோதும் கூறவே மாட்டார். அவர் அதை ஒருபோதும் செய்ததேயில்லை. எனவே அவர் அதை இன்றைக்கும் செய்யவேமாட்டார். இல்லை. 214 நீங்கள் அவரைக் காணவிரும்பும்போது, அவர் உங்களை சிலுவையண்டைக்கே சுட்டிக்காண்பிப்பார். நீங்கள் அவரை அறிந்துகொள்ள வேண்டுமானால், அங்கே போய் மரியுங்கள், அப்பொழுது நீங்கள் அவரை அறிந்துகொள்வீர்கள். 215 அவர் ஒரு முறைகூட எந்த நபருக்கும் எந்தக் கோட்பாட்டையோ, எந்த ஸ்தாபனத்தையோ, அல்லது அவருடையப் பிறப்பினிடத்திற்கோ, அல்லது கிறிஸ்துமஸினிடத்திற்கோ கூட சுட்டிக் காட்டினதேயில்லை. அவர் எப்போதாவது ஒருமுறை கூட அதைச் செய்ததேயில்லை. என்னால் அதன் பேரில் இன்னும் சற்றுநேரம் நீடித்திருக்கக் கூடும், ஆனால் நான்—நான் அவ்வாறு செய்யமாட்டேன். அதேசமயத்தில், அது முக்கியமில்லாததாய் இருந்தால், இயேசு…அவர் யாருக்காவது அவரை அறிந்துகொள்ள சிலுவையைத் தவிர வேறு எங்காவது எப்போதாவது சுட்டிக்காட்டினார் என்பதை உங்களால் வேதத்தில் எங்குமே அதைக் கண்டறிய முடியாது. அது உண்மை. அது உங்களுடையத் தனி நலனைச் சிலுவையிலறைதலாயிருக்கிறது. “ஒரு மனிதன் மீண்டும் பிறவாவிட்டால்” அப்படியானால் முன்னணையானாலும், சாண்டா கிளாஸாயிருந்தாலும்… 216 இயேசு ஒரு கோட்பாட்டை ஒருபோதும் எழுதவில்லை. அவர் ஒரு ஸ்தாபனத்தை ஒருபோதும் நியமனஞ்செய்யவில்லை. பின்னை ஏன் நாம் அதைக் குறித்து அதிகப்படியானதை உருவாக்கி, அதன்பேரில் ஒவ்வொரு பொறுப்பையும் கூட வைத்துவிடுகிறோம்? நான் அதை உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன்; இப்பொழுதோ, கிறிஸ்துமஸ். பின்னை ஏன் நம்முடையச் சபைகள் அதன் பேரில் அதிகப்படியானதை வைத்து, அதாவது, “நீங்கள் இந்தச் சபையை சார்ந்திருக்க வேண்டும். நீங்கள் இந்த கோட்பாட்டைக் கூற வேண்டும். நீங்கள் இதை, அதை அல்லது மற்றதைச் செய்ய வேண்டும்” என்று கூறுகிறது? அது முக்கியமானதல்லவென்றால், நாம் ஏன் அதன்பேரில் மிக அதிகமானதை வைக்கிறோம்? அது நாம் வழக்கமாக இருந்ததைக் காட்டிலும் ஒரு விதமான வித்தியாசமான சீஷர்களையே நாம் உடையவர்களாயிருக்கிறோம் என்பதையே காண்பிக்கிறது. அவர்களோ உங்களை அவர்களுடையச் சபைக்கே, அவர்களுடைய ஸ்தாபனத்திற்கே, அல்லது அவர்களுடைய கோட்பாட்டினிடத்திற்கே கொண்டுசெல்ல விரும்புகிறார்களேயன்றி கிறிஸ்துவினிடத்திற்கல்லவே. 217 இன்றைக்கு ஜனங்கள், அவர்கள், “நீங்கள் ஒரு விசுவாசியா?” என்று கேட்கப்பட்டால், நான் இதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். “நீங்கள் ஒரு விசுவாசியா?” 218 அதற்கு அவர்களோ, “ஓ, நான் பாப்டிஸ்டு. நான் மெத்தோடிஸ்டு” என்கிறார்கள். நல்லது, அப்பொழுது அது நீங்கள் ஒரு விசுவாசி அல்ல என்பதையேக் காண்பிக்கிறது. புரிகிறதா? அது உண்மை. “பாப்டிஸ்டு, பிரஸ்பி…” ஆனால் நீங்களோ, “நான் பெந்தேகோஸ்தே” என்கிறீர்கள். அதற்கு இதனோடு செய்வதற்கு ஒரு காரியமும் கிடையாது. இல்லை ஐயா. ஒரு விசுவாசி ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறான். ஆனால் அங்குதான் அவர்கள் அதை இன்றைக்கு பெற்றிருக்கிறார்கள். புரிகிறதா? அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்? ஜனங்களை அதைக் கூறச் செய்கிறது எது? 219 அன்றொரு இரவு நான் மருத்துவமனையில் இருந்தேன். சுகவீனமாயிருந்த ஒரு சிறு பெண்ணிற்காக ஜெபத்தை ஏறெடுக்க நான் சென்றிருந்தேன். அவள் சுகமடைந்தாள். நான்…கூறினேன்…அங்கே ஒரு மனிதனும் அவனுடையத் தாயாரும் அங்கே அமர்ந்திருந்தனர். அது அவனுடையத் தாயார் என்றே நான் உத்தேசித்தேன். அவளும் ஏறக்குறைய அவனுடையத் தாயாரைப் போன்றே காணப்பட்டாள். நானோ அந்தப் பெண்மணியினிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “நாம் இப்பொழுது ஜெபத்தை ஏறெடுப்போம்” என்றேன். நான் திரும்பிப்பார்த்து, “நாங்கள் ஜெபித்தால் நீங்கள் கவனம் செலுத்துவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “அந்தத் திரையை இழுத்து விட்டுக் கொள்ளுங்கள்” என்றாள். அப்பொழுது நான், “இருக்கட்டும், நாங்கள் ஜெபம் செய்தால் நீங்கள் கவனம் செலுத்துவீர்களா என்றுதானே நான் கேட்டேன்” என்றேன். அதற்கு அவள், “நாங்கள் மெத்தோடிஸ்டுகள், எனவே அந்தத் திரையை இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள்” என்றாள். 220 நானோ, “அப்படியானால் இது உங்களுக்கு மரணத்திகில் அடையச் செய்யும். பாருங்கள்” என்றேன். நானோ, “நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாயிருந்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவரல்ல. ஆகவே நான் சரியாக…” என்றேன். ஆம். 221 ஏன் அவர்கள் அதைக் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு போலியான சீஷன் அவர்களை அந்தத் தூரத்திற்குக் கொண்டு சென்றுவிட்டான். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான், தவறாகப் போதித்த ஏதோ ஒரு சீஷன். இயேசுவின் சீஷர்களோ அவர்களை இயேசுவினிடத்திற்குக் கொண்டு சென்றனர். ஒரு மெத்தோடிஸ்டு சீஷன் அவர்களை மெத்தோடிஸ்டண்டைக்கு கொண்டு செல்கிறான். பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்தவன் அவர்களை பெந்தேகோஸ்தேக்களண்டைக்குக் கொண்டு செல்கிறான். ஆனால் ஒரு கிறிஸ்துவின் சீஷன் அவர்களைக் கிறிஸ்துவண்டைக்குக் கொண்டு செல்கிறான். கிறிஸ்துவோ அவர்களைக் கல்வாரியண்டைக்குக் கொண்டு செல்கிறார். அதுதான் உண்மையாகக் காரியம். ஆம் ஐயா. ஆம் ஐயா. 222 அந்தளவு தூரத்திற்கு அவர்கள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் அந்த அளவு தூரம்வரை மட்டுமே கொண்டு வரப்பட்டிருந்தனர். புரிகிறதா? அவர்கள்—அவர்களோ, “ஒரு பாப்டிஸ்டு, அல்லது அது மெத்தோடிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியன், அல்லது அது என்னவென்று” கூறினாலும், “கத்தோலிக்கர்” அது என்னவாயிருந்தாலும் இருக்கட்டும், அவ்வளவு தூரம்தான் அவர்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். அவ்வளவு தூரம் வரைக்குமே அவர்கள் கொண்டு வரப்பட்டிருகின்றனர், ஆகையால் அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும். 223 ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், இந்தச் சீஷர்களோ இயேசுவை அறிந்திருந்தனர். ஆகையால் அவர்கள் அவரை…கொண்டு சென்று…அவர்கள் இந்தக் கிரேக்கரை அவர்கள் சத்தியம் என்று அறிந்திருந்த இடத்திற்குக் கொண்டு சென்றனர். கிறிஸ்துவை எப்போதாவது கண்டறிந்துள்ள ஓர் உண்மையான கிறிஸ்துவின் சீஷன் தேடுவோரை—நேராக இயேசுவண்டைக் கொண்டு செல்கிறான். அப்பொழுது இயேசு அவர்களை கல்வாரியினிடத்திற்குச் சுட்டிகாட்டுகிறார், அவர்கள் அங்கே அவரோடு மரித்து, மீண்டும் புதியதாய் பிறக்கின்றனர். ஓ, என்னே! அதைப் பொறுத்த அளவில் அங்கேதான் உள்ளது. 224 ஆனால், “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்.” அதுவே கேள்வியாயிருந்தது. “நாங்கள் ஒரு கோட்பாட்டைக் காண விரும்பவில்லை. நாங்கள் மெத்தோடிஸ்டுகளைக் காண விரும்பவில்லை. நாங்கள் பாப்டிஸ்டைக் காண விரும்பவில்லை. நாங்கள் இவர்களில் எவரையுமே காண விரும்பவில்லை. நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்.” ஆனால் காரியம் என்ன? 225 என் சகோதரர்களே நான் முடித்துவிட வேண்டும். நாம் முடிப்பதற்கு முன்னர் இங்கே ஒரு சில கருத்துரைகளை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். என்ன? என்னால் இந்தக் காரியத்தை ஆழமாய்ப் பதியச் செய்ய முடிந்தால், நான் இப்பொழுது வீட்டிற்குச் செல்லும்படி விரைந்து முடிக்க விரும்புகிறேன். 226 கிரேக்கர் இயேசுவைக் காண விரும்பினர். அவர் ஒருபோதும் அவரைக் கிறிஸ்துமஸில் கண்டறியும்படிச் செய்யவில்லை. அவரை ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் ஒருபோதும் கண்டறியவேயில்லை. ஏதோ ஒரு கோட்பாட்டில் அவரை ஒருபோதும் கண்டறியவேயில்லை. அவர் அப்படிப்பட்டதிற்கு அவர்களை ஒருபோதும் சுட்டிக்காட்டவில்லை. நீங்கள் அதை நன்றாகப் புரிந்துகொண்டீர்களா? ஆனால் அவர் அவர்கள் மரிக்கும்படியாக, மரிக்கும்படிக்கு சிலுவையண்டைக்குச் சுட்டிக் காட்டினார். ஓர் உண்மையான சீஷன், “நீங்கள் மரிக்கத்தான் வேண்டும்” என்றேக் கூறுகிறான். நான் மரித்திருக்கும்போது, எப்படி நானே அறிந்துகொள்வேன்? நீங்கள் இந்த எல்லா வார்த்தையையும் சத்தியம் என்று அடையாளங்கண்டு கொள்ளும்போது, அப்பொழுது வார்த்தையானது உங்களுக்குள்ளாக ஜீவிக்கத் துவங்குகிறது. 227 நீங்களோ, “இருக்கட்டுமே” என்றும், “ஆனால் எங்களுடையச் சபை போதிக்கிறதோ…” என்றும் கூறலாம். உங்களுடையச் சபை என்ன போதிக்கிறது என்பதைக் குறித்து நான் கவலைப்படுகிறதில்லை. அதைத்தான் வேதம் கூறுகிறது. நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்களோ, அந்த இன்னொரு சபையானது வித்தியாசமான ஏதோ ஒன்றைப் போதிக்கிறது. ஆனால் இந்த வேதமோ மாறாத அதேக் காரியத்தையேப் போதிக்கிறது. 228 இயேசுவோ, “நீங்கள் எப்பொழுதெல்லாம் இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிறீர்களோ, அப்பொழுது இந்த வார்த்தை உங்களுக்குள் வெளிப்படுத்தப்படும். உங்களுக்குள்ளாக அது செய்யும் என்று கூறுகிற அதேக் காரியத்தையே அது செய்யும்,” என்றார். “ஓ”, அவர்களோ, “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்றுக் கூறலாம். 229 வேதமோ, “இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்று கூறியுள்ளது. இயேசு, “என்மேல் விசுவாசமாயிருக்கிறவன்” என்று கூறியிருக்கும்போது, எங்கே, எந்த நேரத்தில் எப்படி நீங்கள் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள்? 230 மாற்கு 16-ல் “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றேக் கூறப்பட்டுள்ளது. எது வரைக்கும்? “உலகமெங்கும்.” அங்கே இன்னும், “சர்வ சிருஷ்டிக்கும்” ஒருபோதும் சென்றடைந்திருக்கவில்லையே. “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன.” அங்குதான் நீங்கள் இருக்கிறீர்கள்…வார்த்தையானது வெளிச்சமாக்கப்படும். அதுதானே பிரகாசிக்கும். 231 நீங்கள் தொட்டிலண்டைச் சென்று, “ஒரு சிறு குழந்தை இங்கே அநேக ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்தது” என்று கூறுவீர்களேயானால், அதுவல்ல. அர்த்தமற்றது. எல்லாவிதமான கோட்பாடுகளும், கட்டுக்கதைகளுமே அதைப் பற்றிக் கூறிவிட்டன. அந்த எல்லாக் காரியங்களும் அழிந்து, எல்லாமே குழப்பத்திற்குள்ளாகும் என்பதை இயேசு அறிந்திருந்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் குழப்பமடையாத ஒரு காரியம் உண்டு, அதுவே பரிசுத்த ஆவியாகும். 232 “ஓ”, அவர்களில் ஒருவர், “அவர் இங்கேதான் பிறந்தார். நாங்கள் அதன்மேல் சபையைக் கட்டியுள்ளோம்” என்று கூறலாம். மற்றொருவரோ, “அவர் இங்கேதான் பிறந்தார்” என்று கூறியிருக்கலாம். 233 சிலுவையில் இருந்த அந்த அசலான ஆணிகளை, அவர்கள் எத்தனை ஆணிகளை வைத்திருந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அதைப் போன்றுதான், அதனை நிரூபிக்க முடியுமா? பத்தொன்பது. ஒவ்வொரு நபரும் ஒரு ஆணியை வைத்திருக்கிறான். “இதுவே, நாங்கள் அதை வைத்துள்ளோம். அல்லேலூயா, நாங்கள் அதை வைத்திருக்கிறோம்.” அவர்கள் சிலருடைய மரித்த சில எலும்புகளை வைத்திருக்கிறார்கள். “நாங்கள் அதை வைத்துள்ளோம். நாங்கள் அதை வைத்துள்ளோம்.” 234 “அவர் பிறந்தது இந்த இடமாயிருக்கிறது.” மற்றொருவரோ, “அவர் பிறந்தது இந்த இடமாயிருக்கிறது” என்கிறார். இதுவோ, “அவர் பிறந்தது இந்த இடமாயிருக்கிறது” என்கிறது. அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? 235 அவர் இங்கே இருதயத்தில்தான் பிறந்திருக்கிறார். ஆம். நான் மரித்தபோது, அவர் இங்கேப் பிறந்தார். நான் அவருக்குள் புதியதாக மீண்டும் பிறந்தேன். அதுதான் அது. “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்.” சரி. 236 நல்லது, காரியம் என்ன? அவர் மீண்டும் காணமற்போய்விட்டிருக்கிறார். ஜனங்கள் அவரைத் தொலைத்துவிட்டிருக்கின்றனர். ஆனால் அவர் மீண்டும் பெரியக் கூட்டங்களில், கோட்பாடுகளின் கூட்டங்களில் தொலைக்கப்பட்டிருக்கிறார். ஒரு முறை அவருடையப் பெற்றோரண்டையில் அவர் தொலைந்துப் போய்விட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் மீண்டும் தொலைக்கப்பட்டிருக்கிறார். அவர் தொலைந்துப் போய்விட்டார். 237 இந்த வீதிகளைச் சென்றுப் பாருங்கள், கடந்த ஒரு சில தினங்களாக இருந்து வருவதைப் போன்றதான, அந்தப் பைத்தியக்காரக் கூட்டத்தினர் தள்ளிக்கொண்டும், நெருக்கி இடித்துக்கொண்டும், குடித்துக்கொண்டும், சபித்துக்கொண்டும், இகழந்து கொண்டுமிருப்பதை பாருங்கள். “கலகல மணியோசை, சலசல மணியோசை…” (Jingle bells, Jingle bells). கிறிஸ்து தொலைக்கப்பட்டார். அவர் தொலைக்கப்படவில்லை. ஜனங்களே அவரைத் தொலைந்து விட்டிருக்கின்றனர். 238 அவர்கள் அவரை எங்கே கண்டனர்? அவர்கள் அவரை எங்கே தொலைத்திருந்தனர். அங்கேயே நாம் அவரைக் கண்டுபிடிக்கலாம். 239 ஆனால் அவர் அவர்களுடையக் கோட்பாடுகளில், அவர்களுடையக் கூட்டத்தில் தொலைந்திருந்திருக்கிறார். அவர் தொலைக்கப்பட்டிருக்கிறார். கிறிஸ்து வர்த்தகக் கூட்டத்தில் தொலைக்கப்பட்டிருக்கிறார். வர்த்தகக் கூட்டமோ, “நாங்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாட வேண்டும்” என்றுக் கூறிக் கொண்டிருக்கிறது. 240 அன்றொரு நாள் மனைவியும் நானும் அங்கே நின்று கொண்டிருந்தபோது அங்கே நின்றிருந்த பெண்மணி கூறினாள். அவள், “நான் என் தந்தைக்கு கால் காலன் அளவுள்ள மதுபானப் புட்டியை வாங்கினேன்” என்றாள். 241 மற்றொருவன், “நல்லது, நான் வாங்கப்போவது…நான் தந்தைக்கு என்ன வாங்கப் போகிறேன் என்று நான் உனக்குச் சொல்வேன். நான் அவருக்குச் சில சீட்டாட்ட அட்டைகளை, பணப்பந்தயம் கட்டி ஆடும் சீட்டாட்டக் கட்டுகளை வாங்கப் போகிறேன். நாங்கள் பணம் வைத்து பந்தயங்கட்டி சீட்டு விளையாடி, கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம், நீங்கள் பாருங்கள்” என்றாள். 242 மற்றொருவரோ, “நான் அம்மாவிற்காக ஒரு பெரிய சிகரெட்டு பெட்டியையே வாங்கிவிட்டேன். நீ அவளுக்காக என்ன வாங்குவாய்?” என்று கேட்டார். ஹூ! ஹூ! 243 ஓ தேவனே! அவர் தொலைக்கப்பட்டார். அவர்கள் கிறிஸ்துமஸில் அவரைத் தொலைத்துவிட்டனர். அவர்கள் ஈஸ்டரில் அவரைத் தொலைத்துவிட்டனர். ஒரு செல்லப் பெயர் கொண்ட முயல் அல்லது ஒரு புதியத் தொப்பி உயிர்த்தெழுதல் அல்ல, கிறிஸ்துவின் பிறப்பல்ல. 244 அவர்கள் அவர் யாராயிருக்கிறார் என்று அறிந்து கொள்ளுவதற்குப் பதிலாக அவரை மூன்று கடவுள்களாக்கி, அவரைக் கூறுகளாகப் போட்டு, ஒரு விக்கிரகமாக்கினபோதே, அவர்கள் தங்களுடையக் கோட்பாடுகளில் அவரைத் தொலைத்துவிட்டனர். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.” நீங்கள் அவரைத் தொலைத்துவிட்டீர்கள். 245 அவர்களுடையச் சமயப்பற்றுமிக்கக் கூட்டத்தில் அவர் தொலைக்கப்பட்டிருக்கிறார். சமயப்பற்றுமிக்கக் கூட்டமானது எப்படி அதைச் செய்தது? அவர் லவோதிக்கேயாவில் அவருடையச் சபையினிடத்தில் தொலைக்கப்பட்டிருக்கிறார். கடைசிச் சபை. சபைக் காலம், அவர் சபைக்குப் புறம்பேயிருந்து, “தட்டிக்கொண்டு”, உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றே அது கூறியுள்ளது. அவர் வருவதற்கு முன்பு இந்தக் கடைசி நாட்களில் உள்ள சபையின் நிலையே முழு வேதாகமத்திலும் உள்ள சாட்சிகளிலேயே மிகவும் துயரார்ந்ததாயிருக்கிறது. மற்றெந்தச் சபைக் காலமும் அவரை எப்போதும் வெளியேத் தள்ளினதில்லை. அவர்கள் எந்த வித்தியாசத்தையுமே அறிந்துகொள்ளவில்லை. இப்பொழுது அவர்கள் மெய்யாகவே உண்மையான பரிசுத்த ஆவியின் வல்லமையை அறிந்துகொள்ளும்போது, அவர்கள் அவரை உதைத்து வெளியேத் தள்ளின இடத்திலிருந்து, வெளியிலிருந்தே வாசலைத்தட்டிக் கொண்டிருக்கிறார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்.” நிச்சயமாக. அவர்கள் அவரைத் தங்களுடைய வர்த்தகக் கூட்டத்தில் தொலைத்துவிட்டனர். 246 அவர்கள் தங்களுடைய மதப்பற்றுமிக்கக் கூட்டங்களில் அவரைத் தொலைத்துவிட்டனர். அது உண்மை. அவர்கள் அதிலிருந்து கோட்பாடுகளை உண்டாக்கிவிட்டனர். அவர்கள் அதிலிருந்து ஸ்தாபனங்களை உண்டாக்கிவிட்டனர். அவர்கள் அதை தொலைத்து விட்டனர். அவர்கள் வேதத்திற்குப் பதிலாக சமய சடங்காச்சாரங்களை எடுத்துக்கொண்டனர்—அவர்கள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் தேவன் கூறினதை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக மனிதர்களுடைய கருத்துகளை எடுத்துக் கொண்டனர். அவர்கள், “உங்களுடையப் பெயரைப் பதிவு செய்யுங்கள். கரங்களைக் குலுக்குங்கள். அவ்வளவுதான், நீங்கள் செய்ய வேண்டும், ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றுக் கூறினர். முழுக்காரியமுமே தவறாயிருக்கிறது. அது உண்மை. 247 அங்கேதான் சபைக் கூட்டமானது அவரைத் தொலைத்து விட்டபோது, அவர்கள் அவரைத் தொலைத்துவிட்டனர். ஏன்? அவர்களுடையச் சபைக் கட்டிடங்களில் அல்ல, நீங்கள் அதை அழைக்கிற அவர்களுடைய—அவர்களுடைய ஜனக் குழுவில் அல்ல. ஆனால் அவர்கள் வார்த்தையை விட்டுவிட்டபோது, அவர்கள் அவரைத் தொலைத்துவிட்டனர். “அதாவது…நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், அது உங்களுக்காகச் செய்யப்படும்”, ஏனென்றால் அது தேவனாயிருக்கிறது, அது மீண்டும் மாம்சமானது. புரிகிறதா? “நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்கு செய்யப்படும்.” அதுதான் இது. 248 ஆனால் இன்றைக்கோ அவர்கள் நிலைத்திருப்பதில்லை. அவர்கள் இன்றைக்கு ஒரு மெத்தோடிஸ்டாய், நாளைக்கு ஒரு பாப்டிஸ்டாய், அதற்கு அடுத்த நாள் ஒரு பிரஸ்பிடேரியனாய், இருந்து, அதே சமயத்தில் எங்குமே நிலைத்திருப்பதில்லை. 249 “என் வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால், நலமாயிருக்குமே! வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்” அல்லேலூயா! 250 சகோதரன் நெவில் அவர்களே, அது அவ்வளவு உண்மையாயிருக்கிறது. [சகோதரன் நெவில், “ஓ, மகிமை! நான் அதை அறிவேன்” என்கிறார்.—ஆசி.] வார்த்தை உங்களுடையச் சரீரத்தில் மாம்சமாகி, உங்கள் மூலமாய்ப் பேசுகிறது. 251 பெந்தேகோஸ்துக்கள் அவரைத் தொலைத்துவிட்டனர். ஓ, ஆம். அவர்கள் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் அவரை உடையவர்களாயிருந்தனர். ஆனாலும் அவர்கள் அவரைத் தொலைத்துவிட்டனர். அவர்கள் அதை எப்படிச் செய்தனர்? யார் மிகப்பெரிய கட்டிடத்தைக் கட்ட முடியும், ஹூ—ஹூ, யார் மிகப்பெரிய சபையை உடையவர்களயிருக்க முடியும், யார் மிகச்சிறந்த பயிற்சிப் பெற்ற பாடற்குழுவினை வைத்துக்கொள்ள முடியும் என்பதைக் காண்பதன் மூலமேயாகும். 252 நான் விரும்பாத ஏதாவது ஒரு காரியம் இருக்குமாயின், அது அளவுக்கதிகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட குரலே, அதாவது எழும்பி நின்று அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாயிருப்பதுப் போன்று பாடுகின்றனர். அதாவது “வீவீ” என்று அவர்கள் முகம் கருப்பாகுமளவிற்குத் தங்களுடைய மூச்சைப் பிடித்துப் பாடுகின்றனர். அவர்கள் பாடிக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் வெறுமென ஓர் இரைச்சலையே உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். 253 ஆனால் நான் விரும்புவது என்னவென்றால், ஒரு நல்ல, பண்டைய—நாகரீகங்கொண்ட, இருதயத்தால் உணரப்பட்ட, பெந்தேகோஸ்துக்களாய், மீண்டும் பிறந்த நபராய் அவர்களுடைய இருதயத்திலிருந்து பாடுவதேயாகும். அவர்களால் ஒரு குறிப்பிட்ட இராகத்தில் தொடர்ந்துப் பாடமுடியாவிட்டாலும், அவர்கள் இன்னமும் அங்கே ஆவியைப் பெற்றுள்ளனர். அது உங்களினூடாகச் சென்று கிழித்தெறிவதை உங்களால் உணர முடியும். அல்லேலூயா! எனக்கு அது பிடிக்கும். அதற்குப் பின் உள்ள பலன்களை நான் விரும்புகிறேன், பரிசுத்த ஆவியானவர் அதை ஆசீர்வதிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லேலூயா! அது எனக்கு முற்றிலும் உண்மையாயிருக்கிறது. ஆம். 254 ஆனால் அவர்கள் அவரைத் தொலைத்துவிட்டனர். நன்கு—பயிற்றுவிக்கப்பட்ட பாடற்குழுக்கள், நன்கு—பயிற்றுவிக்கப்பட்டப் பிரசங்கிமார்கள். ஓ, என்னே! எல்லவிதமான சுருள் முடியைக் கொண்டவர்களாய்த், தங்களுடையத் தலையை இந்தவிதமாய்த் தாழ்த்தி, தங்களுடையப் புகைப்படத்தை எடுத்துக்கொள்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓ, ஆம், நன்குப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஐயத்திற்கிடமின்றி இருக்கிறார்கள். அதுதான் நன்குப் பயிற்றுவிக்கப்பட்டதாய் இருப்பதாகும். 255 பெரிய ஞாயிறு சிறுவர் வேதபாடப் பள்ளிகள், நிச்சயமாகவே ஒவ்வொரு சபையும் ஒன்றையொன்று ஞாயிறு சிறுவர் வேதபாடப் பள்ளியில் விஞ்சிநிற்க முற்படுகின்றன. ஞாயிறு சிறுவர் வேதபாடப் பள்ளியைக் குறித்து வேதத்தில் கூட கூறப்பட்டிருக்கவில்லை. அது ஒரு மெத்தோடிஸ்டு கோட்பாடாயிருக்கிறது. அது முதலில் “ஏழைச் சிறுவர்களுக்கான இலவசப் பள்ளி” (Ragged School) என்றே அழைக்கப்பட்டது. இப்பொழுதோ எல்லாருமே ஞாயிறு சிறுவர் வேதபாடப் பள்ளிக்குச் செல்கின்றனர். அதாவது சபைக்காகத் தரித்திருக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் தேவன் கூறினதல்லாத வேறு ஏதோ ஒரு காரியத்தையே எடுத்துக் கொண்டனர். சரி. 256 நான் என் ஜீவியத்தில் ஆவியின் ஏவுதலின் கீழ் பிரசங்கித்த எந்தக் காரியத்தையும், நான் அன்றொரு நாள் பீடத்தண்டைக் கூறினக் காரியங்களைச் சர்ப்பத்தின் வித்து அல்லது அதைக் குறித்த எதையாவது நான் திரும்பத் திருத்திக் கூற வேண்டியிருந்தது என்று நான் ஒருபோது கூறினதேயில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்பது நினைவிருக்கட்டும். யாராவது ஒருவர் வந்து அதைத் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு இடித்து வீழ்த்தட்டும். முடியாதே. 257 அங்கேதான் அவர்கள் அவரைத் தொலைத்துவிட்டனர்; பெரிய ஞாயிறு சிறுவர் வேதபாடப் பள்ளி, அல்லது அங்குள்ள மிகப் பெரியக் கூடாரம், நகரத்தில் சிறப்பான உடை உடுத்தின குழுவினர். அதுதான் பெந்தேகோஸ்தே, “ஏன், நாங்கள் முதன்மையான சபையைச் சேர்ந்தவர்கள். பட்டிணத்தில் உள்ள மிகச் சிறந்தக் குழுவினர் அங்கே செல்லுகின்றனர்.” கண்காணிகளோ மூன்று அல்லது நான்கு முறைகள் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள், நிர்வாகக் குழுவில் காணப்படும் கண்காணி, ஒருகால் போதகரும் கூட அவ்வாறிருக்கலாம். எல்லவிதமான அர்த்தமற்றவைகளும் இன்றைக்குச் சபைகளில் இருக்கின்றன. பார்த்தீர்களா? அவர்கள் எங்கேச் செய்துள்ளனர்? அவர்கள் இயேசுவைத் தொலைத்து விட்டனர். 258 “நல்லது, எங்களுடைய ஸ்தாபனம் பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்திலேயே மிகப்பெரிய ஒன்றாயிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களுடையப் புருஷர்களோ அங்குள்ளதிலேயே மிகவும் சிறப்பாய் பயிற்றுவிக்கப்பட்ட புருஷர்களாயிருக்கின்றனர்.” அவர்கள் எல்லோருமே அந்தவிதமாக இருக்கலாம். நான் அதை மறுப்பதில்லை. அது விடுதிகளுக்கே, வேத சாஸ்திரச் செயற்களங்களுக்கேச் சென்றடைகிறது. 259 ஆனால் இயேசுவை அறிந்து, அவரைக் கண்டிருந்து, மீண்டும் பிறந்திருந்து, வார்த்தையானது தாமே அவனுடைய வார்தையில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிற ஒரு மனிதனையே நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். உங்களால் காண முடிந்த அது அவனுடையதல்ல. கிறிஸ்து அவன் மூலமாகப் பேசும் வரைக்கும் அவன் தன்னையே அவ்வளவு முற்றிலுமாக ஒப்புவித்திருக்கிறான். அங்குதான் உங்களுக்குக் காரியமே. அது உண்மை. அடையாளங்களும் அதிசயங்களும் அந்த வார்த்தையைப் பின் தொடருகின்றன, ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. 260 ஆனால் தேவனுடைய வார்த்தை ஒரு குறிப்பிட்டக் காரியத்தைக் கூறுமேயானால், இந்தக் குழுவோ “இல்லை, இல்லை கிடையாது. இல்லை நாங்கள் அதை விசுவாசித்தால் எங்களுடைய ஸ்தாபனம் எங்களை உதைத்து வெளியேத் தள்ளிவிடும்” என்கின்றனர். ஆகையால் அவன் அதைச் சரியாக அங்கேயே முடிவாக்கிவிடுகிறான். அவன் அங்கேயே தன்னைத் துண்டித்துக்கொள்கிறான். அவ்வளவுதான். நீங்கள் கண்மூடி மரபான ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும்படி தூண்டலாம். நீங்கள் ஏதோ ஒரு விதமான ஒரு கேலித்தனமான கட்டுக்கதையைப் புகுத்தி, இதை, அதை அல்லது மற்றதை கற்பனை செய்யலாம், ஆனால் உண்மையான, அசலானக் காரியமே அங்கு இல்லை. ஆம் ஐயா, ஓ, நிச்சயமாக. 261 சபைகள், சபைகள் உலகத்திற்காகவும், கோட்பாடுகளுக்காகவும் கிறிஸ்துவையே மாற்றிக் கொண்டிருக்கின்றன. சபையானது ஒரு பண்டமாற்று நிகழ்ச்சியில் உள்ளது. ஓ, அவர்கள் நிச்சயமாகவே பண்ட மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். ஆம் ஐயா, அவர்கள் சென்று, அவர்களே மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் ஒரு பண்டமாற்று நிகழ்ச்சியையே விரும்புகின்றனர். அவர்கள் ஸ்தாபனம் கூறுகிறதற்காகத் தேவன் கூறுகிறதையே மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் “போதகரைப் பின்பற்ற” தேவன் கூறினதையே மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் “ஸ்தாபனத்தைப் பின்பற்றத்” தேவன் கூறுகிறதையே மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் ஒன்றிற்காக மற்றதை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். 262 என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஜனங்கள் தேவைப்படும் பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்லுவதிலேயே இருக்கின்றனர். ஓ, ஒரு பெரிய வர்த்தகமே இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது மற்றொரு கிறிஸ்துமஸாய், சரியாக ஒரு போலியாய், உருவாக்கப்பட்டிருக்கிறது. 263 நமக்கு இன்னும் சற்று நேரம் இருந்திருந்தால் நலமாயிருக்கும், எனவே நான் மீண்டும் ஒரு நாள் இந்த பொருளின் பேரில் திரும்பி வந்து பேசப்போகிறேன். இங்கே அதிகப்படியான நேரம் கடந்துவிட்டது, பரிசுத்த ஆவியானவரோ சற்று முன்னரே அதை என்னிடம் கூறினார். பார்த்தீர்களா? 264 சபையானது பண்டமாற்றிக்கொண்டிருக்கையில், சபையானது பொருட்களைக் கொள்முதல் செய்யக் கடைக்குச் சென்றுகொண்டிருக்கையில், ஜனங்களோ சபை என்றழைக்கப்படுகின்றவர்களாய் இருக்கின்றனர். ஆம், ஐயா, அவர்கள் பண்டமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடைக்குச் சென்று பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், பண்டமாற்றிக் கொள்வதிலுமே உறுதியாய் இருக்கிறார்கள். அவர்கள் என்னத்திற்காகக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? மிகப்பெரியச் சபை என்பதால், மிகச் சிறந்த உடை உடுத்தினக் கூட்டத்தார் என்பதால், மிகப் பெரிய ஸ்தாபனம் என்பதினாலேயாகும். ஜனங்களோ…நான் ஏதோ ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். ஜனங்கள் அதிகமான உலகத்தின் காரியங்களைத் தாங்கள் அடையும்படி அவர்கள் அனுமதிக்கும் ஓர் இடத்தைக் கண்டறியவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர், பெந்தேகோஸ்தேக்களும் கூட, பெந்தேகோஸ்தே ஸ்திரீகளும் கூட குட்டைக் கால்ச்சட்டைகள், குட்டையாக வெட்டப்பட்டத் தலைமுடி, வர்ணந்தீட்டுதல் போன்ற அப்படிப்பட்டதை அனுமதிக்கும் ஓர் இடத்தையே கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடைசியில் தேவையானப் பொருட்களைக் கொள்முதல் செய்து கொண்டே இருக்கிறார்கள். 265 “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் பெந்தேகோஸ்தே. அல்லேலூயா! நான் இதைச் சேர்ந்தவன், ஓ, எங்களுடையப் போதகரோ…விசுவாசிக்கிறதில்லை”. 266 நீங்கள் பாருங்கள், நீங்கள் மிகவும் மட்டரகமாக வாழும்படிக்கு உங்களை அனுமதிப்பவர்களுக்காக (தேவனே இரக்கமாயிரும்), மிகவும் அசுத்தமாக வாழும்படிக்கு உங்களை அனுமதிப்பவர்களுக்கு, அவர்களால் முடிந்தளவு பெரும்பாலும் உலகத்தைப் போன்றே இருக்க அனுமதிப்பவர்களுக்கே பொருட்களை கொள்முதல் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை நிராகரித்துவிட்டு ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று பொருட்களைக் கொள்முதல் செய்துகொண்டிருக்கிறார்கள். அது ஒவ்வொரு காரியத்தையும், இடித்துரைப்பது போலிருக்கலாம். அதுவே இதைச் செய்வதற்கானப் பொருளாயிருக்கிறது. ஜனங்கள் தேவையானப் பொருட்களைக் கடையிலே வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பேரம் பேசக்கூடிய இடத்திலே கிறிஸ்துமஸிற்குத் தேவைப்படும் பொருட்களைக் கடையில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பேரம் பேசுதலை நாடித் தேடுவோர்களாயிற்றே! 267 “நல்லது, நான் கூட பெந்தேகோஸ்தேக்காரன். நல்லது, நாங்கள் அந்தப் பண்டையப் பழையக் குருட்டுத்தனமானத் தப்பெண்ணங்களை உடைய காரியத்தைக் கொண்டிருக்கவில்லை.” ஆனால் வேதம் அவ்வண்ணமாய்க் கூறுகிறதே. அவன் ஓர் உண்மையானக் கிறிஸ்துவின் சீஷனாயிருந்தால், அப்பொழுது அவன் உங்களைச் சிலுவையினிடத்திற்கு வழி நடத்துவான். 268 “ஓ, சகோதரன் பிரான்ஹாம், நான் அங்குச் சென்று, அந்நியப் பாஷைகளைப் பேசினேன்.” அது எந்தக் காரியத்தையுமே பொருட்படுத்துகிறதில்லை. ஒரு நாள் ஒரு கோவேறு கழுதையே அதைச் செய்தது. ஆம் ஐயா, அது… 269 நான் தேவனுடையப் பரிசுத்த வார்த்தையைக் குறித்து பரியாசம் செய்யும்படியாகப் பொருட்படுத்திக் கூறவில்லை. நான் அந்நியப் பாஷைகளில் பேசுவதில் விசுவாசங்கொண்டிருக்கிறேன். 270 பிசாசுகள் அந்நியப் பாஷைகளைப் பேசுகின்றன. அந்நியப் பாஷைகளில் பேசக்கூடிய ஜனங்கள் எந்தவிதமான ஒரு வாழ்க்கையையும் வாழுகிறார்களே. ஆனால் தேவன் செய்த ஒவ்வொரு காரியத்தையுங்குறித்த ஒரு போலி பாவனையைப் பிசாசு வைத்திருக்கிறான் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். 271 கிறிஸ்துவின் அசலானப் பிறப்பைத் தவிர அவனால் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் போலியாகப் பாவனைச் செய்ய முடியும். அவனால் அதைச் செய்ய முடியாது. காரணம் நீங்கள் முதலில் மரிக்க வேண்டும். அதன்பின்னரே வார்த்தையானது உங்களை எழுப்புகிறது. நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்ளுகிறீர்கள்? வார்த்தையானது, அதனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்குள் மாம்சமாக்கப்படுகிற போதேயாகும். வேதாகமம் கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும், நீங்களும் அதேக் காரியத்தையேக் கூறுகிறீர்கள், அப்பொழுது அவர் அதைக் கூறியுள்ளவிதமாகவே சரியாக அது நிறைவேறுகிறது. அப்பொழுதே அது சரியாய் இருக்கிறது. நீங்களும், உங்களுடைய ஆவியும் அவரோடு ஒத்துப்போகிறது. அவர் வார்த்தையாய் இருக்கிறார். உங்களுடைய ஆவியானது அவர் கூறியுள்ளதோடு இணங்கும்பொழுதே, ஆவியானது அதனை அவருடைய வார்த்தையினூடாக வெளிப்படுத்துகிறது, அப்பொழுதே நீங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்கள். புரிகின்றதா? நீங்களோ கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டும், அதன்பின்னர் பண்டங்களை மாற்றிக்கொண்டும், அதைக் குறித்த மற்ற எல்லாவற்றையும் செய்துகொண்டுமிருக்கிறீர்கள். அதுவே எல்லாமுமான நிலையான வாழ்க்கை முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம். 272 ஜனங்கள் உலகப்பிரகாரமாக வாழக்கூடிய ஓர் இடத்தையே அவர்கள் கண்டறிந்து, பொருட்களைக் கடைகளில் கொள்முதல் செய்துகொண்டேயிருக்கின்றனர். பெந்தேகோஸ்தேக்களும் மற்ற எல்லாருமே அவ்வாறிருக்கின்றனர். பெந்தேகோஸ்தேக்களாகிய நீங்கள் பாப்டிஸ்டுகள் மற்றும் பிரஸ்பிடேரியன்களைக் குறித்து பரியாசம் செய்யாதீர்கள். அடுப்பில் வைக்கப்படும் பானையானது கொதிகெண்டியை அழுக்கடைந்தது என்றுக் கூறவே முடியாது. இல்லை ஐயா. உண்மையாகவே முடியாதே. அவை யாவும் ஒரே மாதிரியாயிருக்கின்றன. அவர்கள் ஒரு சபைக்குள்ளாகச் சேர்ந்துகொள்ளும்படிக்கு, ஒரு ஸ்தாபனத்திற்குள்ளாகச் சேர்ந்துகொள்ளும்படியான இடத்தைக் கண்டறியும்படிக்கும், அவர்கள் புகழ் பெற்றவர்களாய் இருக்கும்படிக்கும், நகரத்த்தில் நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாயிருக்கும்படிக்கும், நகராண்மைக் கழகத்தலைவர் போகிற சபையைக் கண்டறியவுமே விரும்புகின்றனர், எனவே அவர்கள், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி கொண்டிருப்பதிலேயே இருக்கின்றனர். அவர்கள் எந்த ஒரு சபைக்குச் சென்று மீண்டும் பிறக்க முடிந்தது. இப்பொழுது நான் நகரத்தில் நடைபெறும் மிகப்பெரியச் சபையையேக் கூறிக் கொண்டிருக்கிறேன். 273 இன்றைக்குச் சாலையில் உள்ள ஒரு சிறு ஸ்தாபனத்தை ஒரு சிறு சபையைச் சேர்ந்திருந்த ஜனங்களை நான் அறிவேன், ஆனால் அது மிகவும் சிறிய சபையாயிருந்தது. ஆகையால் அவர்கள், “எங்களுடைய—எங்களுடைய பிள்ளைகளும், நாங்களும் சற்று மேலான நல்ல அபிப்பிராயங்கொண்டவர்களாயிருக்க வேண்டும்” என்றுக் கூறி, அவர்கள் தங்களுடையக் கடிதத்தை ஒரு சபையிலிருந்து எடுத்துக்கொண்டு மற்றொன்றிற்கு, ஒரு பெரிய ஸ்தாபனத்திற்குச் சென்றுவிட்டனர். மற்றபடி இந்த மற்றொன்று அடித்தளத்தில் ஒரு திரைப்படக் காட்சியைக் கொண்டதாயிருந்தது. எனவே அவர்கள் பணத்தைப் பந்தயமாக வைத்து ஆடும் சூதாட்டம் மற்றும் அதைப் போன்றதான விளையாட்டுகளை விளையாடுகின்றனர் என்பதை அறிவீர்கள். இந்த விளையாட்டுகளையும் மற்றும் அதைப் போன்றதானவைகளையும் உடையவர்களாயிருக்கின்றனர். ஆகையால் அவர்கள் தங்களுடையப் பிள்ளைகளை அங்கே அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் அடித்தளத்தில் ஒரு கூட்டு சூதாட்ட விளையாட்டு மேஜையைப் பாருங்கள், அவர்கள் சூதாட்டம் விளையாடும்படி வைத்துள்ளனர் மற்றும் பொழுதுபோக்குச் சார்ந்த இன்ப விளையாட்டுகளையும், அதைப்போன்றக் காரியங்களையும் வைத்துள்ளனர். ஞாயிறு சிறுவர் வேதபாட வகுப்புகள் பத்து நிமிடம் மட்டுமே உடையதாயிருக்க, பின்னர் ஒரு காப்பி பருக இடைவேளை மற்றும் போதகர் வெளியே சென்று சில சிகெரேட்டுகளைப் புகைக்கும்படியான ஓர் இடைவேளை நேரத்தை அளிக்கின்றனர். ஓ, ஆம். அது உண்மை. நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருந்தாலொழிய நான் அதைப் பேசமாட்டேன். அது உண்மை. ஓ, நிச்சயமாகவே. பார்த்தீர்களா? 274 அவர்கள் தேவைப்படும் பொருட்களைக் கடையில் கொள்முதல் செய்வதிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சென்று, அவர்கள் வாழும்படி விரும்புகிற எந்தவிதமான வாழ்க்கையையும் வாழ்ந்து, அவர்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்து, இதற்குப் பின்னரும் இன்னும் நித்திய ஜீவன் உண்டு என்று வாக்களிக்கின்றனர், எனவே அவர்கள் அதற்காகவே பண்டங்களைக் கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றனர். 275 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் கடைக்குச் சென்று வாங்க விரும்பினால், கல்வாரிக்கு வாருங்கள். அதுவே அதனைத் தீர்த்து வைக்கிறது. உங்களுடைய தான் என்னும் அகங்கார அழுக்கிற்கு, உங்களுடையப் பாவங்களுக்கு மரித்து, மீண்டும் புதியப் பிறப்படையுங்கள். 276 “நீங்கள் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்புகூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்திலும் கூட இல்லை.” அதைத்தான் வேதம் கூறினது. அது உண்மை. நீங்களோ, “நான் பரிசுத்தத்தில் நம்பிக்கை வைப்பதில்லை”, என்றுக் கூறலாம். உங்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. 277 ஆனால் வேதம், “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிப்பதில்லையே” என்று கூறியுள்ளது. தேவன் பரிசுத்தமாயிருக்கிறார். தேவன் உங்களுக்குள் ஜீவிப்பாரேயானால், நீங்களும் கூட பரிசுத்தமாயிருப்பீர்கள். 278 நீங்கள் வெளியே இந்த விருந்துகளுக்குச் சென்று, நட்புக்காகச் சற்று மது அருந்த முடியுமா என்று எனக்குச் சொல்லுங்கள். அநேக பெந்தேகோஸ்துக்கள் அதைச் செய்கிறார்கள், இந்த விருந்துகளுக்கு வெளியே சென்று, அங்கே ஸ்திரீகளையும் அழைத்துக்கொண்டுப் போய், அந்த இடங்களில் தங்கியிருந்து, உங்களுடைய ஆடைகளை நீங்களே களைந்துவிட்டு, நீச்சல் உடைகளோடு உங்களுடையக் கணவன்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள் போன்றவர்கள் இருக்கும்போதே புருஷர்களுக்கு முன்பாக நீச்சல் குளத்தில் நீந்தச் செல்லுக்கிறீர்கள். பெந்தேகோஸ்தே ஜனங்களே நீச்சல் உடைகளில் வெளியேப் போய், உங்களை மணவாட்டியின் அங்கத்தினர் என்று அழைத்துக் கொள்ளுகிறீர்களா? கிறிஸ்துவின் மணவாட்டியோ அந்தக் காரியங்களைச் செய்கிறதில்லை. 279 ஓ, அவர் கடையில் பண்டங்களைக் கொள்முதல் செய்து கொள்வதிலிருந்து கொண்டே, நிச்சயமாகவே, சுலபமான வழியைச் சென்றடைந்து கொண்டே, இதற்குப்பின்னரும் நித்திய ஜீவன் உண்டென்று வாக்களிக்கின்றார். 280 அவர் உயிரோடிருக்கிறார் என்ற ஒரு ஜீவனுள்ள சாட்சியாகத் தேவனுடைய வார்த்தையானது உங்களுக்குள்ளாக இருந்து கொண்டு ஜீவித்துக் கொண்டிருந்தாலொழிய, நீங்கள் அதை உடையவர்களாய் இருக்கவே மாட்டீர்கள். ஓ, என்னே! “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காணவிரும்புகிறோம்”, ஓ! இந்தக் கோட்பாடுகளையல்ல, ஜனங்கள் இணைந்து உருவாக்கியிருக்கிற இந்தக் காரியங்களை அல்ல. “நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்”. 281 ஆனால் அவர் அவர்களுக்குத் தொலைந்து போய்விட்டார். ஹூ—ஹூ! ஏன்? அப்படியே ஒரு விநாடி இருங்கள். ஏன்? ஏன் அவர்களுக்கு அவர் தொலைந்துவிட்டார்? ஏன் மெத்தோடிஸ்டு மற்றும் பாப்டிஸ்டுக்கு அவர் தொலைந்துவிட்டார்? ஏன் அந்த ஸ்தாபனங்களுக்கு அவர் தொலைந்துவிட்டார்? காரணம் அவர்கள் தங்களுடையக் கோதுமை மணியானது கல்வாரியிலே விழுந்து, தங்களுடையக் கோட்பாட்டிற்கு மரித்து, வார்த்தையைப் பிறப்பிக்கும்படி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 282 ஆகையால் நாம் வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்பட்டு, ஆமென், கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டிகளாக மாற்றப்படுகிறோம். கிறிஸ்து தன்னைப் பின் தொடர்ந்ததாகக் கூறின அடையாளங்கள் அவர்களைப் பின் தொடரும். ஒவ்வொரு ஸ்திரீயும் அவளுடைய ஸ்தானத்திற்கு வரவேண்டும். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஸ்தானத்திற்கு வர வேண்டும். அப்பொழுது தேவனுடைய ஆவியானது அதனுடைய ஸ்தானத்திற்கு வரும், ஜீவனுள்ள தேவனுடையச் சபை கரைதிரையற்றதாயிருக்கும். நிச்சயமாக, ஆமென். ஆம், ஐயா. அந்த விதமாகவே அது செய்யப்படுகிறது. 283 அவர்களுடையக் கோதுமை மணிக்கு மரணமே இல்லை. அவர்கள் தங்களுடைய ஸ்தாபனத்தை விழவிடமாட்டார்கள். அவர்கள் அதை மரிக்க விடமாட்டார்கள். பாப்டிஸ்டு ஸ்தாபனமானது பாப்டிஸ்டு கோதுமை மணியை நிலத்தில் விழுந்து, அதை மரிக்கும்படிச் செய்தால்; மெத்தோடிஸ்டு கோதுமை மணியானது அதனுடையதை விழச்செய்யுமேயானால், அசெம்பளீஸ் ஆப் காட், இயேசுவின் நாம பெந்தேகோஸ்தேக்கள், ஒருத்துவம், திரித்துவம் மற்றும் வித்தியாசமான யாவுமே, சர்ச் ஆப் காட் மற்றும் இன்னும் உள்ள மற்ற அவர்கள் எல்லோருமே வார்த்தைக்குள்ளாக அந்தக் கோதுமை மணியை விழச்செய்தால், இந்த வார்த்தை நிலைத்திருக்கும்படிக்கு ஜீவனண்டை வந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது அவர்கள், “நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லையென்றால், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசியுங்கள், ஏனென்றால் அவைகள் என்னைக் குறித்து சாட்சிப்பகருகின்றன” என்று கூறுவார்கள். 284 கிரியைகள் என்றால் என்ன? இயேசு, “இந்தக் கிரியைகளோ, நான் செய்யும்படி தேவன் அருளின கிரியைகள்” என்றார். மேலும், “பிதாவானவர் என்னை அனுப்பினதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். அவருக்குள்ளிருந்து தேவன் செய்த அதேக் கிரியைகளோ அவரையும், பிதாவையும் ஒன்றாக்கினது. இயேசுவானவர் செய்த அதேக் கிரியைகளை உங்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியாகிய இயேசுவானவர், நீங்களும் அதேக் கிரியைகளைச் செய்யும்படிச் செய்வார். “நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” நிச்சயமாக. 285 தானியம்…மாட்டாது…அவர்கள் என்ன செய்தனர்? மரித்த அங்கத்தினர்கள் மாத்திரமே இருந்தனர், பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்திருந்தனர், கல்வியில் மரித்திருந்தனர், உலகத்தின் காரியங்களில் மரித்திருந்தனர். அது அவர்களுக்கு எண்ணப்படுகிறது. அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் மீண்டும் பிறக்கவில்லை. அந்தக் காரணத்தினால்தான் அடையாளங்கள் பின் தொடர முடியவில்லை. காரணம் ஏன்? மரித்த அங்கத்தினர்களாய் மட்டும் இருப்பதனாலேயாம். ஓர் ஊழியக்காரன் சில சபைகளில் போதகராயிருப்பதற்கு முன்னர் அவர் வேதத்தத்துவத்தில் ஒரு பாண்டித்தியம் பெற்று, இரு L.D.பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். அவர் ஒருகால் ஆங்கில மொழியின் அகர வரிசை எழுத்துகளை ABC- யைக் கூட அறியாதிருக்கலாம், அதாவது, “எப்பொழுதும் கிறிஸ்துவை விசுவாசிப்பது” என்பதை (always believe Christ) அறியாமலிருக்கலாம். அவன் கிறிஸ்துவை விசுவாசித்திருந்தால்…[சகோதரன் பிரான்ஹாம் சைகைக்காட்டுகிறார்—ஆசி.] 286 அன்றொரு நாள் யாரோ ஒரு நபர் என்னைப் பின் தொடர்ந்து வந்து, “நீர் ஏன் ஜனங்களை எப்பொழுதும் அவர்கள் உடை உடுத்துகிற விதத்தையும், அவர்கள் செய்கிறக் காரியங்களையுங் குறித்து அவர்களை இடித்துரைத்துச் சொல்லாமல், அவர்களை அப்படியே விட்டுவிடக்கூடாது? நல்லது, நீர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால்…” என்றுக் கூறினான். அவர்கள், “நீர் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறீர் என்று ஜனங்கள் கருதுகிறார்கள்” என்றார்கள். 287 அப்பொழுது நான், “அவர்கள் அதைக் கூறிவருகின்றனர் என்பதை நான் அறிவேன். நான் அவ்வாறு கூறுவதில்லை. ஆனால்”, என்று கூறி, மேலும் நான், “அவர்கள்—அவர்கள்—அவர்களே அதைக் கூறினர்” என்றேன். 288 அப்பொழுது அவன், “நல்லது, அவர்கள் உம்மை அவ்வாறு இருப்பதாக விசுவாசித்தால், பின்னை ஏன் நீர் அவர்களுக்குத் தரிசனங்களைக் காண்பது எப்படி என்றும், தேவனுக்கு முன்பாக சஞ்சரிப்பது எப்படி என்றும் போதிக்கக் கூடாது?” என்றுக் கூறினான். 289 அதற்கு நானோ, “அவர்களுக்கு மொழியின் முதல் எழுத்துக்களே தெரியாதிருக்குமாயின், நான் எப்படி அவர்களுக்கு இயற்கணிதத்தைக் கற்றுக்கொடுக்கப் போகிறேன்? அவர்கள் சிறுவர்களுக்குரிய விளையாட்டு முறைக் கல்விப் பள்ளியையே அறியாதிருப்பார்களாயின், தங்களை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும் என்று அறியாதிருப்பார்களாயின், எப்படிக் காணவேண்டும், செயல்பட வேண்டும், உடை உடுத்திக்கொள்ள வேண்டும், பண்பார்ந்தவர்களாய் இருக்க வேண்டும் என்று அறியாதிருப்பார்களாயின், நீர் எப்படி அவர்களுக்கு தீர்க்கதரிசனக் காரியங்களைக் கற்றுத்தரப் போகிறீர்?” என்று கேட்டேன். 290 இயேசு, “நீங்கள் இங்குள்ளக் காரியங்களைப் பூமிக்குரியக் காரியங்களை விசுவாசிக்கவில்லையென்றால், நான் உங்களுக்குச் சொல்லுகிறப் பரலோகக் காரியங்களை நீங்கள் எப்படி விசுவாசிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். நீங்களாகவே உங்களுக்கு செய்து கொள்ள முடிந்தக் காரியங்களை, இந்தக் காரியங்களைச் செய்வதை நிறுத்துங்கள். அதைச் செய்யாமலிருக்க முடியவில்லையே என்றால், ஜனங்களே, நீங்கள் எப்படி ஆவிக்குரியக் காரியங்களைக் கண்டறியப் போகிறீர்கள்? அது சரியல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] ஆம் ஐயா. அவர்களுடையக் கல்விக்கு மட்டுமே மரித்திருந்தனர். அவர் கல்விகற்றக் கூட்டத்தினரைப் பெற்றிருந்தனர். 291 இப்பொழுது இந்த ஒரு சில வார்த்தைகளை, இதைக் கூறுவதன் மூலம் நான் முடிக்கப்போகிறேன். என்னுடையக் கிறிஸ்துமஸ் செய்தியானது, நான் உங்களை இன்றிரவு சிலுவையண்டைச் சுட்டிக் காட்டுவதாயிருக்கட்டும் என்பதாயிருக்கிறது. ஆமென். நீங்கள், கோதுமை மணியாய் கிறிஸ்துவுக்குள் அங்கேயே விழுந்து, மரியுங்கள். அங்கேயே நீங்கள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அவருடைய வார்த்தையில் உள்ள அவருடைய ஜீவனைக் கண்டடைவீர்கள். அதுவே உங்களுக்கு என்னுடையக் கிறிஸ்துமஸ் செய்தியாய் இருக்கட்டும். நான் உங்களுக்கு ஒரு முன்னணையண்டைக்கு, ஒரு தொட்டிலண்டைக்கு, ஒரு சபையினண்டைக்கு, ஒரு ஸ்தாபனத்தினண்டைக்குச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்”, அப்பொழுது நான் உங்களை அவரண்டைச் சுட்டிக் காண்பிப்பேன். அவர் உங்களை அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலண்டைக்குச் சுட்டிக் காண்பிக்கிறார். நீங்கள் உங்களுடையச் சொந்தக் கோதுமை மணியை அங்கே உள்ளே விழச் செய்யுங்கள், அவருடைய வார்த்தையானது உங்களுக்குள் மெய்யானதாய் மாறட்டும், அப்பொழுது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்.” அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் ஜெபம் செய்வோமாக. 292 பரலோகப் பிதாவே, குறிக்கப்பட்டக் கால நேரம் விரைந்தோடி நீண்டிருந்தாலுங்கூடப் பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு மத்தியிலே அசைவாடுகிறாரே, நாளைய தினமானது நீர் உம்முடைய ஒரேப் பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பினீர் என்பதற்கு ஆராதனையின் நாளாய் இருப்பதாகக் கருதப்படுகிறது. நான் இன்றிரவு ஜனங்களுக்கு அவர் பிறந்திருந்த ஒரு முன்னணையச் சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கவில்லை, ஏனென்றால் அவர் அப்பொழுது ஒரு குழந்தையாய் இருந்தார். ஆனால் அவர் அவர்களுடைய இரட்சகராகும்படிக்கு, அதாவது அவர் அவர்களுடையத் தேவனாகும்படிக்கு, அவர்களுடைய—அவர்களுடைய—அவர்களுடைய—அவர்களுடைய இராஜவாகும்படிக்கு, அவர்களுடைய எல்லாவற்றிலும் எல்லாமாகும்படிக்கு அவர் பிறந்திருந்த நோக்கத்தையே அவர்களுக்குச் சுட்டிக்காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அதாவது அவர் எல்லா இடத்தையும் நிரப்புகிறவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்களாக, அவர்கள் அவரை அறிந்து கொள்வார்களாக, அவர் பெத்லகேமிலே துவங்கினவர் அல்லவென்றும், ஆனால் ஒருபோதும் ஒரு துவக்கம் என்பதே இல்லாமலிருந்தவர் என்றும், பூமியின்மேல் நின்று, “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று கூற முடிந்த அந்த ஒருவரான நித்தியத் தேவனை அறிந்து கொள்வார்களாக. 293 நான் ஒரு—ஒரு சீஷனைப்போல, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் அறிந்துள்ள மிகச் சிறந்த முறையில் செயல்பட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இருதயத்தில் பசிக் கொண்டிருந்த ஜனங்கள் உண்மையாயிருந்த சீஷர்களான பிலிப்பு, அந்திரேயா என்பவர்களிடத்தில் வந்தபோது, இவர்கள் அவர்களை கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்திற்குக் கொண்டு சென்றனர், அவரோ அவர்கள் அவரை அறிந்துகொள்ளும்படியாகவும், அவரைக் காணும்படியாகவும் நேரிடப்போவதாயிருந்த ஒரு மரணத்தையே அவர்களுக்குச் சுட்டிக் காண்பித்தார். 294 பிதாவே, இன்றிரவு, அதுபோலவே நான் அவர்களுக்குத் தேவகுமாரனை, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனை, ஒரு மானிட ரூபத்தைத் தெரிந்துகொண்டு, வாசஸ்தலமாக்கி, தன்னுடையப் பாத்திரத்தை மாற்றின, மகிமையில் இருந்து இறங்கின நித்தியத் தேவனுக்கு நேர்ந்த ஒரு கல்வாரியையே சுட்டிக் காண்பிக்கிறேன். நித்தியமானவர் ஒரு மானிடனாகி, தம்முடையக் கூடாரத்தை எங்களுக்கு மத்தியிலே அமைத்து, ஓர் இனத்தான் மீட்பராகும்படிக்கு எங்களைச் சிருஷ்டித்த ஒரே வல்லமையுள்ளத் தேவனின் ஞாபகத்திற்கு எங்களைத் திரும்பவுங்கொண்டு வரும்படிக்கு, எங்களில் ஒருவரானாரே. 295 அவர் கல்வாரியிலே அங்கே மரித்தார். நாங்களும் அங்கே அவரோடு மரிக்க வேண்டும். அவர் தேவ குமாரனாக மரித்தபடியால், தேவகுமாரர்களாகும்படிக்கு நாங்களுங்கூட மரிக்க வேண்டுமே. எங்களுடையக் கோதுமை மணியானது அவரோடுகூட நிலத்திற்குள் விழுந்து, எங்களுடைய ஜீவியங்கள் மரித்து அவரில் மறைக்கப்படுவதாக. ஓ, அதன்பின்னர் அவருடைய உயிர்த்தெழுதலில் எழுப்பப்பட்டு, அவருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய, அவர் வாக்களித்தபடியே, அவருக்குள் இருந்த அந்த அதே மாறாத அவருடையத் தேவன் கடைசி நாட்களில் வார்தையின் வெளிப்படுத்துதலைக் கொண்ட சபையைப் பிறப்பிப்பாராக. 296 தேவனே, அவர் தேவனாயிருக்கிறார் என்று காண்பிக்கும்படியாக, அதனுடைய ஒவ்வொரு துணுக்கையும் அவர் ரூபகாரப்படுத்தியிருக்கிறார் என்பதை காண்பதற்கு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளுகிறார். மகத்தான அக்கினி ஸ்தம்பம் இன்னமும் எங்கள் மத்தியில் இருக்கிறது. அவர் வாக்களித்த மகத்தான அடையாளங்களும், அதிசயங்களும் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றதே. 297 ஓ தேவனே, அவரைப் பூமிக்குக் கொண்டுவந்த நோக்கத்திற்காகவும், எங்களுடைய ஜீவியங்களில் அவருடைய ஆவியை உடைமையாகப் பெற்றுக் கொள்ள எங்களுக்கு உண்டாயிருக்கிற ஒரு உரிமைக்காகவும் இன்றிரவு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அதுவே எங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறது, அவருடைய வார்த்தை எங்களுடைய சொந்தச் சரீரங்களில் மாம்சமாக்கப்படுகிறது. 298 கர்த்தாவே, நாங்கள் எங்களையே இன்றிரவு ஒப்புவிக்கிறோம், இந்த உலகத்தின் ஒவ்வொரு காரியத்திற்கும், நாங்கள் இந்த உலகத்தின் காரியங்களுக்கு மரித்திருக்கும்படி முற்றிலுமாய் ஒப்புவிக்கிறோம்; வருகின்றதான இந்த வருடத்தில் புறப்பட்டுச் செல்லும்படிக்கு, வருடத்தின் முடிவுவரை முழுவதுமாக அல்லது கர்த்தராகிய இயேசுவைச் சென்றடையும்வரை இரத்தத்தினூடாகவும், வார்த்தையின் தண்ணீரினாலும் கழுவப்பட்டு, கிறிஸ்துவுக்கானச் சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டத் தேவனுடையப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாத்திரங்களாய், புதியதாய் இருக்கும்படிக்கு, கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய ஜீவனைப் பெற்றுக்கொள்ள மீண்டும் எழுவோமாக. கர்த்தாவே இதை அருளும். நாங்கள் எங்களையே உம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்புவிக்கிறோம். ஆமென். உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி; எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. நாம் அதைப் பாடுகையில், நாம் நம்முடையக் கரங்களையும், நம்முடைய இருதயங்களையும் உயர்த்துவோமாக. உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி; எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. 299 இப்பொழுது நாம் நம்முடையத் தலைகளையும், நம்முடைய இருதயங்களையும் தாழ்த்தி, அதை அமைதியாகப் பாடுவோமாக; ஆனால் நீங்கள் அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போன்று, இப்பொழுது அவரிடத்தில் பாடுங்கள். உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. 300 அதுவே உங்களுடையச் சாட்சியாயிருந்தால், இப்பொழுதே உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். பின்னர், “உம்மண்டை நெருங்கியிருப்பேனாக! உண்மையாகவே கர்த்தாவே, சபையினிடத்தில் அல்ல. உம்மண்டையே! ஒரு கோட்பாட்டினிடத்தில் அல்ல, ஆனால் உம்மண்டையே, ஒரு மாட்டுத் தொழுவத்தண்டையோ அல்லது ஒரு தொட்டிலண்டையோ அல்ல, உம்மண்டையே! ஓ, தேவனே, நான் உம்மண்டை நெருங்கியிருக்கும்படியாய் உம்முடைய வார்த்தையானது எனக்குள்ளாக இருக்கட்டும்” என்றுக் கூறுங்கள். எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. 301 இப்பொழுது நாம் மீண்டும் பாடுகையில் யாரோ ஒருவருடையக் கரத்தைப் பற்றிப்பிடித்து, “கிறிஸ்தவரே, நான் உங்களுக்காக ஜெபிப்பேன்” என்றுக் கூறுங்கள். நீங்கள் அவருடையக் கரத்தை பற்றிப் பிடிக்கும் போது, “கிறிஸ்தவரே, நான் உங்களுக்காக ஜெபிப்பேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள்” என்று அதையேக் கூறுங்கள். உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி; எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. இப்பொழுது நீங்கள் உங்களுடையத் தலைகளை வணங்கியே இருங்கள். மனிதர்களை அவர்களுடைய பாவத்திலிருந்து இரட்சிக்க ஒரு பாலகன் வெகுகாலத்திற்கு முன்னர் ஒரு முன்னணையில் பிறந்தார் என்பதையும், அது அவ்வளவு உண்மையானது என்பதையும் நான் அறிவேன். யோவான் அவரைக் கரையிலே சதாகாலங்களிலும்உயிரோடிருக்கிற ஆட்டுக்குடியானவரைக் கண்டான், ஓ, அது கல்வாரியில் சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவே. உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி; எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. 302 நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவர் அற்புதமானவரல்லவா? [“ஆமென்.”] முடவரை நடக்கச் செய்த, ஊமையரைப் பேசச் செய்த அந்த வல்லமை சமுத்திரத்தின் மேல் அன்போடு உரைக்கப்பட்டது; குருடரைக் காணும்படிச் செய்ததோ, அது அந்த கலிலேய மனிதரின் இரக்கமாய் மாத்திரமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன். இப்பொழுது, உம்மண்டை நெருங்கி, உம்மண்டை நெருங்கி; எப்போதுமே ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரையில், இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. 303 அதுதான் இன்றிரவு உங்களுடைய வாஞ்சையா? அதுவாயிருந்தால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, எவ்வளவு அற்புதமானதாயுள்ளது! எப்போதும் ஜீவனுடைய யாத்திரிகனாய் யாத்திரை…நாம் யாத்திரிகர்களாயிருக்கிறோம். இரட்சகரே, நான் உம்மோடே நடப்பேனாக. 304 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரக. சரியாக ஒரு “மகிழ்வார்ந்த” கிறிஸ்துமஸ் என்றல்ல, ஆனால் தேவனுடைய கிறிஸ்துமஸ் ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் இருப்பதாக. கல்வாரியின் கிறிஸ்துவானவர் உங்களை தமக்குள்ளே மறைத்து, உங்களை மூடி, அவருடைய வார்த்தையானது உங்களுக்குள் மாம்சமாக்கப்படும் வரையில் அவருடைய வார்த்தைக்குள் உங்களை முழுவதுமாய்ச் சுற்றிப்போர்த்தி, உங்களை முழுவதுமாய் மறைத்துக் கொள்ளுவாராக என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது போதகர் சகோதரன் நெவில்.